Month: January 2020

விளையாட்டு

கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி!

முத்தரப்பு டி20 போட்டி:     இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மகளிர் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. கேன்பராவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.   முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. கேப்டன் நைட், 44 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் ராஜேஸ்வரி கெயக்வாட், ஷிகா பாண்டே, […]Read More

அஞ்சரைப் பெட்டி

கேரட் அல்வா ரெசிபி….

கேரட் அல்வா செய்வது எப்படி ……..!        கேரட் அல்வா எல்லாருக்கும் பிடித்தமான இனிப்பு வகைகளுள் ஒன்று. இதன் ஸ்பெஷலே இதைச் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. இதைச் செய்ய கேரட், சர்க்கரை, பால் போன்ற சில பொருட்கள் இருந்தாலே போதும் எளிதாக செய்து அசத்தி விடலாம். அதிலும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த குளிர் காலத்தில் செய்து கொடுக்க ஏற்றது. அவர்களுக்கு பள்ளிக்கூட ஸ்நாக்ஸ் ஆகக் கூட இதை நீங்கள் செய்து கொடுக்கலாம். கேரட் […]Read More

முக்கிய செய்திகள்

சீனாவில் இருக்கும் இந்தியர்களை மீட்க தில்லியில் இருந்து 12 மணிக்கு புறப்படுகிறது சிறப்பு

புதுதில்லி: சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள வூஹான் நகரத்தில் இருக்கும் இந்தியா்களை அங்கிருந்து அழைத்து வருவதற்காக இன்று வெள்ளிக்கிழமை (ஜன.31) மதியம் 12 மணிக்கு  தில்லியில் இருந்து சிறப்பு விமான புறப்படுகிறது.    சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள வூஹான் நகரம் உள்ளிட்ட ஹுபே மாகாணத்தில் சுமாா் 600 இந்தியா்கள் தங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு இருக்கும் இந்தியா்களை அங்கிருந்து அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.    வூஹானில் இருந்து 2 […]Read More

முக்கிய செய்திகள்

கரோனா வைரஸ் பாதித்த கேரள மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது:

அமைச்சர் சைலஜா…..    திருச்சூர்: கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட  கேரளத்தைச் சோ்ந்த மாணவிக்கு தனி வாா்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா கூறியுள்ளார்.    சீனாவில் வூஹான் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கேரளத்தின் திருச்சூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி, கரோனா வைரஸ் வூஹானில் தீவிரமாகப் பரவியதையடுத்து அவா் இந்தியா திரும்பினார்.    அவரைப் போல சீனாவிலிருந்து திரும்பிய 3 […]Read More

முக்கிய செய்திகள்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கண்டித்து குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு..

  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பலர் வெளிநடப்பு செய்தனர்.    இதையடுத்து கூட்ட அரங்கத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன் தெரிவித்தது:   காவிரி […]Read More

பாப்கார்ன்

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைந்து விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.    சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.    அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமையான இன்று(ஜன.31) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.11 குறைந்து, ரூ.3,880க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.88 குறைந்து, ரூ.31,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.    அதேசமயம் வெள்ளியின் விலையும் […]Read More

ராசிபலன்

இன்றைய ராசி பலன்கள் – 31-01-2020 – வெள்ளிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமான முடிவை தரும். எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்கும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பொது நலத்திற்கான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அஸ்வினி : உதவிகள் கிடைக்கும். பரணி : முன்னேற்றம் உண்டாகும். கிருத்திகை : […]Read More

முக்கிய செய்திகள்

சீனாவில் இருந்து கேரளம் திரும்பிய மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

  சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியது. சீனாவில் இருந்து கேரளம் திரும்பிய திருச்சூர் மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   கரோனா வைரஸ் பாதிப்பு பரவத் தொடங்கிய வூஹான் மாகாணத்தில் உள்ள வூஹான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவி, கேரளா திரும்பிய நிலையில், அவருக்கு நோவல் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவி தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் […]Read More

பாப்கார்ன்

ஆண்ட்ராய்டு போன்களில் புதிய அம்சத்துடன் கூகுள் மொழிபெயர்ப்பு செயலி!

ஆண்ட்ராய்டு போன்களில் மொழிபெயர்ப்பு பயன்பாட்டிற்கு லைவ் டிரான்ஸ்கிரிப்ஷனைக் கொண்டுவர கூகுள் முயற்சி செய்து வருகிறது.    கூகுள் நிறுவனத்தின் பிரபல செயலிகளின் பட்டியலில் கூகுள் டிரான்ஸ்லேட் செயலி முதல் இடத்தில் உள்ளது. இணையத்தில் 103 மொழிகளுக்கு இந்த செயலி மொழியாக்கம் செய்து தருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் மொழிபெயர்ப்பு பயன்பாட்டில் நேரடி டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை கொண்டு வருகிறது. கூகுள் தனது சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் இதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.   இந்த அம்சத்தின் மூலமாக பயனர் ஒரு […]Read More

பாப்கார்ன்

கரோனா பீருக்கும், கரோனா வைரஸுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பும் மக்கள்!

கரோனா பீருக்கும், கரோனா வைரஸுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் மக்கள் குழப்பமடைந்துள்ளதக கூகுள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.   சீனாவின், பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸுக்கு இதுவரை, 5,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று பலர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.    உலகின் பல பகுதிகளிலும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படா வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகள் […]Read More