யூடியூப் தொடங்கப்பட்ட தினம் இன்று (2005).

பிப்ரவரி 14 யூடியூப் தொடங்கப்பட்ட தினம் இன்று (2005). (You Tube) கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும்.  இந்த இணையத்தளத்தில் பயனர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும்.  யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன.  பிப்ரவரி 2005-ல் பேபால் நிறுவனத்தில் பணிபுரிந்த சாட் ஹர்லி, ஸ்டீவ் சென், ஜாவேத் கரீம் ஆகிய மூன்று பேர் இணைந்து இந்த இணையதளத்தைத் தொடங்கினர்.சாட் ஹர்லி பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் […]

பிப்.,14ல், கோவையை குலுக்கிய பயங்கரம்!

உலகம் முழுவதும் மகிழ்வுடன் காதலர் தினமாக கொண்டாடும் பிப்.,14., கோவை மக்களை பொறுத்தவரை பல ஆண்டுகளாக கறுப்பு தினமாகவே இருந்து வருகிறது. 1998 ம் ஆண்டு பிப்.,14 அன்று பல இடங்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் கோவை நகரையே உலுக்கியது. இந்த பயங்கர தாக்குதலில் 58 பேர் உயிரிழந்தனர். 252 பேர் படுகாயம் அடைந்தனர். கோடிக்கணக்கில் பொருட் சேதம் ஏற்பட்டது. இந்த தொடர் கொண்டு வெடிப்பு, உலகத்தின் கவனத்தை கோவை பக்கம் திருப்பியது.அப்போதைய லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக […]

புல்வாமா தாக்குதல் நினைவு தினம் இன்று…

கடந்த 1989க்கு பிறகு 2019 பிப்., 14 மாலை 3.15 மணிக்கு காஷ்மீரில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற கான்வாய் மீது, சொகுசு காரில் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, தனது காரை மோதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது இந்தியாவையும், பாதுகாப்பு படையினரையும் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலகோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. […]

மத்திய அரசின் வரி வருவாய் ஒதுக்கீடு

மத்திய அரசின் வரி வருவாய் ஒதுக்கீடு ₨7,586 கோடி குறைந்துள்ளது. வரும் ஆண்டில் நிதி பற்றாக்குறை சாதகமான நிலை அடையும் – நிதித்துறை செயலர். கூடுதலாக 35,000 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க திட்டம் – நிதித்துறை செயலர். பட்ஜெட்டில் கடந்த ஆண்டை விட 26% கூடுதலாக நிதி ஒதுக்கீடு. சாலைகள், பாசன வசதி, மின் திட்டங்கள், குடிநீர் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு – நிதித்துறை செயலர். நிதி நெருக்கடி இருந்தாலும், வளர்ச்சியை நோக்கி தமிழக […]

நான் சிரித்தால்: சினிமா விமர்சனம்

அறிமுக இயக்குனர் ராணா, தான் ஏற்கனவே குறும்படமாக எடுத்து, பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கெக்க பிக்க’ படத்தை இப்போது முழு நீள படமாக உருவாக்கியிருக்கிறார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் காந்திக்கு (ஆதி) ஒரு விசித்திரமான பிரச்சனை. ஏதாவது துக்கமோ, பிரச்சனையோ ஏற்பட்டால் தாங்கமுடியாமல் சிரிப்பு வந்துவிடும். இந்த நிலையில், அவர் தனது பட்டப் படிப்பையே முடிக்காததால், ஐடி நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்படுகிறார். இதனால், அவரது காதலும் சிக்கலுக்குள்ளாகிறது. இதற்கிடையில், சக்கரை (ரவி மரியா) – தில்லிபாபு (கே.எஸ். […]

சவரன் விலை எவ்வளவு ரூபாய் தெரியுமா..?

சரசரவென தங்கம் விலை குறைவு..! சவரன் விலை எவ்வளவு ரூபாய் தெரியுமா..? தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.5 குறைந்து 3884.00 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சவரன் விலை சில சமயங்களில் 31 ஆயிரத்தை தாண்டியும், சில சமயங்களில் 32 ஆயிரத்தை நெருங்கும் நிலையிலும் இருப்பதால் இனி வரும் காலங்களில் தங்கம் வாங்குவது என்பது மிக பெரிய சவாலாக […]

ஐபிஎல் 2020

ஐபிஎல் 2020: புதிய லோகோவை வெளியிட்டது ஆர்சிபி.. வீடியோ ஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதுவரை நடந்த 12 சீசன்களில் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத 3 அணிகளில் ஆர்சிபி அணியும் ஒன்று. விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய தலைசிறந்த வீரர்கள் அணியில் இருந்தும் கூட, அந்த அணியின் தவறான அணுகுமுறையால் இதுவரை கோப்பையை வெல்ல முடியவில்லை. எனவே வரும் சீசனில் முதல் முறையாக ஐபிஎல் டைட்டிலை வெல்லும் […]

விரைவில் தனிச்சட்டம் இயற்றப்படும் – அமைச்சர் ஜெயக்குமார்

சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக விரைவில் தனிச்சட்டம் இயற்றப்படும் – அமைச்சர் ஜெயக்குமார். முதல்வரின் அறிவிப்புக்கு கிடைக்கும் வரவேற்பினை பொறுக்க முடியாமல் ஸ்டாலின் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். 1996ல் ராஜஸ்தானில் மீத்தேன் கண்டுபிடிக்கப்பட்ட போது அப்போதைய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் டி.ஆர்.பாலு அதை தமிழகத்தில் செயல்படுத்த முடிவெடுத்தார். 2010-ல் மத்திய அரசிடம் மீத்தேன் திட்டத்திற்கான ஒப்புதலை பெற்று, 2011ல் ஆய்வு பணிகளுக்கு அனுமதி அளித்த‌து திமுக அரசு. திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தான் மீத்தேன் ஆய்வு […]

கணினி வழித்தேர்வு பிப்.14, 15, 16

2018-19ம் ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கணினி வழித்தேர்வு பிப்.14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு. தேர்வுக்கு பயிற்சி செய்யும் வகையில் வரும் 7ம் தேதி முதல் இணையதளத்தில் பயிற்சி தேர்வுகள் பதிவேற்றப்படும் – ஆசிரியர் தேர்வு வாரியம். வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை. தேர்வு வாரியத்தின், 24 விதிமுறைகளையும் ஏற்பதாக ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஹால் டிக்கெட் பெற முடியும்.போட்டித்தேர்வு முறைகேடுகளை […]

அன்றும்… இன்றும் 13.02.2020

உலக வானொலி நாள் (World Radio Day) ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் […]