உங்களை நீங்களே கேள்வி கேட்டு கொள்ளுங்கள்…..

 உங்களை நீங்களே கேள்வி கேட்டு கொள்ளுங்கள்…..

மனித வாழ்கையை புரட்டிப் போட்ட ஒரு சில மந்திரச் சொற்கள் உண்டு…!

யாரெல்லாம் இவைகளை உச்சரித்து உணர்ந்து இருந்தார்களோ, அவர்கள் தாங்கள் வேண்டியதை பெற்று கொண்டார்கள்!, பெற்றுக் கொள்வார்கள், நாளை பெறவும் பெறுவார்கள், இது வரலாறு மட்டுமல்ல, நிகழ்கால உண்மையும் கூட…!

மனிதன் தனக்கு முன்வரும் எல்லா நிகழ்வுகளையும் இந்தச் சொற்களைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கவே இந்த அற்புத மந்திரச் சொற்கள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டன…

இவைகளை பயன்படுத்தியவர்கள் வாழ்க்கையை பொருட்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தார்கள்…

•உலகில் தோன்றிய தத்துவ ஞானிகள்…

•உலகை மாற்றி அமைத்த அறிவியல் மேதைகள்…

•செல்வத்தை வான் மழையென கொட்ட செய்த தொழில் மேதைகள்…

•உடல் நோயை ஒழித்த மருத்துவ மேதைகள்…

 - என பலரும் ஒவ்வொரு தருணத்திலும் இந்த மந்திரச் சொற்களை பயன்படுத்தி தாங்கள் வாழ்க்கையில் வெற்றி கண்டார்கள்...

ஆனால்!, நம்முடைய சாமான்ய வாழ்க்கையிலும், நமக்கு வேதனைகளும், சோதனைகளும் வரும் போது, நம்மில் பெரும்பாலோர் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது இல்லை…

மாறாக, பரிகாரம் தேடி மாற்றுப் பாதையை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்…

உண்மையில் நாம் கலங்கும் போது இந்தச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கின்றோமா…? நாம் தோற்று நிற்கும்போது ஏன் இந்த நிலை என கேட்கிறோமா…?

நம்மை மற்றவர்கள் ஏமாற்றி விட்டாதாக ,நம்பிக்கை துரோகம் செய்து விட்டாதாக நாம் புலம்பும்போது ஏன் இந்த நிலை என கேட்பதில்லை…!

நாளைய நமது பாதைகளின் இலக்குகளை நாம் தீர்மானிக்க தவறுகிறோம்…

பூட்டிய வீட்டின் கதவின் பின் நிற்பது போல் நாம் செய்வதறியாது மலைத்து நிற்கிறோம்…

உண்மையில் வரலாற்றின் பக்கங்களிலும், நிகழ்கால வெற்றிகளையும் கொண்டு வந்த ஒரே ஆதாரம் நிறைந்த மந்திரச் சொற்கள்தான் இவைகள்…

ஆம் நண்பர்களே…!

மீண்டும் உங்கள் முன் எந்தவொரு கேள்விக்கும், சோதனையான தருணத்திற்கும் மலைத்து போய் நின்று விடாதீர்கள், மாறாக!, உரக்க உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்…!

ஏன்…? எப்படி…? எவ்வாறு…? எதனால்..? – என்ற இந்த மந்திரச் சொற்களைப் பயன்படுத்தி உங்களை நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்…!!

தீராத தேடல் உங்களை தொற்றிக் கொள்ளட்டும்.

உங்களுடன் சேர்ந்து தேடலுடன்,
மண்ணச்ச நல்லூர் பாலசந்தர்

லதா சரவணன்

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *