குற்றால அருவிகளில்  குளிக்க அனுமதி..!| சதீஸ்

 குற்றால அருவிகளில்  குளிக்க அனுமதி..!| சதீஸ்

வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 5 நாட்களாக குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, இன்று முதல் மீண்டும் அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. எனவே, குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.

இந்நிலையில் 5 நாட்களுக்குப் பிறகு மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினம் மற்றும் ஐயப்ப சீசன் என்பதால் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் ஐயப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...