வரலாற்றில் இன்று – 29.12.2019 – ராஜேஷ் கன்னா

இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா 1942ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜதின் கன்னா. 1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா, 1969ஆம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படம் மூலம் பிரபலமானார். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 15 வெற்றிப் படங்களை தொடர்ந்து தந்து ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்தை பெற்றார். இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகினர் இவரை ‘இந்தித் […]

இன்றைய ராசிபலன்கள் – 29.12.2019 – ஞாயிற்றுக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். வெளியூர் தொழில் தொடர்பான முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் அஸ்வினி : தடைகள் அகலும். பரணி : எண்ணங்கள் ஈடேறும். கிருத்திகை : பொருட்சேர்க்கை உண்டாகும். —————————————————————————– ரிஷபம் : தொழிலில் செல்வாக்கு […]

ஒருங்கிணைந்த ரயில் மேலாண்மை சேவை -பிரதமருக்கு எதிர்ப்புக் கடிதம்.

ஒருங்கிணைந்த ரயில் மேலாண்மை சேவை : அதிகாரிகள் பிரதமருக்கு எதிர்ப்புக் கடிதம். மூன்று தொழில்நுட்ப சாராத ரயில்வே துறை  (Non- technical ) மற்றும் ஐந்து தொழில்நுட்ப ரயில் சேவைகளையும் இணைத்து ஒரே இந்திய ரயில்வே மேலாண்மை சேவையாக (ஐஆர்எம்எஸ்) மத்திய அரசு அறிவிப்புக்கு நான் டெக்னிக்கல் ரயில்வே அதிகாரிகளிடையே மிகுந்த அதிருப்தியை உருவாக்கியுள்ளது.அவர்கள் தற்போது பிரதமர்,அமைச்சரவை செயலாளர், ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரியம் தலைவர் மற்றும் பணியாளர் பயிற்சித் துறை அமைச்சர் போன்றோர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.இந்த […]

’கோடீஸ்வரி’ மூலம் ராதிகா படைத்த மற்றொரு சாதனை

பெண்களுக்கான ஷோ மட்டுமில்ல : ’கோடீஸ்வரி’ மூலம் ராதிகா படைத்த மற்றொரு சாதனை சின்னத்திரை உலகில் எத்தனையோ ’கேம் ஷோ’-க்கள் உள்ளன. அந்த வகையில் பெண்கள் மட்டுமே கலந்துக் கொள்ளக் கூடிய புத்தம் புதிய கேம் ஷோ-வான கோடீஸ்வரி, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கி வருகிறார். ராதிகாவின் கணவரும், நடிகருமான சரத்குமார் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.சரி கோடீஸ்வரிக்கு வருவோம். […]

சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 30ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம். இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே காணப்படுமென கூறப்பட்டுள்ளது. வருகிற 30ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல ஊர்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 75.2 […]

இன்றைய முக்கிய செய்திகள்

முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 76.19 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு என தகவல். டெல்லியில் கடும் குளிரால் மக்கள் அவதி: வெப்பநிலை, 2.4 டிகிரி செல்சியசாக பதிவு. வருகிற 16-ம் தேதி பள்ளி விடுமுறை ரத்து செய்யப்படவில்லை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். பிரதமர் உரையை மாணவர்கள் வாட்சப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கேட்டால் போதும் – செங்கோட்டையன். கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை ஒன்றியம் 21வது […]

தருமபுரி: – மறுவாக்குப்பதிவு

தருமபுரி: கத்திரிப்பட்டி கிராம ஊராட்சியில், 9 வேட்பாளருக்கு பதிலாக, 5 வேட்பாளர்களின் சின்னங்கள் மட்டுமே இருந்ததால் மறுவாக்குப்பதிவு 30ம் தேதி நடைபெறும் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு. புதுக்கோட்டை: விராலிமலை ஒன்றியம் பாக்குடி ஊராட்சியில் சுயச்சை வேட்பாளரின் சின்னம் வாக்குச்சீட்டில் மாறியதால், 13 வாக்குச்சாவடி மையங்களிலும், 30ம் தேதி மறுவாக்குபதிவு என மாவட்ட ஆட்சியர் தகவல்.

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.77.70க்கும், டீசல் விலை 18 காசுகள் அதிகரித்து ரூ.71.27க்கும் விற்பனை

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 10 – சுதா ரவி

நிமிட நேரத்திற்குள் நடந்த நிகழ்வில் தான் கண்டது கனவோ என்ற எண்ணமே தோன்றியது. நின்ற இடத்திலேயே பிரமித்து போய் நிற்க, எதற்கோ வெளியே வந்த ராஜி மகள் பிரமை பிடித்தார் போல் வாயிலிலேயே நிற்பதை பார்த்து அவளை உள்ளே அழைத்து சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினாலும் அவன் எப்படி சரியாக திரும்பி பார்த்து கண்ணை சிமிட்டினான் என்று குழம்பிக் கொண்டிருந்தாள். மெல்ல மெல்ல அவன் மனம் அவன் புறம் மயங்கி நிற்பதை நினைத்து […]

நீயெனதின்னுயிர் – 11 – ஷெண்பா

11 அதிகாலை ஆதவனின் பொன்னிறக் கதிர்கள் ஜன்னலருகில் நின்றிருந்தவளின் மீது பட்டு, இளமஞ்சள் நிற அழகியைப் பொன்னிறத்தில் உருமாற்ற, பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது. முகத்திற்கு நேராக தனது வலது கரத்தை உயர்த்திப் பார்த்தவளின் கன்னங்கள், செம்மை நிறத்தைப் பிரதிபலித்தது. உள்ளம், முன் இரவில் அவனது ஸ்பரிசத்தால் ஏற்பட்ட அதிர்வை நினைத்து மதிமயங்க, முகமோ கனிவுடன் இளகியது. அவனது கையணைப்பில் இருந்த கரத்தை, மறுகையால் மெல்லத் தடவிக் கொடுத்தாள். இறக்கை முளைத்த காதல் மனம், அடங்காமல் கட்டவிழத் துவங்கிய நேரத்தில், […]