மோர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகுக்கும்தான்!

   மிகவும் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய மோர் உடல் சூட்டை தணிக்கும் என்பதுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, அழகுக்கும் மோர் பல்வேறு வகைகளில் பயன்படுகிறது.    வழக்கமாக கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ளவும், உடல்நிலையை சீராக வைத்துக் கொள்ளவும் மோர் எடுத்துக்கொள்கிறோம். உடல் சூட்டை தணிப்பது மட்டுமின்றி, நல்ல செரிமானத்திற்கும், தோல் நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளவும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்கவும், வெயிலினால் சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கவும், […]

இந்துஸ்தான் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி …

   இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மொத்த காலியிடங்கள்: 161 துறைவாரியான காலியிடங்கள்:1. மைன்ஸ் – 602. எலக்ட்ரீசியன் – 303. பிட்டர் – 254. வெல்டர் -155. மெக்கானிக் டீசல் -10  தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 28.1.2020 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.   […]

திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடவசதி குறித்து பரிசீலனை:

   திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடவசதி அளிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.     இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துவதில் என்ன அரசியல் இருக்கிறது என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும்’ என்றார்.  பின்னர், திரையரங்குகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி இடவசதி அளிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகக் கூறினார்.      முன்னதாக, பத்திரிகையாளர் நல […]

தவறான திசையில் வந்தால் டயரை பங்சராக்கும் தொழில்நுட்பம் புவனேஸ்வரில் அறிமுகம்

    புவனேஸ்வரம்: தவறான திசையில் வாகனத்தை ஓட்டி வந்தால் டயரை பங்சராக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது என்று புவனேஸ்வர் காவல் ஆணையம் முடிவு செய்துள்ளது. முதல் முறையாக இந்த தொழில்நுட்பம் புவனேஸ்வரில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.    இந்த திட்டத்தின்படி, சாலைகளில் வேகத் தடுப்பு போன்று ஸ்பைக் பேரியர்கள் பொருத்தப்படும். இது எதிர்  அல்லது தவறான திசையில் வரும் வாகனங்களின் டயர்களை கிழித்து பங்சராக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.   சோதனை முயற்சியாக எஸ்பிளனேட் ஒன் மால் பகுதியில் இந்த டையர் […]

பாகிஸ்தானில் பயிற்சி ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது….

பாகிஸ்தானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி காயமடைந்தார்.     பாகிஸ்தானின் ஷார்கோட் மாவட்டம் அருகே ராணுவ பயிற்சி விமானம் இன்று திடீரென விழுந்து நொறுங்கியது. இதில் விமானி காயத்துடன் உயர் தப்பினார். விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.  எனினும் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

HOT NEWS

திருஈங்கோய்மலை அருகே விபத்தில் சிக்கிய வேன் கேஸ் மூலம் இயங்குவது என்பதால் தீப்பிடித்து எரிந்தது. தமிழக அரசு மது விலை உயர்த்தியதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2500 கோடி வருவாய் கிடைக்கும் – அமைச்சர் தங்கமணி. குரூப் 4 தேர்வில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் தலா ரூ. 10 லட்சம் லஞ்சம் கொடுத்தனர் ராஜ், அபிநயா, சத்தியா, ஸ்ரீகாந்த் ஆகியோர் தலா 10 லட்சம் ரூபாய் கொடுத்தனர்  சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் சித்தாண்டி வாக்குமூலம் அளித்ததாக தகவல்  சிவகங்கை சி.பி.சி.ஐ.டி., எஸ்.ஐ தங்கமணி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு விசாரணை  இன்று இரவுக்குள் பலர் சிக்குவார் என சி.பி.சி.ஐ.டி போலீசார் வட்டாரங்கள் தகவல். டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக பத்திரப் பதிவுத்துறை ஊழியர்கள் ஆறு பேர் பணியிடை நீக்கம்.பத்திரப்பதிவு உதவியாளருக்கான ஜெயராணி, வேல்முருகன், சுதா ஞானசம்பந்தம், வடிவு, ஆனந்தன் ஆகியோர் சஸ்பெண்ட்.   திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், 250 ரூபாய் கட்டண 

குழந்தை பிறப்பிற்கு பின் தா​யைப்​ போல​வே தந்​தைக்கு ஊதியத்துடன் கூடிய விடுமு​றை

குழந்தை பிறப்பிற்கு பின் தாய்க்கு அளிக்கப்படுவது போலவே தந்தைக்கும் 164 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என பின்லாந்து அரசு அறிவித்துள்ளது.  பொதுவாக குழந்தைகள் வளர்ப்பு என்றாலே எல்லா பொறுப்புகளும் பெண்களுக்குத்தான் என்ற எண்ணம் உண்டு. ஆனால் இந்த எண்ணத்தை உடைத்திருக்கிறது பின்லாந்து அரசு. பின்லாந்தில், முற்றிலும் பெண்களை தலைமையாக கொண்ட கட்சிகளின் கூட்டணி ஆள்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 34 வயதான சன்னா மரின் பின்லாந்து பிரதமராக பதவியேற்றார். சில வாரங்களுக்கு முன்பு உலக […]

300 ரூபாய் மோசடியில் 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை காஞ்சிபுரத்தில் ருசிகரம் !

வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா. வயது முதிர்ந்தவரான இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டிசத்திரத்தில் நடைபெறும் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்துவந்தார். கடந்த 2015-ல் பாலுசெட்டி சத்திரம் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது காஞ்சிபுரம், சேதுராயன் தெருவைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் அந்த மூதாட்டியிடம் 300 ரூபாய்க்குக் காய்கறிகளை வாங்கினார்   அந்த மூதாட்டியிடம் மூன்று 100 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அவர் சென்றபிறகுதான், `அந்த ரூபாய் நோட்டுகள் […]