பிளஸ் 1 பொதுத் தேர்வு | 96.02% பேர் தேர்ச்சியுடன் கோவை முதலிடம்..!

 பிளஸ் 1 பொதுத் தேர்வு | 96.02% பேர் தேர்ச்சியுடன் கோவை முதலிடம்..!

தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் 96.02% பேர் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதலிடமும், 95.56% பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2வது இடமும், 95.23% பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் 3வது இடமும் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியானது. இதில் 94% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியானது. இதில், 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7,534 பள்ளிகளை சேர்ந்த 3,89,736 மாணவர்கள், 4,30,471 மாணவிகள் என மொத்தம் 8, 20, 207 மாணவர்கள் எழுதினர். இதுதவிர, 5,000 தனித்தேர்வர்களும், 187 சிறை கைதிகளும் பிளஸ்-1 தேர்வை எழுதினார்கள்.

இந்நிலையில், இன்று (மே 14) காலை ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் – 1 தேர்வு முடிவுகள் இன்று 9.30 மணிக்கு வெளியானது. மொத்தம் 91.17% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தாண்டு மாணவர்களை விட மாணவிகள் 7.43% சதவிகிதம் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் 96.02% பேர் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதலிடமும், 95.56% பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2வது இடமும், 95.23% பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் 3வது இடமும் பெற்றுள்ளன.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...