மூலவன்

மறக்க முடியுமா

ப்ரியா கல்யாணராமன் மறைவு பத்திரிகை உலகுக்கு இழப்பு

குமுதம் வார இதழில் பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர் ப்ரியா கல்யாணராமன் (வயது 56). இவர் இன்று மாலை சென்னையில் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி பத்திரிகை உலகில் மட்டுமல்லாமல் பொது வெளியிலும் பெரிய துயரத்தை ஏற்படுத்தியது. நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலைச் சேர்ந்த ப்ரியா கல்யாணராமனின் இயற்பெயர் ராமச்சந்திரன். அவரது மனைவி ராஜ சியாமளா ஒரு எழுத்தாளர். ப்ரியா கல்யாணராமனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். குமுதம் வார இதழில் தமது 21ஆம் வயதிலேயே […]Read More

சதுரங்க ராணி

5000 கழிப்பறைகள் கட்ட உதவிய சேவகி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  பொது மக்களிடையே கழிப்பறைகள் கட்டு வதற்கு  மானியம் மற்றும் அதற்குரிய வழிகாட்டுதல் முறைகள் பற்றிய விழிப் புணர்வை  ஏற்படுத்தி வருகிறார் மதுரை மாவட்டம் திருமங்கலம்  பகுதியில்  மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் தற்காலிக வட்டார ஒருங்கிணைப்பாள ராகப் பணியாற்றும் செல்வி. ‘நிர்மல் பாரத் திட்டத்தில்’ சுகாதாராத்  தூதுவராகவும், தூய்மைக் காவலர்களுக்கு முன்னோடி  ஊக்குவிப்பாளராகவும்  திகழும்  செல்வி, தூய்மை  இந்தியா திட்டத் தில் இணைந்து சேவையாற்ற கிராம ஊராட்சிகளுக்குச் சென்று  கழிப் பறையின் அவசியம் […]Read More

ஒலியும் ஒளியும்

யோகிபாபு நாயகனாக நடிக்கும் ‘மெடிக்கல் மிராக்கல்’

சந்தானம் நடிப்பில் ‘ஏ1’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ படங்களை இயக்கிய ஜான்சன் அடுத்த தாக இயக்கும் படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘மெடிக்கல் மிராக்கல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. யோகிபாபு நாயகனாக நடித்த ‘மண்டேலா’ திரைப்படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இந்தப் படம் உருவாகியுள்ளது. யோகி பாபுவுக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடிக்கிறார். இவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். ஏற்கெனவே ‘ருத்ர […]Read More

நகரில் இன்று

உலக யோகா தினம் 2022

யோகாவின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, 8வது சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், யோகா ஸ்டுடியோக்கள் அல்லது பிற பொது இடங்களில் ஒன்றாக யோகா பயிற்சி செய்வதற்காக மக்கள் கூடுகிறார்கள். யோகாவின் பல நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா என்பது சமஸ்கிருதத்திலிருந்து […]Read More

அண்மை செய்திகள்

கிண்டி பாம்புப் பண்ணை ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்தது

சென்னையில் பாம்புப் பண்ணை என்றாலே நினைவுக்கு வருவது கிண்டி பாம்புப் பண்ணை. சுற்றுலா பயணிகளில் குறிப்பாக குழந்தைகளை ஈர்க்கும் விதமாக இந்தப் பாம்புப் பண்ணை அமைந்திருக்கிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே இது பிரபலமாகி உள்ள நிலையில், அவர்கள் இந்தப் பூங்காவிற்கு வருகை தந்து பாம்பு வகைகளை கண்டுகளித்து செல்வார்கள். இந்தியாவில் முதல் ஊர்வன பூங்கா கிண்டியில் உள்ள பாம்பு பூங்காதான் என்று சிறப்பு பெற்றது. 34 பாம்பு இனங்களைச் சேர்ந்த 300 விலங்குகள் பராமரிக்கப்படுகிறது. இங்கு 50 […]Read More

கோவில் சுற்றி

சக்தியும் சிவமும் சேர்ந்த நிலையே உயிர்களின் தோற்றம்

இந்துமதத்தில் பெண்களுக்கு இரண்டாம்தரமான இடம் அளிக்கப்படுவதாகச் சொல்வது தவறு. ரிக்வேதம் அவர்களை எல்லாவற்றுக்கும் மேலான சக்தியாகக் குறிப்பிடுகிறது. (பத்தாவது மண்டலம்) மகாபாரதத்தில் பெண்களை வைத்து வழிபடுவது பற்றிய குறிப்பு உத்தியோகப் பருவத்தில் வருகிறது. மகாபாரதத் திலேயே அனுசான பருவத்தில், பெண்களை மகிழ்ச்சிகரமாகவும் மனநிம்மதியுட னும் வைத்துக்கொள்ளாத நாடு முன்னேற முடியாது என்ற குறிப்பு வருகிறது. அர்ஜுனனுடைய மனைவி சித்தராங்கதா புகழ்பெற்ற வீராங்கனையாக விளங்கி இருக்கிறாள். உபநிடதங்கள் பலவற்றிலும் பெண்கள் வேதாந்த சர்ச்சையில் முக்கியமான இடம் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. […]Read More

ஒலியும் ஒளியும் கைத்தடி குட்டு

‘சுழல்’ வெப்சீரிஸ் தவறான முன்னுதாரணம்

அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளம் முதல்முறையாக தமிழில் நேரடியாக ‘சுழல்  என்ற வெப் சீரிஸைத் தயாரித்துள் ளது. இந்த வெப் சீரிஸ்க்கான கதையை புஷ்கர் & காயத்ரி தம்பதிகள் இணைந்து எழுதியுள்ளனர். இயக்குநர்களான பிரம்மா மற்றும் அனுசரண் இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்கள். 6 மணி நேரம் ஓடக்கூடிய எட்டு பாகங்களைக் கொண்டது சுழல். இந்த வெப்சீரிஸ் ஒரு க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. புஷ்கர் – காயத்ரி திரைக்கதையில் உருவான ‘சுழல்’ இணையத் தொடரில் காணா […]Read More

முக்கிய செய்திகள்

அக்னிபாத் திட்டம்- வலுக்கும் எதிர்ப்பு

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் நான்கு ஆண்டுகளுக்கு இளைஞர்களைப் பணிக்கு தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தின்படி ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்துக்கு இந்திய அளவில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பிஹார், ஹரியானா, ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங் களில் இளைஞர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிஹார் பா.ஜ.க. அலுவலகத்துக்கு […]Read More

அண்மை செய்திகள்

குவைத் நாட்டுக்கு 2 லட்சம் கிலோ மாட்டுச்சாணம் ஏற்றுமதி

மாடு வளர்ப்பு மிகவும் அருகிவிட்டது. அதனால் மாட்டுச்சாணமும் அரிதாகி விட்டது. மாட்டுச்சாணியை காலில் ஒட்டிக் கொண்டால் ‘அட சீ’ என காலை உதறிவிட்டு போகிறவர்களைப் பார்க்கலாம். நாம் மிகச் சாதாரணமாகப் பார்க்கும் மாட்டுச்சாணத்தைப் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கிச் செல்கிறது குவைத் நாட்டில் உள்ள ஒரு நிறுவனம். இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து குவைத் நாட்டுக்கு 1.92 லட்சம் கிலோ மாட்டுச் சாணம் சமீபத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பது உலக நாடுகளில் மிகவும் வியப்பாக பார்க்கப்பட்டுள்ளது. இரு […]Read More

கோவில் சுற்றி

21 தலைமுறை பாவங்கள் தீர திருவெண்காடு கோயிலுக்குச் செல்லுங்கள்!

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் சமயக் குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் அமைந் துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாகக் கருதப் படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது பழங்கால நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தி யாக […]Read More