Tags :பத்மா சந்திரசேகர்

தொடர்

படைத்திறல் பல்லவர்கோன் | 5 | பத்மா சந்திரசேகர்

5. காதல் மனம் தன்னை அணைத்து, தனது இதழ்களில் முத்தமிட்ட நந்திவர்மரை பிடித்துத் தள்ளிய அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்த நந்திவர்மர் அதிர்ந்தார். “யார்.. யார் நீ?” பதிலேதும் வரவில்லை. எனினும், அந்த பெண்ணின் மெல்லிய உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. “என்னை மன்னித்து விடு பெண்ணே. என் மனைவி என நினைத்தே உன்னை அணைத்து விட்டேன். மன்னிப்புக் கேட்பதால் நான் செய்த தவறு சரியாகிவிடாது. எனினும், அதைத் தவிர என்னால் வேறு […]Read More

தொடர்

படைத்திறல் பல்லவர் கோன் | 4 | பத்மா சந்திரசேகர்

4. ஏரிக்கரை காஞ்சிபுரம் அரண்மனை பரபரப்பாக இருந்தது. பணிப்பெண்கள் இங்குமங்கும் ஓடியாடி ஏதோ செய்து கொண்டிருந்தனர். வீரர்கள் பணியாட்களிடம் ஏதோ கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தனர். அரண்மனை வாயிலில் ஒரு சிவிகை கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளே பட்டுத்துணி விரிக்கப்பட்டிருந்த அந்த சிவிகையின் இருபக்கமும் திரையிட்டு மூடப்பட்டிருந்தன. சிவிகைக்கு பக்கத்தில் அதைச் சுமப்பவர்கள் நின்றுக கொண்டிருந்தனர். “எல்லாம் தயாரா..?” அரண்மனையின் உள்ளிருந்து வந்த நந்திவர்மர் கேட்டார். “அனைத்தும் தயார் மன்னா. தங்கள் உத்தரவு கிடைத்தால் புறப்படத் தயாராக உள்ளோம்.” பதில் […]Read More

தொடர்

படைத்திறல் பல்லவர்கோன் | 3 | பத்மா சந்திரசேகர்

3. சினம் கொண்ட சிங்கம் போரைத் தவிர்க்கும் உபாயம் உள்ளதாக சாத்தனார் கூறியதும், போரைத் தவிர்க்கும் எண்ணம் இல்லாவிடினும், அந்த உபாயம் என்னவெனத் தெரிந்து கொள்ள எண்ணி சாத்தனாரின் பேச்சை தொடரச் செய்தார் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர். எனினும் அவர் அந்தப் பெயரை உச்சரித்ததும் அவரது சினத்தை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. “என்ன கூறினீர் சாத்தனாரே..?” சினத்துடனேயே மீண்டும் கேட்டார் ஸ்ரீவல்லபர். பாண்டிய வேந்தரின் சினத்தை அவரது குரலிலும், முகத்திலும் கண்டுகொண்ட சாத்தனார் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார். […]Read More

கைத்தடி குட்டு தொடர்

படைத்திறல் பல்லவர்கோன் | 2 | பத்மா சந்திரசேகர்

2. எதிராலோசனை பல்லவ மன்னன் தனது அமைச்சர் விக்கிரமர் மற்றும் சேனைத் தலைவர் கோட்புலியாருடன் ஆலோசனை செய்த நான்காவது நாள்..! மதுரைக் கோட்டை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது அந்த புரவி. அந்த அஸ்வத்தின் மீது அமர்ந்திருந்தவர் வெண்ணிறப் பட்டணிந்து, நீலவண்ண அங்கவஸ்திரம் அணிந்திருந்தார். கழுத்திலிருந்து மார்பில் புரண்ட முத்து மாலை காண்போர் விழிகளைக் கவர்ந்திழுத்தது. இடையிலிருந்த வாள் அவரது வீரத்திற்குச் சாட்சி கூறியது. ஆதவன் மறைவதற்குள் மதுரைக் கோட்டையை அடைந்து விட வேண்டுமென்ற எண்ணத்தில் வேகமாக விரைந்து […]Read More

தொடர்

படைத்திறல் பல்லவர் கோன் – 1 | பத்மா சந்திரசேகர்

1 ஆலோசனை சுக்லபட்ச சதுர்த்தசி சுக்கிரன் பூமிப்பெண்ணைக் காண எண்ணி சற்று விரைவாகவே உதித்திருந்தான். தங்கக்குழம்பை காய்ச்சி, வெள்ளிக் குழம்பில் கலந்து செய்த பெரும் வட்டில் போல, பொன்னும், வெள்ளியும் கலந்த நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தான். ‘நகரேஷு காஞ்சி’ என பாரவியாலும், ‘கல்வியிற் கரையிலாக் காஞ்சி’ என அப்பர் பெருமானாலும் புகழ்ந்து பாடப்பட்ட காஞ்சி நகரத்தைப் பிரிந்து செல்லப் பிடிக்காமல் ஆதவன் தயங்கி நிற்க, அதுவரை பொறுமை காக்கவியலாமல் சுக்கிரன் விரைந்து வர, ஒரே நேரத்தில் மேற்கிலும், […]Read More