தமிழக அரசின் சுற்றறிக்கையால் பரபரப்பு

தமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு? – தமிழக அரசின் சுற்றறிக்கையால் பரபரப்பு 50 வயது அல்லது 30 ஆண்டு பணி நிறைவு பெற்றிருந்தால் கட்டாய ஓய்வு அளிப்பது குறித்து ஆய்வு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை டிசம்பர் 10ம் தேதிக்குள் விவரங்களை அனுப்ப வேண்டும் என உத்தரவு விவரங்களை அனுப்பத் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க நேரிடும்- சுற்றறிக்கை

உயர்நீதிமன்ற மதுரை கிளை.

மாநில நெடுஞ்சாலைகளில், 1 கி.மீ.க்கு ஒரு சுங்கவரி வசூல் மையம் அமைத்து வசூலிப்பீர்களா? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. மதுரையில் 27 கி.மீ. தூரத்திற்குள், 3 சுங்கச்சாவடிகள் அமைக்க வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியும்

தேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியும் – உச்ச நீதிமன்றம். வேண்டுமெனில் மாற்றம் செய்யப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வையுங்கள் – தமிழக அரசு வாதம். “பழைய தொகுதி மறுவரையறை பணிகளை தான் மீண்டும் கொடுத்திருக்கிறோம் என்ற வாதத்தை ஏற்க முடியாது” – உச்ச நீதிமன்றம். எதற்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன? பழைய நிலையே தொடரும் என்றால் எப்படி புரிந்து கொள்வது? – நீதிபதிகள்  மூன்று மாவட்டங்களுக்கு ஒரே மாவட்ட பஞ்சாயத்தா? என நீதிபதிகள் கேள்வி இத்தனை ஆண்டுகள் […]

உள்ளாட்சி தேர்தல் – திமுக வழக்கு விசாரணை விசாரணை தொடங்கியது.

உள்ளாட்சி தேர்தல் – திமுக வழக்கு விசாரணை விசாரணை தொடங்கியது. வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள் 9 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன – திமுக தரப்பு வாதம். மாவட்ட தேர்தல் அதிகாரிதான், தொகுதி வரையறை அதிகாரியாகவும் உள்ளார் – திமுக. தொகுதி வரையறை உள்ளிட்ட சட்ட விதிகளை பின்பற்றாமல் தேர்தல்அறிவிக்கப்பட்டுள்ளது – திமுக. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்தீர்களா? – நீதிபதிகள்.  அதை செய்ய வேண்டியதில்லை –  மாநில தேர்தல் ஆணையம்.  ஏன் – நீதிபதிகள். தொகுதி மறுவரையறை […]

பொன் மாணிக்கவேலுக்கு அவமதிப்பு வழக்கு

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது, தமிழக அரசு – வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சபரிமலையில் மொபைல்போன்களுக்கு திடீர் தடை!

சபரிமலையில் மொபைல்போன்களுக்கு திடீர் தடை! சபரிமலை அய்யப்பன் கோவில் சந்நிதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் மொபைல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவித்துள்ள தேவசம் போர்டு பக்தர்கள் கோவிலுக்குள் மொபைல்போன் கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.  சபரிமலை பிரசாதம் பக்தர்களுக்கு பத்தாம் தேதி முதல் பம்பா தேவஸ்தானம் கவுண்டரில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த டெல்லியில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் தொடங்கியது: உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்கும் ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், நாளை தீர்ப்பளிக்கிறது, உச்சநீதிமன்றம். திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.கர்நாடகாவில், 15 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங். – மஜத எம்எல்ஏக்கள் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் எரித்துக்கொல்லப்பட்ட […]

39% கட்டணத்தை உயர்த்தியது ஜியோ

அதிரடியாக உயர்த்தப்பட்ட செல்போன் கட்டணங்கள்: 39% கட்டணத்தை உயர்த்தியது ஜியோ தனியார் தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ, தமது கட்டணத்தை 39 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ஜியோ, மற்ற நிறுவனங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கி வந்த‌து. ஆனால், வருவாய் இழப்பு ஏற்பட்டதன் விளைவாக ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தன. இந்த நிலையில், ஜியோ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி, 339 ரூபாய் பிளான், 555 ரூபாய் மற்றும் 153 ரூபாய் பிளான் […]

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலையில் மாற்றமில்லாத, 4வது நாள்! சென்னையில் பெட்ரோல் – டீசல் விலை மாற்றம் ஏதும் இன்றி, பெட்ரோல் லிட்டர் ரூ.77.91க்கும், டீசல் ரூ.69.53க்கும் விற்பனை.

கலைவாணர் எனும் மா கலைஞன் – 6 – சோழ. நாகராஜன்

கலைவாணர் எனும் மா கலைஞன் 6 ) நடிகவேள் போற்றிய ஜெகந்நாத ஐயர்… டி.கே.எஸ். குழுவில் இரத்னாவளி, இராஜேந்திரன், சந்திரகாந்தா என்று நாடகங்கள் தொடர்ந்தன. அவற்றில் கிருஷ்ணனுக்கு முக்கிய வேடங்களும் கிடைத்தன. நாடகங்களில் நடிக்க சிறுவர்களை அழைத்துவருகிற வேலையைச் செய்துவந்த டி.கே.எஸ். சகோதரர்களின் தாய்மாமன் செல்லம்பிள்ளையுடன் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு ஏதோவொரு விசயத்தில் கருத்து முரண்பாடு வந்துவிட்டது. கிருஷ்ணனால் தொடர்ந்து அங்கே இருக்க இயலவில்லை. எனவே, இன்னொரு பிரபல நாடகக் குழுவான மதுரை பால மீனரஞ்சனி சங்கீத […]