தடுப்பூசி போட்டு கொண்ட ஷிவாங்கி, புகைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து உருகும் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சி ’குக் வித் கோமாளி’ புகழ் ஷிவாங்கி தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராமில் சமூக தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்த சற்று நேரத்திலேயே 4 லட்சத்து 75ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர் மேலும் ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் செய்துள்ளனர். இதில் அதிகமான ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு தனக்கே ஊசி போட்டு கொள்ளும் மனநிலையில் இருந்து ஏராளமான கமெண்ட்களை மிகவும் உணர்ச்சிகரமாக தெரிவித்து உள்ளனர்

கொரோனா வைரஸில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள பொதுமக்கள் தடுப்பூசி போடுவது கட்டாயம் என அரசு வலியுறுத்துவதைத் தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றார்கள் என்பது நல்ல விஷயமாகத்தான் தெரிகிறது, அதே வரிசையில் ’குக் வித் கோமாளி’ புகழ் ஷிவாங்கியும் தடுப்பூசி புகைப்படத்தை பதிவு செய்திருப்பது ரசிகர்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படும் என்பதில் ஐயமில்லை.