நிலவை எச்சரித்த கரடிக்குட்டி

கரடிக்குட்டி நடக்க நடக்க நிலா கூடவே வருது. அது எப்படி எனக் கதையாக வினயன் சொல்றாரு கேட்கலாமா
முதுகொடியும் புத்தக சுமைகள், ஈரேழு மொழிகளில் திறன் வளர்த்துக் கொள்ள துடிக்கும் இளம் சிறகுகளை இழுத்துக் கட்டிய தூணாய் பயமுறுத்திய பள்ளிகள். இப்போது எல்லாம் மறைந்து கையடக்க செல்போனில் ஆன்லைன் வகுப்புகள் இந்த மனச்சுமைகளுக்கு மருந்தாய் தான் நண்பர் கன்னிக்கோவில் ராஜா அவர்கள் நடத்தும் லாலிபாப் கதைகள் YOU TUBE சானல் இருக்கிறது.
குழந்தைகளுக்கு கதைகள் கேட்பது மட்டும் அல்ல சொல்லவும் பிடிக்கும். அவர்களின் உடல்மொழியும், வாய்மொழியும் சேர்ந்து விவரிக்கும்போது புது அனுபவமாய் இருக்கிறது.
இனி வரும் வாரங்களில் மின்கைத்தடியில் அக்குழந்தைகளின் கதையும் கருத்துக்களும்.