பிரபுதேவா ஓநாயாக நடிக்கும் ‘வுல்ஃப்’

வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா, அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘வுல்ஃப்’ படத்தின் மூலம் கன்னடத் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்சன்ஸ் தமிழ் திரையுலகில்…

இன்னும் 4 விருதுகளைப் பெறுகிறது ‘மாமனிதன்’

ஐதராபாத்தில் நடைபெற்ற ‘நைட் ஆஃப் த ரீல்’ எனும் திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படம், ‘சிறந்த குடும்பத் திரைப்படம்’, ‘சிறந்த ஒளிப்பதிவு’, சிறந்த தொகுப்பு’, ‘சிறந்த பெண் நட்சத்திரம்’ என நான்கு விருதுகள் மாமனிதன் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது, தயாரிப்பாளர் யுவன் சங்கர்…

சாதிக்கு எதிரான படம் சேரன் நடித்த ‘தமிழ்க்குடிமகன்’

“நான் சொல்ல நினைத்த விஷயத்தைத்தான் இசக்கி கார்வண்ணன் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். சமூகத்திற்கான சிந்தனையில் அவர் என்னோடு நிற்கிறார் என்பதில் மகிழ்ச்சி” என்று தமிழ்க்குடிமகன் இயக்குநருக்கு சேரன் பாராட்டு தெரிவித்தார். சமீபத்தில் தமிழ்க்குடிமகன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுபற்றிதான்…

25 ஆண்டுப் பயணத்தில் புதிய அவதாரம் எடுத்த ‘அவதார்’

ஒரு நாள் ஒரு தாய் தன் கனவில் கண்ட நீலநிறத்திலான ஒரு 12 அடி உயரமான ஒரு பெண்ணைப் பற்றி தன் மகனிடம் விவரிக்கிறார். பின் நாட்கள் கழிய அதைப் பற்றி மறந்தும் போய்விட்டார். ஆனால் அதைக் கேட்ட மகன் மறக்கவில்லை.…

அதிரடி வில்லனாகிறார் சத்யராஜ்

குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கும் சத்யராஜ் தற்போது அங்காரகன் என்கிற படத்தில் டெரர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இந்தப்…

இந்தி நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளிய தனுஷ்!

பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐ.எம்.டி.பி. 2022-ம் ஆண்டின் டாப்-10 இந்திய திரை நட்சத்திரங்கள் யார் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. தங்கள் தளத்தில் யார் மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறார்கள் என்பதை வைத்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஸ்டார்…

‘தேன்’ வெற்றிப் பட இயக்குநர் கணேஷ் விநாயகமின் அடுத்த படம்

உலக அரங்கில் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள சாதனை படைத்த படம் தேன். 2016-ம் ஆண்டு வெளிவந்த ‘வீரசிவாஜி’, ‘தகராறு’ படங்களை இயக்கி தமிழ்த் திரையுலகிற்குள் அறிமுகமானவர் கணேஷ் விநாயகம். கார்ப்பரெட் கம்பெனிகள் மலைப்பிரதேசங்களை ஆக்கிரமித்து தொழிற்சாலைகளைக் கட்ட மலைக்கிராமத்து மக்களை…

தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு

தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட முன்னணி நடிகர் கிருஷ்ணா இன்று (15-11-2022) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 80. தெலுங்குத் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகர் கிருஷ்ணா, 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 50 ஆண்டுகளாகத்…

80’s நடிகர், நடிகைகள் கொண்டாடம்

எண்பதுகளில் கோலோச்சிய தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் கொரோனாவுக்குப் பிறகு முதன்முறையாக மும்பையில் சந்தித்த மகிழ்ச்சியைக் கொண்டாடினர். 1980களில் திரை வானில் தடம் பதித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தங்கள் நட்பைக் கொண்டாடி வந்தனர். ’80ஸ் ரீயூனியன்’…

காடுவெட்டி குருவின் வாழ்க்கை ’மாவீரா’ படமாகிறது…

கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றித் திரைப்படங்களுக்குப் பிறகு வ.கௌதமன் இயக்கும் புதிய படம் ‘மாவீரா’. படத்தை இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார் கௌதமன். எழுத்தாளர் நீலம் பத்மநாபன் எழுதிய ‘தலைமுறைகள்’ நாவலை ‘மகிழ்ச்சி’ என்ற திரைப்படமாகவும், மக்கள் டி.வி.யில் சந்தன வீரப்பனின் வரலாற்றை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!