கலைவாணர் எனும் மாகலைஞன் – 8 – சோழ. நாகராஜன்

கலைவாணர் எனும் மா கலைஞன் 8 ) தேசபக்தி: நாட்டு விடுதலையைப் பேசிய நாடகம்… ———————————— டி.கே. முத்துச்சாமிக்கும் என்.எஸ். கிருஷ்ணனுக்கும் “தேசபக்தி” – என்று பெயர் மாற்றப்பட்ட சாமிநாத சர்மாவின் “பாணபுரத்து வீரன்” – என்ற அந்த நாடகத்தில் புதுமையாக ஏதாவது சேர்க்க வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கியிருந்தது. இருவரும் ஒருநாள் புத்தகக் கடைக்குச் சென்றார்கள். மகாத்மா காந்தியின் வரலாற்று நூலை வாங்கிவந்தார்கள். காந்தியடிகளின் கதையை வில்லிசை வடிவில் இந்த நாடகத்தில் இணைத்துப் பாடலாம் என்று […]

இன்றைய முக்கிய செய்திகள்

நிர்பயா பாலியல் குற்றவாளி பவன் குமார் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். பவன் குமார் மனுவை ஜனவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சற்றுமுன் தெரிவித்த நிலையில் மீண்டும் விசாரிக்க முடிவு.(சிறார் நீதி சட்டத்தின் படி தன்னை நடத்த வேண்டும் என நிர்பயா பாலியல் குற்றவாளி பவன் குமார் தாக்கல் செய்த மனு ஜனவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைத்த‌து டெல்லி உயர்நீதிமன்றம்.) துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் மீது ஊழல் வழக்கு தொடரப்படுவது கவலையளிக்கிறது. ஊழல் வழக்கு […]

சண்டிகரில் மாணவர் சங்க தலைவர்கள் கொலை

சண்டிகரில் மாணவர் சங்க தலைவர்கள் இருவர் சுட்டுக் கொலை. சண்டிகரில் மாணவர் சங்க தலைவர்கள் இருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. மாணவர் சங்க தலைவர்களை சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் 4 பேரை சண்டிகர் போலீசார் தேடி வருகின்றனர்.

கனமழைக்கு வாய்ப்பு!

நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் வருகிற 20ம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,  கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 3 செ.மீட்டரும்,  பாம்பன், தொண்டியில் 1 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வருகிற 20ம் தேதி அன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் […]

விவசாய நகைக்கடன் வட்டி உயர்வு!

விவசாய நகைக்கடன் வட்டி உயர்வு!7% வட்டியில் இனி விவசாய நகைக்கடன் வழங்கக் கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்! 11% நகைக்கடன் வட்டியில் வழங்கப்பட்டு வந்த 4% மானியம் நிறுத்தம் விவசாயிகளுக்கான விவசாய நகைக்கடன் வட்டியும் 7%லிருந்து 9.25% முதல் 11% வரை உயர்த்தப்பட்டுள்ளது . விவசாயிகளாக இல்லாதவர்களும், விவசாய நகைக்கடன் பெற்று வருவதாக வந்த புகாரில் நடவடிக்கை என தகவல்.

மேலூர் அருகே முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் வெட்டிக் கொலை

   மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.   மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த வல்லாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் அசோகன். இவர் இன்று அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.   செட்டியார் பட்டி பகுதியில் பயிற்சி மேற்கொண்டபோது, சில மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை:    வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.     சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு புதன்கிழமை மாலை 5 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், கிரீன்வேஸ் சாலையில் தமிழக முதல்வா், துணை முதல்வா் வீடுகளிலும்,தலைமைச் செயலகத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் […]

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிரான தீர்மானம் வெற்றி!

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிரான தீர்மானம் வெற்றி! அந்நாட்டு (நாடாளுமன்றம்) மக்கள் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றியடைந்ததால் டிரம்ப்புக்கு நெருக்கடி. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, சபையை தவறாக வழிநடத்தியதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு.டிரம்ப்புக்கு எதிராக 218 பேரும், ஆதரவாக 163 பேரும் வாக்களிப்பு.

யூ ட்யூப் மியூசிக் அறிமுகப்படுத்தும் மூன்று புதிய பிளேலிஸ்ட்கள்!

 யூ ட்யூப் மியூசிக் முதல்முறையாக தனிப்பட்ட பிளேலிஸ்ட்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது :    இந்தியாவில் யூ ட்யூப் மியூசிக் சேவை கடந்த மார்ச் மாதம் அறிமுகமானது. இதில் அனைத்து மொழியிலான அதிகாரப்பூர்வ பாடல்கள், ஆல்பங்கள், மியூசிக் வீடியோக்கள், சில நேரலை நிகழ்வுகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. முழுவதும் இலவசமாகவே பிளே ஸ்டோரில் இந்த செயலியை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.     அவ்வப்போது புதுமையை புகுத்தி வரும் யூ ட்யூப், ‘டிஸ்கவர் மிக்ஸ்’, ‘நியூ ரிலீஸ் மிக்ஸ்’ மற்றும் ‘யுவர் மிக்ஸ்’ […]

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலையில் மாற்றமின்றி லிட்டர் பெட்ரோல் ரூ.77.58க்கும், டீசல் 16 காசுகள் அதிகரித்து ரூ.69.97க்கும் விற்பனை.