வரலாற்றில் இன்று – 27.12.2019 – கெப்ளர்

ஜெர்மனியை சேர்ந்த கணிதவியலாளரும், வானியலாளருமான ஜோகன்னஸ் கெப்ளர் 1571ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஜெர்மனியின் வைல்டர்ஸ்டாட் நகரில் பிறந்தார். இவர் வானியலில் தான் ஆராய்ந்து அறிந்த விஷயங்களின் அடிப்படையில் ‘மிஸ்ட்ரியம் காஸ்மோகிராபிகம்’ என்ற மிகப்பெரிய வானியல் நூலை எழுதினார். இந்நூல் 1596ஆம் ஆண்டு வெளிவந்த பிறகு, திறன்வாய்ந்த வானியலாளராக அங்கீகாரம் பெற்றார். இவர் ‘அஸ்ட்ரோநோமியா நோவா’, ‘ஹார்மோனிஸ் முன்டி’ ஆகிய நூல்களில் கோள்களின் இயக்க விதிகள் தொடர்பாக கூறிய கருத்துகள் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றன.  […]

இன்றைய ராசிபலன்கள் – 27.12.2019 – வெள்ளிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு தனவரவு மேம்படும். தொழில் சார்ந்த முயற்சிகளுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அஸ்வினி : சுபச்செய்திகள் கிடைக்கும். பரணி : தனவரவு மேம்படும். கிருத்திகை : முன்னேற்றமான நாள். […]

சுனாமியின் கோரத்த்தாண்டவம் – நினைவலைகள்

சுனாமி நினைவலைகள்: ‘அனைத்தையும் இழந்துவிட்டோம், உயிர் மட்டுமே மிஞ்சியது’ டிசம்பர் 26, 2004. அந்த மறக்க முடியாத ஞாயிற்றுக்கிழமை காலை வரை, அந்த நாள் தன் வாழ்க்கை முழுதும் ஆறாத ரணத்தைத் தரும் நாள் என்று தற்போது 67 வயதாகும் பலராமன் அறிந்திருக்கவில்லை.கடலூர் மாவட்டம் சோனங்குப்பம் மீனாவ கிராமத்தை சேர்த்தவர் பலராமன். சுனாமியால் தனது மனைவி காந்திமதி, மூன்று குழந்தைகள் சுசித்ரா, மஞ்சு, கிஷோர் மற்றும் உடன்பிறந்த சகோதரி மேகலா என தனது குடும்பத்தில் ஐந்து நபர்களை சுனாமியால் பறிகொடுத்தவர் […]

வவுனியா: ராணுவ சிப்பாய் மீது தாக்குதல், துப்பாக்கி கடத்தல்

வவுனியா: ராணுவ சிப்பாய் மீது தாக்குதல், துப்பாக்கி கடத்தல் – என்ன நடக்கிறது அங்கே?இலங்கை வவுனியா – பொகஸ்வெவ பகுதியில் ராணுவ சிப்பாய் ஒருவர் மீது அடையாளம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவரது துப்பாக்கியை கடத்திச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.20 அளவில் நடைபெற்றதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடமைகளை நிறைவு செய்த ராணுவ சிப்பாய், ராணுவ முகாமை நோக்கி சென்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் […]

நரேந்திர மோடிக்கு கோயில் கட்டிய திருச்சி விவசாயி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி எனும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.படத்தின் காப்புரிமை PTI இந்தக் கோயிலைக் கட்டிய 50 வயதாகும் சங்கர் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியில் அங்கம் வகிக்கிறார்.ரூபாய் 1.2 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு தினமும் இரு முறை பூஜை செய்யும் சங்கர் சில நேரங்களில் பாலபிஷேகமும் செய்கிறார்.தனது 10 ஏக்கர் நிலத்தில் அறுவடை செய்தபின்பு இந்தக் […]

இனி சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது… கோத்தபய அரசு தடை..!

இனி சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது… கோத்தபய அரசு தடை..! இதுகுறித்து அவர், ’’இலங்கையின் சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும்.  தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது.  இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் ஒரே மொழியில் மட்டுமே தேசிய கீதம் உள்ளது. அதுபோல இலங்கையிலும் ஒரே மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும்’’என அவர் தெரிவித்தார்.

சசிகலா கைக்கு ரூ. 2 ஆயிரம் கோடி எப்படி வந்தது..?

சசிகலா கைக்கு ரூ. 2 ஆயிரம் கோடி எப்படி வந்தது..? யாரெல்லாம் காரணம் என விசாரித்து உள்ளே தள்ள காங்கிரஸ் கோரிக்கை! முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்திருந்தாலும் அவரது ஆட்சியில் நடைபெற்ற ஊழலின் காரணமாக சசிகலாவிடம் சிக்கிக் கொண்ட பல ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு பகுதிதான் வருமான வரித்துறையிடம் இன்றைக்கு சிக்கியிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

இன்றைய முக்கிய செய்திகள்

உத்தர பிரதேசம்: லக்னோவில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 25 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். வாஜ்பாயின் 95வது பிறந்த தினத்தையொட்டி தலைமைச் செயலகமான லோக்பவனில் வெண்கலச்சிலை திறப்பு. 2வது தேசிய நீர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். நீர் சேமிப்பு பற்றி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சிறந்த தொலைக்காட்சிக்கும் விருது வழங்கப்படும்.- முதல்வர் பழனிசாமிக்கு ஜல்சக்திதுறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடிதம்.தேர்தல் நடைபெறும் நாட்களில் ஊழியர்களுக்கு […]

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது!

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது! 27ம் தேதி நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட பரப்புரை 5 மணியுடன் நிறைவடைந்தது. பரப்புரை ஓய்ந்ததால் வாக்காளர்கள் அல்லாத நபர்கள் உள்ளாட்சி இடங்களில் இருந்து வெளியேற உத்தரவு; வெளியேறாதவர்கள் மீது நடவடிக்கை என மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.230 கோடி அபராதம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை நுகர்வோருக்கு அளிக்காமல் ஆதாயம் பெற்ற காரணத்திற்காக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு  ரூ.230 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.