Tags :ஆன்மீக காதல் தொடர்

தொடர்

கிருஷ்ணை வந்தாள் | 10 | மாலா மாதவன்

நெற்றித் திலகம் மின்ன – காளி நீயும் இங்கு வருவாய் பெற்றெ டுத்தத் தாயாய் – வந்து பேணி நலம் காப்பாய் உற்றுத் தெளிந்தோம் நாங்கள் – காளி உன்னை அறிந்து வந்தோம் பற்று பாசம் வைத்தோம் – எங்கள் பந்தம் என்றும் நீயே மருக்கொழுந்து வாசம் கொல்லையெங்கும் கமகமத்தது. “எனக்குக் கல்யாணம் வேண்டாம். நான் உன்னை விட்டுப் போக மாட்டேன் கிருஷ்ணை.” “அம்மாவாய் நான் சொல்வதைக் கேள் அகல்யா. மகளான உனக்குத் திருமணம் செய்து வைப்பது […]Read More

தொடர்

கிருஷ்ணை வந்தாள் | 9 | மாலா மாதவன்

கோவில் தேடி வந்தோம் – அம்மா குறைகள் தன்னைப் போக்கு ஆவி உள்ள வரைக்கும் – அம்மா அல்லல் தன்னை நீக்கு நாவில் நிலைத்து நிற்பாய் – அம்மா நல்ல வைகள் அருள்வாய் சேவித் தெழுந்தோம் உன்னை -அம்மா செழிப்பை நீயும் தருவாய் அப்போது தான் நித்திரை விடுத்து கையை தேய்த்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டவாறு எழுந்த சுந்தரவதனனைப் போன் ஒலித்து அழைத்தது. யார் இந்த அதிகாலைல போன்? அக்கா! அக்காவுக்கு ஏதாவதோ? காலம் மாறினாலும் இந்த […]Read More

தொடர்

கிருஷ்ணை வந்தாள் | 8 | மாலா மாதவன்

‘அல்லும் பகலும் நீயே – தாயே அருக மர்ந்து காப்பாய் சொல்லில் பொருளில் நீயே – தாயே சொந்தம் கொண்டு நிற்பாய் பொல்லார் யாரும் வந்தால் – தாயே பொறுமை தன்னைக் கொடுப்பாய் எல்லை கடந்து நின்று – தாயே என்னை நீயும் இயக்கு‘ அகல்யா அப்பாவைக் கட்டிக் கொண்டு அழுது விட்டாள். அந்தளவு நெகிழ்ந்திருந்தது அவள் மனம். பாடலைப் பாடி முடித்தவளின் கண்களிலும் நீர் ஆறாக ஓடியது. “அப்பா உன்னை புரிந்து கொண்டேன் அகல்யா! இதோ […]Read More

தொடர்

கிருஷ்ணை வந்தாள் | 7 | மாலா மாதவன்

‘பொங்கல் படையல் வைப்போம் – காளி புடவை புதிது வைப்போம் தங்க மாலை கொண்டு – உன்னைத் தனித்து ஒளிரச் செய்வோம் அங்கம் உருளல் செய்வோம் – காளி அருளை வேண்டி நிற்போம் சிங்க மாக வந்து – நீயும் சிறப்பை அள்ளி வழங்கு!’ “சுந்தர்! இங்க பாருங்களேன். இந்த நோட்டு அகல்யாவோடது. எவ்வளவு அழகா காளி மேல் பாடல்கள் எழுதி வைச்சிருக்கா. நானும் பாடி பாடி பார்க்கறேன். அவ கிட்ட ஏதோ சக்தி இருக்கு. நீங்க […]Read More

தொடர்

கிருஷ்ணை வந்தாள் | 6 | மாலா மாதவன்

எட்டுத் திக்கும் காப்பாள் – காளி எல்லை காத்து நிற்பாள் பட்டுக் கைகள் கொண்டு – காற்றாய் பறந்து நம்மில் புகுவாள் சட்ட திட்டம் இல்லை – அவள் சக்தி தரும் சக்தி எட்டு அவளை எட்டு – காளி என்றும் நமது சக்தி ஓய்வான ஒருநாள் அகல்யாவின் பாடலை ராகத்துடன் இசையமைத்துப் பார்த்தாள் ஜோதி. “யாருங்க வீட்டுல? கொஞ்சம் வெளியில் வாங்க!” சற்றே தடித்த உரத்த குரல் கேட்டு ஜோதி பாட்டை நிறுத்தி விட்டு வாசல் […]Read More

தொடர்

கிருஷ்ணை வந்தாள் | 5 | மாலா மாதவன்

விண்ண ளாவும் பெருமை – உந்தன் வித்தை யாவும் அருமை மண்ணின் மீது நாங்கள் – நின்று மனம் உருகித் தொழுதோம் பண்ணும் பாடி வைத்தோம் – எங்கள் பாதை சிறக்க வருவாய் கண்ணைப் போலக் காப்பாய் – காளி காத்து நிற்பாய் என்றும் ஜோதியுடன் உள்ளே வந்த அகல்யா என்ன நினைத்தாளோ தெரியவில்லை. கூடத்து ஊஞ்சலில் அதிவேகமாக ஆட ஆரம்பித்தாள். பின் சடாரென அதை அப்படியே விட்டுவிட்டுச் சமையலறைக்கு வந்தாள். சட்னிக்குத் தக்காளியை வாணலியில் வதக்கிக் […]Read More

தொடர்

கிருஷ்ணை வந்தாள் | 4 | மாலா மாதவன்

‘செய்யும் செயலில் உன்னை – நானும் செயலாய்ப் புகுத்தி வைத்தேன் செய்கை யாவும் உன்னால்- காளி செழித்து வளரும் தன்னால் முன்னம் கடந்த பாதை – தாயே முழுதும் உந்தன் பலமே என்னுள் இருந்து இயக்கு – இருந்து எனது வழியை நடத்து’ பாடலைப் பாடியபடி அகல்யா ஸ்வாமி விளக்கேற்றி வைத்து தியானத்தில் ஆழ்ந்தாள். ஆழ்மனம் தெளிவாயில்லை. மீண்டும் முயன்றாள். குழப்பமுற்ற மனம் தெளிய மீண்டும் நடந்ததை எண்ணிப் பார்த்தாள். வீட்டிற்கு வந்து இரண்டு நாள் ஆயிற்று. […]Read More

தொடர்

கிருஷ்ணை வந்தாள் | 3 | மாலா மாதவன்

ஆற்றல் வடிவே காளி – அவள் ஆற்றும் கலைகள் கோடி வீற்றி ருக்கும் ஊரோ – அது ஆலம் பாடி யாமே ஊற்றுப் பெருக்காய் அன்பை – தாயும் உலகில் பரவச் செய்வாள் போற்றி போற்றி என்றே – நீயும் போற்றி வணங்கு நன்றே கிருஷ்ணை, அகல்யாவின் கையில் உள்ள நோட்டைப் பார்த்து .. “நீ எழுதி இருக்கும் இந்தப் பாடலை தினமும் பாடு. என்னுள்ளம் குளிர்கிறது” எனக் கூற.. அகல்யா அழகாய்ப் பாடினாள். அவர்கள் இருவரும் […]Read More

தொடர்

கிருஷ்ணை வந்தாள் | 2 | மாலா மாதவன்

அன்னை தந்தை யாவாள் – காளி அவனி எங்கும் வாழ்வாள் முன்னை வினைகள் போக்கி – இன்பம் முகிழ்த்துத் தழைக்கச் செய்வாள் இன்னல் போக்கும் இனியாள் – காளி இல்லம் தோறும் இருப்பாள் அன்னை அவளை வணங்கு – இந்த ஆலம் பாடி வந்து! • • • முதல் நாள் நடந்ததெல்லாம் கனவு மாதிரித் தெரிந்தது அகல்யாவுக்கு. கிருஷ்ணை வந்தாள். அப்பாவைப் பார் என்றாள். சரியென்று விளையாட்டுத்தனமாய்த் தானே தொட்டோம். சட்டென்று மயங்கி சாய்ந்து விட்டாரே… […]Read More

தொடர்

கிருஷ்ணை வந்தாள் | 1 | மாலா மாதவன்

‘ஆலம் பாடி காளி – அம்மா அருளை நீயும் தருவாய் காலம் தோறும் நீயே – எங்கள் கைவி ளக்காய் வருவாய் ஞால மெங்கும் நிறைவாய் – காளி ஞான ஒளியை வழங்கு கால தேவி நீயே – காளி கவிதை வடிவும் நீயே!’ அகல்யா தன் நோட்டில் பிள்ளையார் சுழியிட்டுத் தன் மனதில் உதித்த பாடலை எழுதி வைத்தாள். அப்பா சுந்தரவதனன் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பின் முழுநேரக் கோவில் வாசியாக […]Read More