Tags :தனுஜா ஜெயராமன்

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 9 | தனுஜா ஜெயராமன்

ஹோட்டல் மூன்லைட் இன்டர்நேஷ்னல் என்ற பித்தளை போர்ட் பளபளக்கும் கேட்டில் நுழைந்து காரை பார்க் செய்தான். அம்ரிதா வந்திருப்பாளா? சதிகாரி நிச்சயம் வந்திருப்பாள். இதே வேலையாக அலைபவள் தானே…என நினைத்தபடி உள்ளே நுழைந்தான். ரிஸப்ஷனில் …சோபாவில் அமர்ந்து கண்களால் துழாவினான்… அவளை காணவில்லை… காத்திருந்தான்… ஒரு மணிநேரம் கடந்தும் அவள் வராதது எரிச்சலாக இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் நெருப்பு மேல் நிற்பது போல் இருந்தது… கிளம்ப யத்தனித்தவன் சோபாவிலிருந்து எழ… கண்ணாடி டோரை திறந்து கொண்டு அவள் […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 8 | தனுஜா ஜெயராமன்

சாயங்காலம் கிளப்பில்… “டேய்…என்னடா என்னமோ மாதிரி இருக்க..?” என்ற ஹரிஷின் குரலுக்குக் கலைந்தவன்… “ஒரு சின்ன பிரச்சினைடா… ஒரே குழப்பமா இருக்கு… உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தான்…” எனத் தயங்கியவன், “டேய் முகேஷ் … என்கிட்ட என்னடா தயக்கம் உனக்கு..? நான் என் வெளியாளா..?” “அதில்லைடா… நான் உன்கிட்ட ஒரு அனானிமஸ் போன்காலை பத்தி சொல்லியிருந்தேன்ல…” “ஆமாம்… யார்ன்னு கேட்டியா..?” “ம்.…” எனச் சற்றுத் தயங்கியவன்… “நாம திருச்சியில இருந்தப்ப எதிர் வீட்ல இருந்தாளே அந்த அம்ரிதா.. […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 7 | தனுஜா ஜெயராமன்

காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது. தந்திரமாகத் தான் விரட்டியடிக்கவேண்டும். அதிலும் இது சாதாரணப் பாம்பல்ல. ஆலகால விஷமடங்கிய கொடூரப் பாம்பாயிற்றே என்று கவலைகள் வாட்ட இரவெல்லாம் விழித்தபடி யோசித்துக் கொண்டே படுத்திருந்தவன் விடியற்காலையில் அசந்து தூங்கிப் போனான். அவனை எழுப்ப மனமில்லாத சுதா…சத்தமில்லாமல் எழுந்து கதவை மெதுவாக சாத்திவிட்டுப் போனாள். ஐன்னல் வழியாகச் சூரியன் கட்டில் வரை நேரடியாகச் சுட்டெரித்துக் கொண்டிருந்தான். வெளிச்சம் கண்களைக் கூசியது. பதறியடித்து எழுந்தவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்பதைக் காட்டியது. […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 6 | தனுஜா ஜெயராமன்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா. நம் எண்ணங்களே நமது செயல்களே நம் தலையெழுத்தை தீர்மானிக்கிறது. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமாக வைப்பது நம் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது..” என யாரிடமோ மொபைலில் பேசி கொண்டே முகேஷின் வீட்டிற்குள் நுழைந்தான் ஹரிஷ். “வாடா..!” என ஹரிஷை வரவேற்று, “அம்மா காபி குடும்மா..” என உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தான் முகேஷ். “வாப்பா ஹரிஷ்..! எப்படியிருக்க..?” என்றபடி காபியை நீட்டினாள். “நல்லாருக்கேன்ம்மா. இன்னைக்கு கடைசி எக்ஸாம்.  […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 5 | தனுஜா ஜெயராமன்

குடிவந்த ஒரே வாரத்தில் தனலட்சுமியும், அம்ரிதாவும் மிகவும் நெருங்கி விட்டனர். அம்ரிதாவின் கணவர் சர்வேஷ் டெல்லிக்குக் கிளம்பிவிட, அம்ரிதா குழந்தையுடன் தனியாக இருக்க, தனலட்சுமியும் அவளுக்கு வேண்டிய ஒத்தாசைகள் செய்யவே இருவருக்குமான நட்பு மேலும் பலப்பட்டு விட்டது. குழந்தை ஷ்ரதா பெரும்பாலும் முகேஷின் வீட்டிலேயே விளையாடிக் கொண்டிருப்பாள். சில நேரத்தில் அவளை திரும்ப அழைத்துச் செல்லும் போதும், காபித்தூள், சர்க்கரை என அவசரத் தேவைகளின் போதும் அம்ரிதா அடிக்கடி வீட்டுற்கு வந்து போகும் தருணங்களிலும் முகேஷைப் பார்த்து […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 4 | தனுஜா ஜெயராமன்

திருச்சியின் பிள்ளையார் கோவில் தெரு. “கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே” என பக்திப் பாடல் ஒலிக்க, ஊதுபத்தி வாசனையும் சாம்பிராணி வாசனையும் காற்றில் மிதந்துவர, கற்பூரத்தை பயபக்தியுடன் சாமி படங்களுக்குக் காட்டி கொண்டிருந்தாள் தனலட்சுமி. காலை நேரப் பரபரப்புடன் ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்த வேதமூர்த்தி, “என்ன தனா… உன் பிள்ளை எழுந்தானா இல்லையா..? காலேஜ் போகலையா..?” என்றார் நக்கலுடன். “அவனை வம்புக்கிழுக்காட்டா உங்களுக்குத் தூக்கம் வராதே!.. இன்னைக்கு சனிக்கிழமை. கிரிக்கெட் கோச்சிங் போயிட்டு வந்து […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 3 | தனுஜா ஜெயராமன்

“சந்தோஷமா இருக்க போல” என்ற வார்த்தை முகேஷின் மனதை நெருஞ்சி முள்ளாக நெருடியது. யாராயிருக்கும் என மனதைத் துளைத்தது கேள்விகள்.. தற்போது எல்லாம் தன்னை யாரோ தொடர்வது துரத்துவது போல் தோன்றுகிறதே! நிஜமாக இருக்குமா அல்லது மனப்பிரமையா? சுதாவிடம் எதையும் காட்டி கொள்ளாமல் இயல்பாக இருக்க முயன்றாலும் முகத்தில் கவலை ரேகைகள் ஓடியது. சுதா..ஆர்வமாக, “ஏங்க எனக்கொரு ஆசை..கல்யாணத்துக்கு முன்பே இருந்தது தான்…உங்ககிட்ட சொன்னா என்ன நினைப்பீங்களோன்னு…” என்றாள் தயங்கியவாறு. “நீ இதுவரையில் எதுவுமே ஆசைப்பட்டு கேட்டதில்லை […]Read More

தொடர்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 2 | தனுஜா ஜெயராமன்

இன்று காலையில் முகேஷ் கண்விழித்தபோதே சுதாவும், தனலட்சுமியும் சமையற்கட்டில் நெய்வாசம் ஊரைக்கூட்ட, கேசரியும், வடையும் செய்து கொண்டிருந்தனர். வாசனை மூக்கைத் துளைக்க பசி வயிற்றை கிள்ள படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தான் முகேஷ். ஹாலில் பேப்பர் படித்து கொண்டிருந்த வேதமூர்த்தி..”பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா மகனே!” ..என வாழ்த்தினார். “தாங்ஸ்ப்பா!..” என்றவன் அம்மாவையும் மனைவியையும் தேடி சமையலறைக்கே ஓடினான். “வாங்க மை பர்த்டே பேபி!..” என சுதா கிண்டலடிக்க… வடையைத் தட்டி கொண்டிருந்த தனலட்சுமி.. “நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் […]Read More

தொடர்

தொட்டுவிட தொட்டுவிட தொடரும் | 1 | தனுஜா ஜெயராமன்

காலை நேரக் கதிரவன் மெதுவாக மேலெழும்ப போர்வையை விலக்க மனமில்லாமல் இழுத்து போர்த்தியபடி உறங்கி கொண்டிருந்தான் முகேஷ். அவன் மார்பில் உறங்கி கொண்டிருந்த குழந்தை  தியாவை மேலும் இறுக்கி அணைத்தபடி மறுபடியும் உறங்க முயன்றான்.. அவனின் உறக்கம் பிடிக்காத டைம்பீஸ் அலறியது.  அதன் அலறிய  தலையில் ஓங்கி குட்டியவன் மறுபடியும் போர்வைக்குள் முடங்கினான். “அப்பாவும் மகளும் தூங்கியது போதுமா? எழுந்திருக்க மனசு வர்லையா அய்யாவுக்கு-” என கைகளை இடுப்பில் ஊன்றியவாறு முறைத்து கொண்டே சத்தமிட்டாள் சுதா.. போர்வைக்கு […]Read More