இரண்டாவது தவணை கொரோனா நிவாரண தொகை ரூ 2ஆயிரத்துடன் 13 மளிகை பொருட்கள் விநியோகம் இன்று தொடக்கம்

கொரோனா நிவாரண தொகை
கொரோனா நிவாரண தொகை இரண்டாவது தவணை ரூ 2ஆயிரத்துடன் 13 மளிகை பொருட்கள் விநியோகம் தொடக்கம் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் கொரோனா நிவாரணமாக ரூ 4ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்

முதல் கையெழுத்து
அந்த அறிவிப்பின் படி ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரண நிதிக்கு முதல் தவணையாக ரூ2ஆயிரம் வழங்கப்படும் அதனைத்தொடர்ந்து ஜூன் மாதம் கலைஞர் பிறந்த நாள் அன்று ரூ 2ஆயிரம் வழங்கப்படும் என்ற அரசாணைக்குத்தான் தனது முதல் கையெழுத்தை இட்டார். அதன்படி போன மாதம் முதல் தவணை ரூ 2ஆயிரம் வழங்கப்பட்டுவிட்டது.

13மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு
அதனைத் தொடந்து அரிசி அட்டைதாரா்களுக்கு 13மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் விலையின்றி கொடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்து இருந்தார் அதன்படி இன்றைய தினம் இரண்டாவது தவணைத்தொகை ரூ 2ஆயிரம் மற்றும் 13மளிகை பொருட்கள் தொகுப்பையும் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்த நாள்
முன்னால் முதல்வரும் இன்றைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தந்தையுமான கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் இன்று விமரிசையான தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது எனவே இன்று கலைஞரை கௌரவிக்கும் முகமாக இன்று மேற்கண்ட வினியோகத்திற்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்குகிறது
13மளிகை பொருட்கள் கொண்டதொகுப்பின் விபரம்
1) கோதுமை மாவு – 1 கிலோ
2) சர்க்கரை – 500 கிராம்
3) உப்பு – 1 கிலோ
4) உளுத்தம் பருப்பு – 500 கிராம்
5) மஞ்சள் தூள் – 100 கிராம்
6) புளி – 250 கிராம்
7) கடலை பருப்பு – 250 கிராம்
8) சீரகம் – 100 கிராம்
9) மிளகாய் தூள் – 100 கிராம்
10) கடுகு – 100 கிராம்
11) ரவை – 1 கிலோ
12) (125 கிராம்)குளியல் சோப்பு 1
13) (250கிராம்)துணி சோப்பு 1
மேற்கண்ட இந்த விலையில்லா மளிகைத் தொகுப்பு சுமார் 2.09 கோடி பயனாளர்களுக்கு கிடைக்கும் என தெரிகிறது..
1 Comment
நல்ல முயற்சி… தொடரட்டும் மக்கள் பணி !