23 வயதில் மரணமடைந்த இயக்குநர் ராஜ் கபூரின் மகன்..!

இயக்குநர் ராஜ் கபூரின் மகன் உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 23.   தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குநரான அறிமுகமான ராஜ் கபூர் – அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே, உத்தமராசா, சமஸ்தானம் போன்ற படங்களை இயக்கியதோடு பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். 

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்….

 மருத்துவர்களின் லஞ்சம் மற்றும் அலட்சியப் போக்கை கண்டித்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியை மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.   தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் உண்மை தன்மை சான்றிதழ் வழங்கப்படும்.    இந்த நிலையில், சான்றிதழ் வழங்குவதில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கு மற்றும் லஞ்சம் பெறுவதைக் கண்டித்து, முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில், திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐபிஎல் 2020 அட்டவணை: அதிகாரபூர்வமாக வெளியீடு!

2020 ஐபிஎல் போட்டியின் அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது:    இந்த வருட ஐபிஎல் போட்டி, மார்ச் 29 அன்று தொடங்குகிறது. மும்பையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மே 17 அன்று கடைசி லீக் போட்டியில் பெங்களூர் – மும்பை அணிகள் மோதுகின்றன.     57 நாள்கள் நடைபெறும் ஐபிஎல் போட்டியின் அட்டவணையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார். இறுதிச்சுற்று ஆட்டம் மே 24 அன்று […]

சமையல் எரிவாயு உருளையை பாடையில் ஏந்தி கோவை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    விலை உயர்வை திடீரென உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து சமையல் எரிவாயு உருளையைப் பாடையில் ஏந்தியபடி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.    சமையல் எரிவாயு உருளை விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.   இந்த நிலையில்,கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் […]

சென்னையில் 15 இடங்களில் வருகிறது புதிய மேம்பாலங்கள்: எங்கெங்கு தெரியுமா?

சென்னை: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையில் 15 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.     ரூ.1,500 கோடிச் செலவில், சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் 15 இடங்களில் புதிய மேம்பாலங்களைக் கட்டுவது தொடர்பாக தமிழக அரசிடம் சென்னை மாநகராட்சி பரிந்துரையை முன்வைத்துள்ளது.     தற்போது திமுக தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலின், சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்த போதுதான், சென்னையின் பல்வேறு இடங்களில் சென்னை மாநகராட்சி தரப்பில் […]

இன்றைய முக்கிய செய்திகள்

12ம் வகுப்பு பாடத்திட்டத்தை படித்தாலே நீட் தேர்வில், 80 சதவீதம் தேர்ச்சி அடையலாம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நீட் தேர்விற்காக அரசு சார்பில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர், நீட் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் அளிக்கக்கூடிய வகையில் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். கொரோனா வைரஸ் பாதிப்பு – பலி எண்ணிக்கை 1,868 ஆக உயர்வு “விரைவில் நகரும் ரேஷன் கடைகள்” – […]

முதலாவது விமான அஞ்சல் சேவை

முதலாவது அதிகாரப்பூர்வமான விமான அஞ்சல் சேவை பிப்ரவரி 18, 1911 அன்று இந்தியாவின் அலகாபாத்தில் ஆரம்பமானது. அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தது பிரிட்டிஷார், விமானப் பயண சாகசத்தை சாத்தியமாக்கியது அமெரிக்கர்கள் என்றாலும் விமானத்தில் அஞ்சல் சேவையைத் தொடங்கியவர்கள் இந்தியர்கள் என்றால் வியப்பாக இல்லையா?  இப்போதைய உத்தரப் பிரதேசத்தின் அலாகாபாத் நகரில்தான் அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது.  அலகாபாத் புறநகரில் உருவாக்கப்பட்டிருந்த கண்காட்சித் திடலிலிருந்து…  1911-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதியன்று மாலை 5.30 மணிக்கு 6500 கடிதங்கள் அடங்கிய அஞ்சல் […]

இன்றைய ராசி பலன்கள் – 18-02-2020 – செவ்வாய்க்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை :  கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் :  மஞ்சள் நிறம் அஸ்வினி : செல்வாக்கு அதிகரிக்கும்.  பரணி : உயர்வு உண்டாகும். கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும். ————————————— ரிஷபம் நிதானத்துடன் செயல்படவேண்டிய […]