ஓரளவு குறைந்தது தக்காளியின் விலை..!

 ஓரளவு குறைந்தது தக்காளியின் விலை..!

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு இடங்களில் தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து திடீரென உச்சம் தொட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.200யை கூட கடந்து மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அதன்பிறகு சில நாட்களாக குறைந்து வந்த தக்காளி விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. தற்போது பல இடங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.150யை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் தக்காளி விலை என்பது உச்சத்தில் தான் உள்ளது.

இதனால் அனைத்து தரப்பு மக்களும் பிரச்சனையை எதிர்கொண்டனர். மத்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசும் விலையேற்றத்தை தடுக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளன. கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை அதிகரித்து வந்தது. தங்கம் விலை போல தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் இல்லத்தரசிகள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கடந்த சில தினங்களாக, தக்காளி விலை ரூ.200-க்கும் மேல் விற்கப்பட்டது.

இந்த நிலையில், தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 500 ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது தக்காளி வரத்து அதிரித்துள்ள நிலையில், தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, கோயம்பேடு சந்தையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தக்காளி விலை ரூ.100க்கு கீழ் குறைந்துள்ளது. முதல் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.10 குறைந்து, ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல், 2-ஆம் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.20 குறைந்து, ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வாரத்திற்கு பின் தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த தக்காளியின் விலை குறைவு என்பது மக்களுக்கு ஓரளவு நிம்மதியை கொடுத்துள்ளது. இருப்பினும் வேறு சில காய்கறிகளின் விலை என்பது தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. அதன்படி இஞ்சி கிலோ ரூ.210க்கும், பூண்டு கிலோ ரூ.210க்கும், பட்டாணி கிலோ ரூ.160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வண்ண குடமிளகாய் ரூ.180க்கும், பீன்ஸ் ரூ.100க்கும், சின்ன வெங்காயம் ரூ.90க்கும், அவரைக்காய், பச்சை குடமிளகாய், வாழைத்தண்டு உள்ளிட்டவை தலா ரூ.60க்கும் விற்பனையாகிறது. எலுமிச்சை, பீர்க்கங்காய், ஊட்டி கேரட், பச்சை மிளகாய் உள்ளிட்டவை கிலா ரூ.50க்கும், காராமணி, பாகற்காய், சேனைக்கிழங்கு கிலோ ரூ.45க்கும், உஜாலா கத்தரிக்காய், வரி கத்தரி, சேமங்கிழங்கு உள்ளிட்டவை கிலோ ரூ.40க்கும் விற்பனையாகிறது. ஊட்டி பீட்ரூட் ரூ.38 க்கும், முருங்கை, வெண்டை ரூ.35க்கும், உருளை ரூ.32க்கும், காலிபிளவர் ரூ.30க்கும், கர்நாடகா பீட்ரூட், தேங்காய் ரூ.27 க்கும், வெங்காயம் ரூ.24க்கும், முட்டைகோஸ் ரூ.20க்கும், முள்ளங்கி ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...