‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு 20 நாட்களுக்குள் தொகுதிப் பங்கீடு இறுதி செய்ய முடிவு..! | சதீஸ்

 ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு 20 நாட்களுக்குள் தொகுதிப் பங்கீடு இறுதி செய்ய முடிவு..! | சதீஸ்

‘இந்தியா’ கூட்டணியில் 20 நாட்களுக்குள் தொகுதிப் பங்கீடு இறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

2024 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட உருவாகியுள்ள ‘இந்தியா’ கூட்டணியின் நான்காவது கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை ( டிச. 19) நடைபெற்றது. இதில் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், அர்விந்த் கெஜ்ரிவால் , காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா உத்தவ் அணி தலைவர் உத்தவ் தாக்கரே உட்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற இந்த கூட்டத்தில், மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டன.

மேலும், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்கி இந்த மாத இறுதியில் முடிக்க வேண்டும் என்று கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியது. எனினும், தொகுதி பங்கீடு ஜனவரி 2-ஆம் வாரத்தில் முடிக்கப்பட்டு பிரசாரம் தொடங்கப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேற்கு வங்கத்தில் திரிணமூல், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, டெல்லியில் ஆம் ஆத்மி, தமிழ்நாட்டில் திமுக தலைமையில் கூட்டணி அமைக்க திரிணமூல் காங்கிரஸ் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...