கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன்… சீமான் நகைச்சுவை!

குடியுரிமை மறுக்கப்பட்டால் கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன்… சீமான் நகைச்சுவை!நித்யானந்தாவும் பதிலடி! தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் தன்னை இந்திய குடியுரிமையற்றவனாக்கி விட்டால் நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு சென்று விடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அக்கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில், சீமான் உரையாற்றினார்.அப்போது பேசுகையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் குடியுரிமை மறுக்கப்பட்டால் ஒரு கவலையும் இல்லை எனக் கூறிய அவர், தங்களுக்கு அதிபர் […]

படப்பொட்டி – ரீல்: 11 – பாலகணேஷ்

மறக்க முடியாத ‘அந்த நாள்’ 1954ல் ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘அந்த நாள்’ திரைப்படம் வெளியானது. அந்த நாள் மட்டுமில்லை, இந்த நாளும், எந்த நாளும் பார்த்தாலும் ப்ரெஷ்ஷாக இருக்கும் ஒரு ‘என்றும் பசுமை’ மர்மப் படம் இது. இதன் கதையை எழுதி இயக்கியவர் தமிழின் ஹிட்ச்காக் எஸ்.பாலசந்தர்.

எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது

நாவல், சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய படைப்புகளுக்கு இந்தியாவில்  வழங்கப்படும் மிக உயரிய விருது சாகித்ய அகாடமி விருது. மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பாக விளங்கும் சாகித்ய அகாடமி நிறுவனத்தால் 1955-ம் ஆண்டில் இருந்து இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்பட அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த படைப்பாளிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழில், நடப்பு ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருதுக்கு எழுத்தாளர் சோ.தர்மனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சூல் என்ற நாவலுக்காக சோ.தர்மனுக்கு […]

நரிக்குறவர் சமூகத்தின் கல்விக் கனவை சுமக்கும் கௌசல்யா

நரிக்குறவர் சமூகத்தின் கல்விக் கனவை சுமக்கும் கௌசல்யா “கல்வி பெரியதொரு சக்தின்னு புரிஞ்சிக்கிட்டு, பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில படிக்கத் தொடங்கினேன். இன்றைக்கு என்னை பார்த்து எனது சமூகத்தை சேர்ந்த பல பேர் பேர் கல்வி கற்கத் தொடங்கியுள்ளனர்,” என்கிறார் இளம்பெண் கௌசல்யா.செவிலியராக பணிபுரிய மூன்று ஆண்டுகள் படிக்க வேண்டிய கல்லுரிப் படிப்பில் கடைசி ஆண்டு படித்து வருகிறார் கௌசல்யா.என்ன இது? மேல் நிலைப் பள்ளிப்படிப்புக்கு பிறகு பலரும் கற்கும் வழக்கமான படிப்புதானே? இதிலென்ன சிறப்பு இருக்கிறது? என்று பலருக்கும் தோன்றலாம்.ஆனால், […]

நீதிமன்றத்துக்கு வந்த வினோத வழக்கு

’சீஸின் துர்நாற்றம் தாங்க முடியவில்லை’ – நீதிமன்றத்துக்கு வந்த வினோத வழக்கு மற்றும் பிற செய்திகள்தெற்கு ஜெர்மனியில் ஒரு சீஸ் கடையிலிருந்து துர்நாற்றம் வருகிறது என்பதை குறிக்கும் வகையில் அபாய பலகை வைக்க அனுமதி கோரி ஒரு பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.மனுவேலா க்ரேக்லெர் என்னும் அப்பெண் முனிச்சின் தெற்கு பகுதியில், ஒரு சீஸ் கடையின் மேல் வசித்து வருகிறார்.சீஸ் கடைக்காரருக்கும் அண்டை வீட்டுக்காரர்களுக்கும் 2016ஆம் ஆண்டு தொடங்கி இது தொடர்பாக பிரச்சனை நிலவி வந்தது.”அந்த சீஸ் கடையின் துர்நாற்றம் […]

உறுதியானது தூக்கு தண்டனை..! – நிர்பயா வழக்கில்

நிர்பயா வழக்கில் இனி யாரும் தப்பமுடியாது… உறுதியானது தூக்கு தண்டனை..! நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி அக்ஷய் குமார் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பா் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு 6 பேர் கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இக்கொடூர செயலில் ஈடுபட்ட 6 பேரில் ஒருவா் சிறார் ஆவார். […]

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவுசென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில், பல்கலை கழகத்தை பிரிப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பல்கலைக்கழகமானது மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்துடன் இயங்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை […]

முக்கிய செய்திகள்

காஷ்மீரில் கடந்த ஆண்டு 802 கல்லெறி சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 544ஆக பதிவாகியுள்ளது, இதில் 190 சம்பவங்கள் ஆக.5ம் தேதிக்கு மேல் நடந்துள்ளது – மத்திய உள்துறை அமைச்சகம்.எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது!அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்: ஆரம்பகட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.கொடைக்கானல்: அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு – டெபாசிட் கட்டணம் செலுத்தாததால் தள்ளுபடி.ரோஹித் புதிய […]

10கையெறி குண்டுகள் சென்னைக்கு ரயிலில் பார்சலில்

ராணுவத்தில் பயன்படுத்தப்படும் 10கையெறி குண்டுகள் சென்னைக்கு ரயிலில் பார்சலில் வந்தது கண்டுபிடிப்பு  மகாராஷ்டிராவில் நாக்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சங்கமித்ரா ரயிலில் ஒரு பார்சல் வந்தது ;பல நாட்களாக கிடந்ததால் பார்சல் யானைகவுனியில் உள்ள ரயில்வே கிடங்குக்கு அனுப்பப்பட்டது.

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.1,338 கோடி மற்றும் ஐஜிஎஸ்டி ரூ.4,500 கோடியை வழங்க வலியுறுத்துவோம். தமிழக வணிகர்கள் மற்றும் சிறு தொழில்துறையினரின் கோரிக்கைகளை ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளோம் குடியுரிமை விவகாரத்தில் திமுக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்துவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது –  அமைச்சர் ஜெயக்குமார்.