மூலவன்

கைத்தடி குட்டு

நெதர்லாந்து நாட்டின் சான்றிதழ் பெற்று அசத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  மாணவர்களுக்கு நெதர்லாந்து நாட்டின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.                                     சமீபத்தில் இணையம் வழியாக நெதர்லாந்து நாட்டில்  நடைபெற்ற பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் சிறப்பு நிகழ்ச்சியில்  இப்பள்ளியில் இருந்து 20 மாணவர்கள்  பங்கேற்றனர்.  பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது.  […]Read More

கைத்தடி குட்டு

வெளிநாட்டில் MBBS படித்தவர்கள் கவனிக்க வேண்டிய விவரங்கள்

வெளிநாட்டில் மருத்துவம் (MBBS) படித்துவிட்டு இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற விரும்புவோர் செய்ய வேண்டிய பணிகள் விவரம். 1. வெளிநாட்டிற்குப் படிக்கச் செல்லும் முன்பு இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிந்துவிட்டு செல்ல வேண்டும். 2.இந்திய மருத்துவ கவுன்சில் அதற்கு ஒரு தகுதிச் சான்றிதழ் தரும். அதை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். 3. ஐந்தரை ஆண்டுகள் படித்துவிட்டு இந்தியாவுக்கு வந்தவுடன் இந்திய மருத்துவ கவுன்சில் வைக்கும் தேர்வில் (FMGE) வெற்றிபெற வேண்டும். இந்தத் தேர்வு ஆண்டுக்கு இருமுறை ஜூன் […]Read More

கைத்தடி குட்டு

அ.தி.மு.க. பொன் விழாவும் எடப்பாடிக்குத் தலைவலியும்

அ.தி.மு.க. 50வது பொன் விழாவை கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. எப்படி? ஒரு பக்கம் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையிலும். சசிகலா தலைமையில் ஒரு பக்கமும் கொண்டாட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. உண்மையான எம்.ஜி.ஆர். தொண்டர்கள் ஒரு பக்கம் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக எந்தவித விழா கொண்டாட்டங்களும் இல்லாமல் முடக்கிப்போட்டிருந்தது. தற்போது கொரோனா தடைகளை நீக்கி முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில் அ.தி.மு.க. 50வது பொன் விழா ஆண்டும் இரண்டாண்டு களுக்குப் […]Read More

கைத்தடி குட்டு

விஷால் – ஆர்யா நடிக்கும் ‘ எனிமி’ தீபாவளி ரிலீஸ்

நடிகர்கள் ஆர்யாவும், விஷாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள படம் எனிமி. அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர்.  இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மினி ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ். வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக […]Read More

கைத்தடி குட்டு

அ.வெண்ணிவுக்குப் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது வழங்கப்பட்டது.

சென்னை  காட்டங்குளத்தூரிலுள்ள  எஸ்.ஆர்.எம்.  பல்கலைக்கழகத்தில்  அக்டோபர் 21  நடைபெற்ற தமிழ்ப்பேராயத்தின் எட்டாம் ஆண்டு விழா வில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’தும், பரிசுத் தொகை ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டன.      இவ்விழாவிற்கு, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரு மான முனைவர் தா.ரா.பாரிவேந்தர் தலைமையேற்றார். தமிழ்ப் பேராயத்தின் தலைவர் முனைவர் கரு.நாகராஜன் வரவேற்புரையாற்றி னார்.     திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து, ‘கங்காபுரம்’ எனும் […]Read More

கைத்தடி குட்டு

சேலத்தில் உலகிலேயே மிக உயரமான அதிகார நந்தி

உலகிலேயே மிக உயரமான நந்தி எனப் பெயர் பெறப் போகும் அதிகார  நந்தி சிலை ஒன்றை ஸ்தபதி திருவாரூர் தியாகராஜன் வடிவமைத்து அச்சிலை முடியும் தறுவாயில் உள்ளது. இந்த பிரம்மாண்ட சிலை சேலம் மாவட்டம் வெள்ளாளகுண்டம் ராஜலிங்கேஸ்வரர் கோவின் முன் அமைக்கப் பட உள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள வெள்ளாளகுண்டம் ராஜலிங் கேஸ்வரர் கோவிலின் தலைவர் அருட்குரு ஶ்ரீராஜவேல் சுவாமிகள் அருட் கொடையால் ஸ்தபதி திருவாரூர் தியாகராஜன் அவர்கள் இந்த பிரம்மாண்ட மான சிலையை வடிவமைத்து […]Read More

கைத்தடி குட்டு

வெற்றிமாறன் தலைமையில் கிராமப்புற மாணவர்களுக்கு சினிமா பயிற்சி

தமிழ் சினிமாவை கிராமப்புற மாணவர்களும் கற்று நல்ல தரமான சினிமாவை எடுக்கவும் எழுத, இயக்க, நடிக்க வரவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது (International Institute of Film and Culture – IIFC) சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம். இந்த அமைப்பின் தலைவர் இயக்குநர் வெற்றி மாறன், வழிகாட்டியாக ராஜநாயகம், செயலாளராக வெற்றி துரைசாமி ஆகியோரின் முன்னெடுப்பில் கடந்த ஏப்ரல் 2021ல் தமிழ்ப் புத்தாண்டு அன்று தொடங்கப்பட்டது. இது சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள […]Read More

கைத்தடி குட்டு

நகைச்சுவையின் இனிப்பு நடிகர் தேங்காய் சீனிவாசன்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் தனி முத்திரை பதித்தவர் தேங்காய் சீனிவாசன். இவர் வசன உச்சரிப்பு தமிழ்த்திரை காமெடியில் கவனத்தைப் பெற்றது. காமெடி நடிகர்களில் குள்ளமான, வித்தியாசமான தோற்றம், காமெடி குரல் மாற்றம் என்ற எந்த காமெடிக்கான அடையாளமும் இல்லாமல் உண்மையான, கதாபாத்திரத்திற்கு ஏற்ற, ஆபாசமில்லாத  நகைச்சுவையைத் தந்து ரசிகர்கள் மத்தியில் நின்றவர் தேங்காய் சீனிவாசன். தேங்காய் சீனிவாசன் ‘கல் மனம்’ என்னும் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்தார். அந்நாடகத்தைப் பார்க்க வந்திருந்த அப்போது பிரபலமாக இருந்த […]Read More

கைத்தடி குட்டு

சித்தர்களும் அட்டமா சித்திகளும்

சித்தர்கள் சர்வ சாதாரணமாக சில சித்து வேலைகளில் ஈடுபடுவர். அந்த நித்து வேலைகளுக்கு அஷ்டமா சித்து என்று பெயர். அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகியன அஷ்டமா சித்திகள். இந்த அஷ்டமா சித்திகள் என்னென்ன செய்யும் என்று பார்ப்போம். அணிமா பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது, ஆக்குவது அணிமா. பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காகச் சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்கிற சித்தைக் […]Read More

கைத்தடி குட்டு

சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த இந்தியத் திரைப்படமாக கர்ணன் தேர்வு

பெங்களூரு சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த இந்தியத் திரைப்படமாக  கர்ணன் தேர்வு! பெங்களூரு இனோவேட்டிவ் சர்வதேசத் திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது.அதன் நிறைவு விழாவில் (17.10.2021) அன்று  சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கர்ணன் திரைப்படத்திற்காக அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் பெற்றார். வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு  தயாரிப்பில்  மாரி செல்வராஜ் இயக்கி, தனுஷ் கதாநாயகனாக நடித்தார் .விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான […]Read More