தர்க்கசாஸ்திரம் – 2 | ஆரூர் தமிழ்நாடன்

அத்தியாயம் -2 ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! ——————————————- காட்டன் புடவையில் பளீரென வெளியே புறப்பட்ட அகிலாவை அடுக்களையில் இருந்தபடியே ரசித்தார் அம்மா காவேரி. ஒரே வாரிசு. தங்களின் ஒரே உயிர்ச்சொத்து. எனவே அப்பா ஞானவேலுக்கும் அம்மா காவேரிக்கும் அகிலாதான் உயிர். நல்ல உயரமாய், உயரத்திற்கேற்ற பருமனாய், எழுமிச்சை நிறத்தோடு காட்சி தரும் தன் மகள் அகிலாவை ஒரு வருடம் கூட நிற்கவைத்து இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது காவேரிக்கு. கருவண்டுக் கண்கள். நேரிய நாசி. கதுப்பான கன்னங்கள். […]

விலகாத ​வெண்தி​ரை – 2 ம் அத்தியாயம்

2ம் அத்தியாயம்   சூரியனின் ஒளிக்கதிர்களின் சுள்ளென்று உறைக்கும் வரையில் பொறுமையில்லாமல் கருக்கலிலேயே வாசல் பெருக்கி சாணம் தெளித்து நாலு கம்பியை நீட்டிவிட்டு இருந்தாள் பத்மா. இருளாண்டி இருந்தவரையில் அந்த ஓலைவீட்டின் முகப்பே கோயிலின் கர்ப்பகிரகத்தைப் போல இருக்கும் தெய்வம் போனபிறகு காலியாக கர்ப்பகிரமாய் பத்மா மட்டும் ! “மூணும் சின்னப்பிள்ளைங்க அவரு இருந்தவரையில் ஏதோ காலத்தை தள்ளிட்டே இனிமே என்ன பண்ணப்போறே ? உனக்கடுத்து இரண்டு பொட்டப்பிள்ளைங்க நீ ஏதோ தலையெடுத்திட்டேன்னு நினைச்சேன் ஊரைப் பார்த்த […]

இன்று மாலையுடன் ஓய்கிறது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம்

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வருகிற 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஆம்ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. டெல்லியில் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக செயல்பட்டு வருகிறது. இன்று மாலையுடன் இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் […]

மஹகத் திருமணம் சிம்பு வாழ்த்து

பிப்ரவரி 1 அன்று பிரச்சி மிஸ்ராவைத் திருமணம் செய்துகொண்டதாக மஹத் அறிவித்துள்ளார். அஜித் நடித்த மங்காத்தா படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானவர் மஹத், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். மிஸ் இந்தியா எர்த் 2002 பிரச்சி மிஸ்ராவுடன்  திருமண நிச்சயதார்த்தம் கடந்த மே மாதம் நடைபெற்றது.  பிப்ரவரி 1 அன்று திருமணம் செய்துகொண்டேன். என் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் என்று தன் மகிழ்ச்சியை மஹத் வெளிப்படுத்தியுள்ளார். திருமண நிகழ்ச்சியில் மு.க. அழகிரி, சிம்பு, அனிருத் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். 

டிஎன்பிஎஸ்சி தேர்வெதிய கவிதா முன்ஜாமீன்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பணம் கொடுத்து தேர்ச்சி அடைந்ததாகக் கூறி 2017ம் ஆண்டு குரூப் 2ஏ தேர்வெழுதி அரசுப் பணியைப் பெற்ற விக்னேஷ், சுதா, சுதாதேவி ஆகியோர் கைதான நிலையில், அவர்களுடன் தேர்வெதிய கவிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இவர் தலைமைச் செயலகத்தில் நிதித்துறையில் உதவியாளர் பணியில் உள்ளார். தன்னுடன் தேர்வெழுதியவர்கள் கைதாகியுள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் தானும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர் முன்ஜாமீன் கோரியுள்ளார் என்று கூறப்படுகிறது. முன்ஜாமீன் […]

பூ வியாபாரி மனைவி அக்கவுண்ட்டுல ரூ.30 கோடியா?

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் சன்னபட்னா நகரை சேர்ந்த பூ வியாபாரி சையத் மாலிக் புர்ஹான். இவரது மனைவிக்கு எஸ்.பி.ஐ வங்கியில் கணக்கு இருக்கிறது. இதில் ரூ.30 கோடி பணம் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இதில் கடைசியாக வெறும் ரூ.60 மட்டுமே இருந்த நிலையில், இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது என்று வங்கிக்கு சந்தேகம் எழுந்தது. உடனே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரை அழைத்து விசாரித்துள்ளனர்.அப்போது தான் அவருக்கு தனது வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. […]

கண் பார்வை குறைவை தீர்க்கும் வெந்தய கீரை……

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.    வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் […]

ஒரு​நொடி ​செய்திகள்

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு, அலுவலகங்களில் ரூ.65 கோடி பறிமுதல். சென்னை, மதுரையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.  கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணத்தை கைப்பற்றியது வருமான வரி துறை சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் சோதனை தொடர்கிறது  காலணியை கழற்ற சிறுவனை அழைத்த அமைச்சர்! ‘டேய் வாடா, செருப்ப கழட்டுடா!’- சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்! முதுமலை யானைகள் முகாமை தொடங்கி வைக்க சென்ற  […]

கேரளாவில் அதிர்ச்சியடைந்த மக்கள்….

வீட்டின் தண்ணீர்க் குழாயில் கொட்டிய மதுபானம்:    கேரள மாநிலம் திரிசூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்த ஏராளமான வீடுகளில் தண்ணீர்க் குழாயைத் திறந்தால் மதுபானம் கொட்டியதைப் பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 18 வீடுகளில் தண்ணீர் குழாயில் மதுபானம் நேரடியாக பக்கெட்டுகளில் வந்து தஞ்சம் அடைந்தன.    இதற்கு காரணம் தெரியாமல் விழித்த பொதுமக்களுக்கு, சமீபத்தில் சுங்கத் துறை அலுவலகம் 6 ஆயிரம் லிட்டர் மதுபானங்களை பூமியில் கொட்டி […]

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணியின்போது லாரி விபத்து:

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணியின்போது லாரி விபத்து: 3 தொழிலாளர்கள் பலி…!!   மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணியின்போது உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி ஏறியதில் மூன்று பேர் பலியாகினர். மதுரை வைகை ஆற்றின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணியின்போது இன்று (புதன்கிழமை) அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி ஏறியதில் சேலத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் பெரியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதையடுத்து, படுகாயமடைந்த சென்னையைச் சேர்ந்த பாபு என்ற தொழிலாளி […]