நாளை தொடங்குகிறது “டாடா டெக்னாலஜிஸ் IPO”..! | நா.சதீஸ்குமார்
டாடா குழுமத்தை சேர்ந்த டாடா டெக்னாலஜிஸின் ஐ.பி.ஓ. நாளை 22ம் தேதி தொடங்குகிறது. இந்நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனம் பொறியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வடிவமைப்பு வர்த்தகத்தில் ஈடுபடுகிறது.
குறிப்பாக வாகனம், விண்வெளி மற்றும் போக்குவரத்து மற்றும் கனரக இயந்திர தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் ஐ.பி.ஓ. தான் கடந்த 20 ஆண்டுகளில் டாடா குழுமத்தின் முதல் ஐ.பி.ஓ. என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் ஐ.பி.ஓ.வில் களம் இறங்குவதற்காக அனுமதி வேண்டி கடந்த மார்ச் செபியிடம் ஆவணங்களை தாக்கல் செய்தது. கடந்த ஜூனில் செபி ஒப்புதல் அளித்தது. டாடா டெக்னாலஜிஸ் முதலில் ஐ.பி.ஓ.வில் 9.57 கோடி பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்து இருந்தது. ஆனால் பின்னர் அது 6.08 கோடி பங்குகளாக குறைக்கப்பட்டது.
இந்த ஆஃபர் பார் சேல் மூலம் புரோமோட்டர்ஸ் மற்றும் ஏற்கனவே உள்ள பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை வெளிப்படையான முறையில் குறைக்கின்றனர். இதன்படி டாடா மோட்டார்ஸ் 4.62 கோடி பங்குகளையும், ஆல்பா டி.சி. ஹோல்டிங்ஸ் 97.1 லட்சம் பங்குகளையும், டாடா கேபில் க்ரோத் பண்ட் 48 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளன.
டாடா டெக்னாலஜிஸ் ஐ.பி.ஓ.வில் தற்போது முன் விண்ணப்பிக்கும் முறையின்கீழ் பங்குகள் கோருவதற்கு திறக்கப்பட்டுள்ளது. அதன் பங்குகள் க்ரே மார்க்கெட்டில் ரூ.340-345 ப்ரீமியத்தை கோருகின்றன. இது பங்கு வெளியீட்டு விலையான ரூ.475-500ஐ காட்டிலும் 70 சதவீதம் அதிகமாகும்.
டாடா டெக்னாலஜிஸ் ஐ.பி.ஓ.வில் தற்போது முன் விண்ணப்பிக்கும் முறையின்கீழ் பங்குகள் கோருவதற்கு திறக்கப்பட்டுள்ளது. அதன் பங்குகள் க்ரே மார்க்கெட்டில் ரூ.340-345 ப்ரீமியத்தை கோருகின்றன. இது பங்கு வெளியீட்டு விலையான ரூ.475-500ஐ காட்டிலும் 70 சதவீதம் அதிகமாகும்.
ப்ரீமியம் விலை என்பது பங்கின் வெளியிட்டு விலை காட்டிலும் உயர்ந்த விலை. ஐ.பி.ஓ.வில் பங்கு வெளியிட்டு விலை நிர்ணயம் செய்வது போல், க்ரே மார்க்கெட்டிலும் உயர்தர ப்ரீமியம் விலை நிர்ணயம் செய்யப்படுவது வாடிக்கை.
டாடா டெக்னாலஜிஸ் கடந்த 2021-22ம் நிதியாண்டில் மொத்த வருவாயாக ரூ.3,578 கோடியும், லாபமாக ரூ.436 கோடியும் ஈட்டியிருந்தது. 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் இந்நிறுவனம் லாபமாக ரூ.407 கோடி ஈட்டியுள்ளது.