​செயிண்ட்​ மேரீஸ் பள்ளியின்​பொங்கல் திருவிழா…..!

 ​செயிண்ட்​ மேரீஸ் பள்ளியின்​பொங்கல் திருவிழா…..!

இன்று காலை 11-1-2023 செயிண்ட் மேரீஸ் பள்ளி பொங்கல் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடியது. பிரமாண்டமும், பழமையும் ஒருங்கே இணைந்த உற்சாகமான மதசார்பற்ற பொங்கல் விழா. இயல்பாகவே பண்டிகைகள் நம்மை புத்துணர்ச்சி பெற வைக்கும். அதிலும் ஒரு கிராம சூழலில் நம் கலாச்சார பொங்கல் விழாவை கண்முன் நிறுத்திவிட்டார்கள். புகையில்லா போகி என்ற பதாகைகளை கரங்களில் சுமந்த பிள்ளைகள் சுமந்தவண்ணம், பிரம்மாண்டமான யானை அணிவகுக்க, ரெட்ஹில்ஸ் உதவி காவல் ஆணையர் திரு. முருகேசன் அவர்கள் விழாவை துவங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக திரு. ராபர்ட் வணிக சங்க தலைவர், எழுத்தாளர் மற்றும் மின்மினி பத்திரிக்கையின் பப்ளிஷர் திருமதி.லதாசரவணன். திரு.ஷபீர்நாசீர், திரு.முகமது பாரூக், திரு.கண்ணன், திரு.சன்லைட் முகமது ஆசீப், திரு. ராஜபாரதி,பாஸ்டர். செல்லதுரை, திரு.ஹரி பாலகிருஷ்ணன், திரு. குமரேசன், திரு.மோகன்குமார், திரு. முனுசாமி, திரு. கார்த்திக், திரு. எட்வர்ட்ராஜா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

பள்ளியின் தாளார் திரு.மார்ட்டின் கென்னடி, மற்றும் பிரின்ஸிபால் திருமதி.ஜெயந்தி அவர்களின் விழா ஏற்பாடுகள் மிகவும் அருமையாக இருந்தது. விழாக் கொண்டாட்டங்களோடு வெகு சிறப்பாக வருங்கால சந்ததிகள் மட்டுமன்றி அந்த பகுதி மக்கள் அனைவருக்குமே புகையில்லா போகி கொண்டாட்டத்தின் விழிப்புணர்வை பேரணியாய் நடத்திக் காட்டியமை வெகுவாய் பாராட்டக் கூடியது.

வெறும் பள்ளிப் படிப்பு என்று மட்டும் விடாமல், அடிக்கடி பிள்ளைகளை ஊக்குவிக்கும் வண்ணம் கலை நிகழ்வுகள், அதைத்தாண்டி சமூக அக்கறை உள்ள விஷயங்களை விதைக்கும் செயிண்ட் மேரீஸ் தாளார் திரு மார்ட்டின் கென்னடி அவருக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

விழாவில் ரசித்த விஷயங்கள்…..!

பண்டிகை கொண்டாட்டங்களில் பழமையான முறையே சிறந்தது. நமது பாராம்பரிய வாழ்க்கை முறையினை எப்படி கடை பிடிக்க வேண்டும் என்பதை பள்ளி மாணவி வெகு அழகாக மூன்று நிமிட உரை நிகழ்த்தினார். நடன நிகழ்வுகளில் பொங்கல் அன்று சூரியநமஸ்காரம் முதல் நான்கு நாள்களில் நடைபெறும் வீர விளையாட்டுகள், வழிபாட்டு முறைகள், மக்களின் கேளிக்கைகள் என்று அனைத்தையும் முன்னிருத்தி விட்டார்கள் நடனமாடிய பிள்ளைகள்.

பழமையும் புதுமையும் இணைந்த இக்காலத்தையும் விடவில்லை ஒரு நடன நிகழ்வு ஆரம்பித்ததில் இருந்து ஒரு பையன் செல்போனில் எல்லாவற்றையும் செல்பி எடுத்துக் கொள்வதைப் போலவும், இறுதியில் அந்த போனை கீழே போட்டு இயல்பான உணர்வோடு மக்களோடு இணைந்து போவதையும் அழகாக கண்முன் காட்டினார்கள்.

பிள்ளைகளின் ஈடுபாடு,விழா ஏற்பாடு, கொண்டு போன விதம் எல்லாவற்றிற்கும் ஆசிரியர்கள், பங்கு பெற்ற மாணவர்கள், கண்டுகளித்த பெற்றோர்கள். இதையும்தாண்டி கலந்து கொண்டு அனைத்துப் பிள்ளைகளுக்கும் பராபட்சம் பாராது பரிசு பொருட்கள் வழங்கிய பள்ளி நிர்வாகம் என பொங்கல் விழா களைகட்டியது.

அடுத்த விழா எப்போது என்ற ஏக்கத்தை உண்டு செய்தது என்றால் மிகையாகாது. நல்ல தலைமையின் நிழலாய் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்கிறது என்பதற்கு சிறப்பான உதாரணமாய் முன்னாள் பள்ளி மாணவர் திரு.ஷபீர் நாசீர்.

வாழ்த்துகள் அனைவருக்கும். மனநிறைவான விழா……

லதா சரவணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *