சீனாவை மிரளவைத்த இந்தியா., ரிஷிகேஷியில் மலையை குடைந்து 105 கிமீ சுரங்க பாதை..!
115 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதையிலேயே பயணம் செய்தால் எப்படி இருக்கும்.. யோசித்து பாருங்கள்.. நினைத்து பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கிறதா,. அப்படி ஒரு விஷயத்தை இந்தியா செய்திருக்கிறது. ரிஷிகேஷியில் தான் இப்படியான அதிசயம் நடந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் இந்தியாவின் முக்கியமான ஆன்மீக நகரம், மிகவும்புகழ் பெற்ற இந்த நகரில் இருந்து கர்ணபிரயாக் பகுதியை இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது
இமயமலை நகரமான ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் பாதைத் திட்டம் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் கனவுப் பாதைத் திட்டம் ஆகும். தற்போது ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் பாதை திட்டம் மிக வேகமாக நடந்து வருகிறது. இந்த திட்டம் 125 கிலோமீட்டர் நீளம் கொண்டது, சுமார் 105 கிலோமீட்டர்கள், ஒரு சுரங்கப்பாதை வழியாக செல்கிறது. இது கட்டி முடிக்கப்பட்டால், நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையாக இது மாறும் என்று சொல்கிறார்கள்.
டேராடூன், தெஹ்ரி கர்வால், பவுரி, ருத்ரப்ரியாக் மற்றும் சாமோலி ஆகிய ஐந்து மாவட்டங்களுடன் தேவ்பிரயாக், ஸ்ரீநகர், ருத்ரபிரயாக் மற்றும் கௌச்சர் கர்ன்பிரயாக் ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
6 ஆண்டுகளுக்கு 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மதிப்பு இப்போது 16,200 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது . மலைப்பகுதிகளில் ரயில் பாதை அமைக்க தேவையான நிலங்களை வாங்கவும், கான சுற்றுச்சூழல் அனுமதிக்காகவும் வனத்துறை அனுமதி அளிக்க தாமதித்த காரணத்தால் திட்டத்தின் மதிப்பீடு மிகப்பெரிய அளவில் உயர்ந்துவிட்டதாக கூறுகிறார்கள்.
125 கிலோ மீட்டர் பயணத்தில் 105 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலைகளை குடைந்து பிரம்மாண்டமாக சுரங்கமாக அமைக்கப்படும் இந்த ரயில் பாதையின் பணிகள் கிட்டத்தட்ட 41 சதவீதம் முடிந்து விட்டதாம். இந்த பாதையில் 3 முக்கியமான ரயில் பாலங்கள் வருகிறதாம். 3 முக்கியமான சாலைபாலங்கள் இருக்கிறதாம். இதுதவிர 25 சிறிய சிறிய பாலங்கள் இருக்கிறதாம். இந்த ரயில் பாதை முற்றிலும் நிறைவடைந்து ரயில்கள் இயக்கப்பட்டால் ரிஷிகேஷ் மற்றும் கர்ன்பிரயாக் இடையே தற்போது 7 மணி நேர பயண நேரம் 4 மணி நேரமாக குறையுமாம்.
இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால், அதில் ரிஷிகேஷ், டேராடூன், ஸ்ரீநகர் (காஷ்மீர் அல்ல) , தெஹ்ரி, ஷிவ்புரி ஆகிய இடங்களில் ரயில் நிலையம் அமையும். டெஹ்ரி, பவுரி, ருத்ரபிரயாக் சமோலி ஆகிய மாவட்டங்களிலும் ரயில் நிலையங்கள் அமைய உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் ரயில்களின் வேகம் 100 கிமீ ஆக இருக்கும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டால் சுற்றுலா துறை மிகப்பெரிய வளர்ச்சி பெறும். அத்துடன் இமயலை பகுதி மக்களுக்கு பல நன்மைகள் வந்து சேரும் என்கிறார்கள். வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்கிறார்கள். பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தான் இந்த ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை முழுமையாக முடிக்க 30 வருடங்கள் ஆகும் என்று பிரதமர் நரேந்திர மோடியே தெரிவித்திருக்கிறார். இவ்வளவு காலம் எடுக்கக்கூடிய இந்த பணிகளை ரயில்வே துறை மிகவேகமாக செய்து வருகிறது.
இந்தியா-சீனா எல்லையில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் மத்திய அரசு, அதன் ஒரு பகுதியாகவே இந்த சுரங்க ரயில்பாதையை இமயமலையில் அமைத்து வருகிறது. பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் திடீரென சண்டைக்கு வந்தால் அவற்றை எதிர்கொள்ள போதிய ராணுவ வீரர்களை அனுப்ப வேண்டும். தளவாடங்களையும் அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில் பாதைத் திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.