Tags :பாலகணேஷ்

3D பயாஸ்கோப்

படப்பொட்டி – 6வது ரீல் – பாலகணேஷ்

படப்பொட்டி – 6 வது ரீல் – பாலகணேஷ் மாமாயாபஜார்!! உங்களில் இந்தப் படம் பார்க்காதவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய படம் என்றாலும் சற்றும் சலிப்படையச் செய்யாமல் விறுவிறுவென்று ரசிக்கும்படியாக அமைந்திருந்த படம். ஒரே கதை பதினொரு முறை படமாக்கப்படுவது என்கிற அதிசயத்தை நிகழ்த்திய ஒரே படம் இந்த மாயாபஜார். தெலுங்கில் இரு முறையும், தமிழில் இரு முறையும் மற்ற பிராந்திய மொழிகளில் பலமுறையுமாக வெளியான அதிசயப் படம் இது. […]Read More

3D பயாஸ்கோப்

படப்பொட்டி – 5வது ரீல் – பாலகணேஷ்

எம்.கே.தியாகராஜ பாகவதர்! தமிழ்த் திரையுலகின் முதல் உச்ச நட்சத்திரம்!! திரையுலக வாழ்க்கையில் அதிகபட்ச ஏற்றம், அதே அளவு இறக்கம் அனைத்தையும் பார்த்தவர். அவருடைய திரையுலக வாழ்வின் உச்சமான ‘ஹரிதாஸ்’ அக்டோபர் 16, 1944 அன்று வெளியானது. அதற்குமுன் வந்த பாகவதர் படங்களின் வசூலையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு வெற்றி முரசு கொட்டியது. வெற்றியை ஒரு மாதம்வரைதான் பாகவதரால் அனுபவிக்க முடிந்தது. 1944 டிசம்பரில் எம்.கே.டி.யும், கலைவாணரும் லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளரைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்கள். அந்த […]Read More

தொடர்

படப்பொட்டி – 3வது ரீல் – பாலகணேஷ்

கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி! 1954ம் ஆண்டில் இவர் மறைந்தபோது இவருக்கு வயது 50தான். அதற்குள் பலப்பல சுவாரஸ்யமான சரித்திரக் கதைகளையும், விறுவிறுப்பான சமூகக் கதைகளையும், பேன்டஸிக் கதைகளையும் எழுதிக் குவித்திருந்தார். இவர் மறைந்து 63 ஆண்டுகள் ஆகி, இவரது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, ஏறக்குறைய இவரது நாவல்களைப் பதிப்பிக்காத பதிப்பகங்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரும் பதிப்பித்தும் இன்றும் பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன அவரது புத்தகங்கள். ஐந்து தலைமுறைகள் தாண்டி, இன்றைய இளைய தலைமுறையினரும் கல்கியின் எழுத்துக்களைப் பற்றிக் கேள்விப்பட்டு […]Read More

தொடர்

படப்பொட்டி – 2 வது ரீல் – பாலகணேஷ்

எஸ்.பாலசந்தர்! – இவர் இந்தியாவின் புகழ்மிக்க வீணை இசைக் கலைஞராகத் திகழ்ந்து வீணை பாலச்சந்தர் என்றே அழைக்கப்பட்டவர். இவ்விசைக் கலைஞர், தமிழில் ஹிட்ச்காக்குக்கு இணையான விறுவிறுப்பான த்ரில் திரைப்படங்களைத் தந்தவர் என்பது இன்றைய இளைய தலைமுறையினரில் அனேகருக்குத் தெரியாத விஷயம். 1948ல் ‘இது நிஜமா’, 1951ல் ‘கைதி’ ஆகிய படங்களை அவர் இயக்கியிருந்தாலும் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில் வெற்றியை எட்டியது 1954ல் இவர் இயக்கிய ‘அந்த நாள்’ திரைப்படம்தான். உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர் […]Read More