Tags :பத்மா சந்திரசேகர்

தொடர்

படைத்திறல் பல்லவர்கோன் |15| பத்மா சந்திரசேகர்

15. இணைந்த கரங்கள்..! ஆரூர் ஐயாறப்பர் சன்னதியில், ஈசன் முன் கைகுவித்து நின்றிருந்தார் பல்லவ மன்னர் நந்திவர்மர். தெள்ளாற்றில் போர்க்களத்தில் பாண்டிய மன்னர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரை வென்று, பாண்டியப்படையைத் தொடர்ந்து சென்று, பழையாறை, நள்ளாறு ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தி, வைகையாற்றைக் கடந்து பாண்டியப்படையை விரட்டி, பெருவெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன், பாண்டியர்களிடம் இழந்த தங்கள் பிரதேசங்களை மீட்டெடுத்த மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, அப்போதுதான் பூத்த மலரைப்போல முகிழ்ந்திருந்தது அவரது முகம். பக்கத்தில் மலரே உயிர் பெற்று வந்தது […]Read More

தொடர்

படைத்திறல் பல்லவர் கோன் | 14 | பத்மா சந்திரசேகர்

14.வெற்றித்திருமகன் நந்திவர்மர் வீசிய வாளில் தனது கைவாளை பறிகொடுத்த பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரின் தலையை நோக்கி வேகமாக பாய்ந்தது பல்லவ மன்னரின் வாள். ஸ்ரீவல்லபர் வீரசுவர்க்கம் புக தயாரானவர் போல விழிகளை மூடி ஒரு கணம் மதுரை திருவாலவாயுடையாரை மனதிற்குள் பிரார்த்தித்தார். மிகுந்த ஆக்ரோஷத்துடன் நந்திவர்மர் வீசிய வாள், ஸ்ரீவல்லபர் தலையை கொய்யவிருந்த அந்த கண நேரத்திற்கும் குறைவான நேரத்தில் அந்த மாற்றம் நிகழ்ந்தது. சில கண நேரத்திற்கு முன்னர் ஸ்ரீவல்லபர் இருந்த அதே நிலையை […]Read More

தொடர்

படைத்திறல் பல்லவர் கோன் | 13 | பத்மா சந்திரசேகர்

13. தொடங்கியது தாக்குதல் எப்போதும் போல தான் நாள் தொடங்கியது. எப்போதும் போல தான் சுக்கிரன் விடை பெற்றான். எப்போதும் போல் தான் ஆதவன் விழித்தான். ஆனால், அன்று சுக்கிரன் காண அஞ்சி ஒளிந்துக் கொள்ளக் காரணமான போரை, ஆதவன் கண்டே ஆகக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டான். ஆதவன் வெளிப்பட்ட போதே, தெள்ளாற்றில் இருபுறமும் வரிசை கட்டி அணிவகுத்து நின்றன படைகள். ஒரு புறம் பல்லவப்படை நிற்க, எதிர்த் திசையில் பாண்டியப்படை தயாராக நின்றிருந்தது.கதிரவனின் இளம் கதிர்கள் வீரர்கள் […]Read More

தொடர்

படைத்திறல் பல்லவர்கோன் | 12 | பத்மாசந்திரசேகர்

12. பாண்டியர் பாசறை காஞ்சியை நோக்கிப் புறப்பட்ட பாண்டியப்படையில் முன்னணியில் வந்துகொண்டிருந்த வீரர்கள் ஒரு பெரிய திடலை அடைந்தனர். அந்தத் திடலின் மறுபக்கம் ஒரு படை முகாமிட்டிருப்பதைக் கண்டதும் சற்று அதிர்ச்சியடைந்து, மேற்கொண்டு முன்னேறாமல் அங்கேயே காத்திருக்கத் தொடங்கினர். சற்று நேரத்தில் படைத்தளபதி அழகன், பாண்டியப்படை காத்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். “திடலுக்கு அந்தப்பக்கம் பல்லவப்படை காத்திருக்கிறது. பல்லவப்படை எந்நேரமும் தாக்குதலைத் தொடங்கலாம். அனைவரும் தயாராக இருங்கள்” சொல்லிக்கொண்டே வந்தவர் அருகிலிருந்த வீரனைப் பார்த்தார். “சமையல் பொருட்கள் […]Read More

தொடர்

படைத்திறல் பல்லவர்கோன் | 11 | பத்மா சந்திரசேகர்

11 தெள்ளாறு நந்திவர்மர் உத்தரவிட்டபடி பல்லவப்படைகள் தெள்ளாறு சென்று தனது பாசறையை அமைத்தன. புரவிப்படை ஒரு பக்கத்திலும், யானைப்படை ஒரு பக்கத்திலும் முகாமிட்டிருந்தன. ஒரு புறம் இரதங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. இன்னொரு புறம் காலாட்படை வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். சற்று தொலைவில், சிலர் சமையல் செய்து கொண்டிருந்தனர். பெரிய பெரிய பாத்திரங்களில் அரிசி, கேழ்வரகு, சோளம் ஆகியவை கஞ்சியாக சமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் மாமிசம் தயாராகிக் கொண்டிருந்தது. இன்னொரு புறம், காய் வகைகள் நீரில் […]Read More

தொடர்

படைத்திறல் பல்லவர்கோன் | 10 | பத்மா சந்திரசேகர்

10. பல்லவப்படை காஞ்சிபுரத்தில் சேனாதிபதி கோட்புலியார் பல்லவப்படையை தயார் செய்து கொண்டிருந்தார். வெகு சமீபத்திலேயே குறுகோட்டில் இராஷ்டிரகூடப் படையை தோற்கடித்து, இராஷ்டிரகூட இளவரசி சங்காவை மணமுடித்து வந்திருந்தார் நந்திவர்மர். எனவே அப்போரில் ஈடுபட்டிருந்த பல்லவப் படையினர் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். பல்லவ மன்னர் நந்திவர்மர் நேரடியாக படைகள் பயிற்சி செய்து கொண்டிருந்த திடலுக்கு வந்து, படையினரைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். “கோட்புலியாரே. வீரர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகத் தோன்றுகிறதே…” “ஆம் மன்னா. குறுகோட்டு போர் சமீபத்திலேயே முடிந்துள்ளதால், […]Read More

தொடர்

படைத்திறல் பல்லவர்கோன் | 9 | பத்மா சந்திரசேகர்

9. புறப்பட்டது போர்ப்படை! பல்லவ மன்னரின் சமாதானத்தை நிராகரித்த பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர் வெகு சீக்கிரம் தனது படைகளைத் தயார் செய்தார். சோழ மன்னர் குமராங்குசர் காஞ்சி வந்தடைவதற்குள் ஏற்கனவே தயாராக இருந்த பாண்டிய படை, போருக்குத் தயாரானது. அன்று அதிகாலை. ஆதவன் உதிக்கும் முன்னரே படை வீரர்கள் வைகைக் கரையிலிருந்த திடலில் கூடியிருந்தனர். அனைவர் கைகளிலும் வாள், வேல், ஈட்டி, வில், அம்பு ஆகிய ஆயுதங்கள் இருந்தன. அந்தத் திடல் முழுவதும் யானைகளாலும், புரவிகளாலும், […]Read More

தொடர்

படைத்திறல் பல்லவர்கோன் | 8 | பத்மா சந்திரசேகர்

8. ஆத்திரம் காஞ்சிபுரம் அரண்மனையில் பின்மாலை நேரத்தில் தனது தனியறையில் இருந்தார் மன்னர் நந்திவர்மர். அறையின் மையத்தில் ஒரு பெரிய கட்டில் போடப்பட்டு, இலவம்பஞ்சிலான மெத்தை போடப்பட்டிருந்தது. அதன் மேல் வெண்பட்டு விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. அறை தீபங்களின் ஒளியால் நிறைந்திருந்தது. விழிகள் மூடி சுகந்தத்தை அனுபவித்துக் கொண்டிருத்த நந்திவர்மரை கலைத்தது நூபுரத்தின் ஒலி. “ஐயனே, பால் கொண்டு வந்துள்ளேன்” சங்கா மெல்லிய குரலில் கூற, மஞ்சத்திலிருந்து எழுந்து அமர்ந்து, பாலை அருந்திய நந்திவர்மர், சங்காவை உற்று நோக்கினார். […]Read More

தொடர்

படைத்திறல் பல்லவர்கோன் | 7 | பத்மா சந்திரசேகர்

7. வார்த்தைச் சிதறல் நந்திவர்மர் உத்தரவை ஏற்று மறுநாளே மதுரை புறப்பட்டார் குமராங்குசர். மதுரையை அடைந்தவர் கோட்டை வாயிலை நெருங்கினார். பகல் பொழுதாகையினால் அகழிப்பாலம் திறந்தே இருந்தது. அகழிப்பாலத்தை நெருங்கியவரை மறித்தது இரு வீரர்களின் வேல். “ஐயா. தங்களைப் பார்த்தால் வெளியூர் போலத் தெரிகிறது. எந்தக் காரணத்திற்காகக் கோட்டைக்குள் செல்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாமா?” பணிவாகவும், அதே நேரம் கம்பீரமாகவும் கேட்டான் காவல் வீரன். “நான் சோழ மன்னன் குமராங்குசன். பல்லவ மன்னரின் தூதுவனாக, பாண்டிய வேந்தரைச் […]Read More

தொடர்

படைத்திறல் பல்லவர்கோன் | 6 | பத்மா சந்திரசேகர்

6. சம்மதம் கிட்டுமா..? நந்திவர்மர் மாறன்பாவையை சந்தித்து, தனது மனதை வெளிப்படுத்திய பின்னர், ஏரிக்கரை மண்டபம் நோக்கி நடந்தார். அவரது மனதில் ஒருபுறம் மாறன்பாவையின் உடலிலிருந்து வெளிப்பட்ட சுகந்தமும், மறுபுறம் சங்காவின் காதலின் ஆழமும் போட்டியிட்டு சஞ்சலப்படுத்தின. “ஐயனே. அந்தப் பெண்ணை அவளது உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டீரா?” சங்கா கேட்டது அவரது செவிகளில் விழவில்லை. “என்ன யோசனை ஐயனே? நான் கேட்பது கூட செவிகளில் விழாத அளவு யோசனையில் உள்ளீரே..?” நந்திவர்மரது தோளில் கை வைத்துக் கேட்டாள் […]Read More