சீனாவில் இருக்கும் சிறைக் கைதிகளையும் விட்டு வைக்காத கரோனா வைரஸ்..!!

   பெய்ஜிங்: சீனாவையே புரட்டிப் போட்டிருக்கும் கரோனா வைரஸ், நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 400 கைதிகளுக்கும் பரவியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   ரென்சாங் சிறையில் இருக்கும் 200 சிறைக் கைதிகளுக்கும், 7 காவலர்களுக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஷான்டாங் மாகாண சுகாதாரத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.   நாங்கள் எடுத்த முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு திட்டங்கள் பெரிதாக பலனளிக்கவில்லை. சிறைக் கைதிகள் பலருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு நாள்தோறும் பதிவாகிக் கொண்டே இருக்கிறது […]

அடுத்த தலைமுறைக்கு தாய்மொழியைச் சேர்ப்போம்!

 உலகில் மனித இனம் தோன்றிய காலத்திலேயே தோன்றியது மொழி. மனிதனின் முதல் அறிவுப்பூர்வமான செயல்பாடே மொழிதான். அதன்மூலமாகவே அவனது தகவல் தொடர்புகள் மேம்பட்டு நாகரிக வாழ்க்கையை அவனால் அமைக்க முடிந்தது.    ஒருவன் பிறக்கும்போது அவனது பெற்றோரிடமிருந்து கிடைக்கும் பூர்வீகச் சொத்து அவனது தாய்மொழி. பேசுதல், புரிந்துகொள்ளுதல், எழுதுதல் ஆகியவை மொழியின் செயல்பாடுகள். எந்த ஒரு மனிதனும் அவனது தாய்மொழியில் மட்டுமே இந்த மூன்று செயல்பாடுகளிலும் திறமை வாய்ந்தவனாக இருக்க முடியும். அதைக் கொண்டே அவனது வளர்ச்சி […]

ஹைட்ரோகாா்பன் மீத்தேன் திட்டங்களுக்கு முழுமையான தடை வேண்டும்:

வைகோ:     சென்னை: காவிரி படுகை மாவட்டங்களில் ஹைட்ரோகாா்பன், மீத்தேன், பெட்ரோலிய ரசாயன ஆலை திட்டங்களை முழுமையாக தடை செய்தால் மட்டுமே பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு செயல் வடிவம் பெறும் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தெரிவித்துள்ளாா்.   இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட முன் வடிவு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம் […]

ஆந்திரத்தில் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனை முறைகேடு:

    விஜயவாடா: மருந்துகள் வாங்குவது, மருத்துவ உபகரணங்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், பரிசோதனைக் கூடக் கருவிகள் போன்றவை வாங்கியதில் ரூ.404 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில், ஆதாயம் பெரும் நோக்கத்தோடு, இயக்குநர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.    இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு மருந்து உள்ளிட்டவை வாங்குவதற்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாதது குறித்து மருத்துவக் காப்பீட்டுச் சேவையின் மூன்று […]

இந்தியன் 2 விபத்து: கிரேன் ஆபரேட்டர் கைது…!

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜனைக் காவல்துறை கைது செய்துள்ளது:     லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்தது.    புதன்கிழமை இரவு அந்தத் திரைப்படத்துக்கான காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக அங்கு உயரமான […]

மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்… – ஏழுமலை வெங்கடேசன்

மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்…  முதல் மரியாதை படம். சிவாஜி, இளையராஜா, பாரதிராஜா ஆகிய மூவரும் போட்டிபோட்டுக்கொண்டு அமைதியாக வருடிக்கொடுத்த நேரத்தில் அந்த மூவேந்தர்களுக்கு இணையாக நின்று விளையாடிய இன்னொரு மேஜிக் மலேசியா வாசுதேவனின் குரல்.. பூங்ங்..காற்று திரும்புமா, என் பாட்டை விரும்புமா? என்று கேட்ட அந்த குரலில்தான் எத்தனை வகையான ஏக்கத்தில் கலவைகள்? உள்ள அழுகிறேன் வெளியே சிரிக்கறேன்.. நல்லவேஷம்தான் வெளுத்து வாங்கறேன்.. இரண்டாவது வரி எவ்வளவு நூறு சதவீத உண்மை.. பின்னணி பாடகன் என்ற […]

இன்றைய ராசி பலன்கள் – 21-02-2020 வெள்ளிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்களை விரைவில் முடிக்க முயல்வீர்கள். தொழிலில் செல்வாக்கு மற்றும் மேன்மையான சூழல் உண்டாகும். தாய்வழி  உறவுகளால்  மனமகிழ்ச்சி அடைவீர்கள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும். பரணி : ஆலோசனைகள் கிடைக்கும். கிருத்திகை : மகிழ்ச்சியான நாள். ————————————— ரிஷபம் அறச்செயல்களால் கீர்த்தி உண்டாகும். தந்தையிடம் பொறுமையாக […]