விரைவில் வெளியாகும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண வீடியோ..!

 விரைவில் வெளியாகும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண வீடியோ..!

இயக்குநர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா திருமண வீடியோவின் வெளியீட்டுத் தேதியை நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமணம் கடந்த 2022 ஜூன் 9ம் தேதி மாமல்லபுரத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் என இந்திய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து திருமண புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்தத் திருமணத்தை ஆவணப்படுத்தி அதன் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்ததால் அதிகாரப்பூர்வமாக அந்நிகழ்வின் வீடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை. விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தின் ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை, பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) என்கிற பெயரில் உருவாக்கினர். அந்த வீடியோவின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

1 மணிநேரம் 21 நிமிடங்கள் கொண்ட விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண ஆவண வீடியோவை விரைவில் வெளியிட நெட்பிளிக்ஸ் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இந்த திருமண நிகழ்வு வீடியோ வருகின்ற நவம்பர் 18ம் தேதி வெளியாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...