டிக் டாக்கால் சீரழிந்த குடும்பம்..!

டிக் டாக்கால் சீரழிந்த குடும்பம்..! மனைவியின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொன்ற கொடூர கணவன்..! கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இருக்கிறது காடாம்புலியூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் குமரவேல்(26). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குமரவேல் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு […]

சிம்ரன் வெளியிட்ட காதல் பாடல்!

ஒரே நாளில் ஓஹோனு ஓடிய சிம்ரன் வெளியிட்ட காதல் பாடல்! மீண்டும் இடையழயில் ரசிகர்களை மயக்கும் டான்ஸ் வீடியோ..! 90 களில், நடிகை சிம்ரனின் நடிப்பையும், அவருடைய நடனத்தையும் பார்த்து வியக்காத, ரசிக்காத… ரசிகர்களே இல்லை. விஜய், அஜித், விஜயகாந்த், என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கடந்த வருடம் தான் நிறைவேறியது. இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், தலைவர் செம்ம ஸ்டைலிஷாக நடித்திருந்த, ‘பேட்ட’ படத்தில் […]

கம்பாலா வீரர் ஸ்ரீநிவாச கவுடா: மத்திய அரசின் வாய்ப்பை மறுத்தது ஏன்? – இதுதான் காரணம்

எருது பந்தயத்தில் அதிவேகமாக ஓடி பலரது கவனத்தையும் சமீபத்தில் ஈர்த்தார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஸ்ரீநிவாச கவுடா. ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்ற ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட் உடன் ஒப்பிட்டு புகழப்பட்டு வருகிறார். கர்நாடகாவில் மிகவும் பிரபலமான ‘கம்பாலா’ என்று அழைக்கப்படும் எருமைப் பந்தயத்தில் 142 மீட்டர் தூரத்தை 13.42 நொடிகளிலேயே 28 வயதாகும் ஸ்ரீனிவாச கௌடா கடந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.“எனது பள்ளிக் காலத்திலிருந்தே கம்பாலா பந்தயங்களைப் பார்த்து வந்துள்ளேன். அதனால் எனக்கும் இதில் […]

ஏ பி டி வில்லியர்ஸ்: மிஸ்டர் 360 டிகிரி குறித்த 10 தகவல்கள்

1. உலக அளவில் தலை சிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவராக கருதப்படுபவர் 35 வயதாகும் ஏ பி டி வில்லியர்ஸ். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் சரி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் சரி இவரது சராசரி 50 ரன்களுக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.  2. வலது கை பேட்ஸ்மேனான டி வில்லியர்ஸை மிஸ்டர் 360 டிகிரி என கிரிக்கெட் ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள்.  தான் விளையாடிய காலகட்டத்தில் தலைசிறந்த பந்துவீச்சாளர்களாக கருதப்பட்ட வீரர்களின் பந்துகளை மிக லாவகமாக சிக்ஸர்கள் விரட்டியவர்.3. […]

மலேசியப் பிரதமர் மகாதீர்: 94 வயதில் மகளுடன் நடனமாடி அசத்தினார்

94 வயதான மகாதீர், மிக நளினமாக நடனமாடியதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மலேசியப் பிரதமரின் மகள் மரீனா மகாதீர் ஏற்பாட்டில், தொண்டு ஊழியத்துக்காக நிதி திரட்டும் வகையில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் தனது மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மாவுடன் (Siti Hasmah) கலந்து கொண்டார் மகாதீர். அப்போது மகளின் அழைப்பை ஏற்று அவருடன் நடனமாடினார். இந்நிகழ்விற்கு மூத்த அரசு அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள், துணைத் தூதர்கள் பலர் வந்திருந்தனர். அவர்கள் கைதட்டிப் பாராட்ட, மகள் மரீனாவுடன் இணைந்து நளினமான […]

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தடுப்புக் காவல் மார்ச்-12ல் முடிவடைகிறது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிரான தடுப்புக் காவல் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனு. தமிழக அரசின் மேல்முறையீடு மனுக்களை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கான தடுப்புக் காவல் மார்ச்-12ல் முடிவடைகிறது.  ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இன்றைய முக்கிய செய்திகள்

டெல்லி என்கவுன்டர்: இருவர் சுட்டுக்கொலை. பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை. பிரகலாதபூர் பகுதியில் அதிகாலை என்கவுன்ட்டர் நடைபெற்றதாக டெல்லி காவல்துறை தகவல். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில், 4வது நாளாக போராட்டம். மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடல் பகுதியிலும், 4வது நாளாக போராட்டம் தொடர்கிறது. சாலை விபத்தில், மூன்று பேர் உயிரிழப்பு. தென்காசி: வாசுதேவநல்லூர் அருகே கார் மீது ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதி […]

வண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம்,

வண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம்! கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது – முதலமைச்சர்! சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கம்!இயற்கையாக உயிரிழந்த ஒருவர் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு இரவு போராட்டம் நடத்தப்பட்டது.போராட்டக்காரர்களை அழைத்து பேசியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெற்று வருகிறது – எடப்பாடி பழனிசாமி! முதல்வர் பரபரப்பு பேச்சு! முதியவர் இறந்ததாக மாநிலம் […]

இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று கூடும் தமிழக சட்டப்பேரவை

இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று கூடும் தமிழக சட்டப்பேரவையில், நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்பு இன்று மீண்டும் கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தின்போது, முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு […]

பெட்ரோல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.73ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.68.32 ஆகவும் உள்ளது.