தளபதி 65

மாஸ்டர் திரைப்படம் கூடிய விரைவில் கொரானா தாக்கம் குறைந்த பிறகு படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்பின் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது படத்தை நடிக்க போகிறார். விநாயகர் சதுர்த்தி அன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.
இப்படத்தின் முழு பட்ஜெட் 130 கோடி என்றும் அதில் விஜயின் சம்பளம் 70 கோடி மற்றும் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸின் சம்பளம் 10 கோடி என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மாஸ்டர் படம் வெளிவந்த அடுத்த மாதம் துவங்கும் என தற்போது கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தளபதி 65 படத்தின் முழு படப்பிடிப்பும் நம் சென்னை சுற்றி உள்ள வட்டாரங்களில் தான் எடுக்க போகிறார்களாம் என்றும் தகவல்கள் உள்ளன.
மேலும் இப்படம் துப்பாக்கி 2 கிடையவே கிடையாது இது முழுக்க முழுக்க ஒரு புதிய கதை தான் என சில தரப்பிடம் இருந்து தெரியவந்துள்ளது.