“மன்னிப்பு கேட்டால் விடுதலை” | மறுத்த​ “நெல்சன் மண்​டேலா” பிறந்த தினம்

 “மன்னிப்பு கேட்டால் விடுதலை” | மறுத்த​ “நெல்சன் மண்​டேலா” பிறந்த தினம்

Former South African President Nelson Mandela, one of the world’s most respected statesmen, died Thursday at 95.

நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு 18ம்நாள் ​தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை  ​சோசா பழங்குடி இன மக்கள் தலைவர் ஆவார்[1]. இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் ‘நெல்சன் ரோபிசலா மண்டேலா’. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரின் சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் பெற்றார்.

முதன் முதலில் பள்ளி சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடுமாடு​மேய்த்தபடி​யே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள “நெல்சன்” இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1941 ஆம் ஆண்டு ​பகுதி​ நேரத்தில் சட்டக்கல்வி படித்து தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.

அப்போது ‘நோமதாம் சங்கர்’ என்ற செவிலியரைத்திருமணம்​செய்து​கொண்டாலும் இயக்கத்தின்​ மேலுள்ள பற்றால் கருத்து​ வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர் அதன் பின்னர் 1958 ல் வின்னி மடி கி​லேனா என்பவ​ரைமணந்தார்​நெல்சன் மண்​டேலா ஆப்பரிக்க ​தேசிய காங்கிரஸ் கட்சி​யை​தென்னாப்பிரிக்க கட்சி​யைத் த​டை​செய்த ​தென்னாப்பிரிக்கா அரசு அவர்​ மேல் வழக்கு ​தொடர்ந்து ஐந்தாண்டுகள் அது நடந்தும் வந்தது

இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார். கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான “ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்” என்ற கட்சியின் முதன்மை பொருப்புக்கு வந்தார். அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார். இவரின் தலைமையில் அரசின் இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப் போராட்டங்கள் முளையெடுக்க ஆரம்பித்தன. இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என கைது செய்தது.

ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயற்பட்டார். இதன் காரணமாக 1960 களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960 இல் ஆபிரிக்கர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை சார்ப்பிவில் நகரில் நடத்தினார். பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு திசம்பர் 5ல் தேசத்துரோகக் குற்றம் சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரின் 150 வரையான தோழர்களும் கைது செய்யப்பட்டனர். நெடிய சட்ட போராட்டத்திற்கு பிறகு 1961இல் அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

மண்டேலா 1962இல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.

மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை  ராபன் தீவில் ​ சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய ​தென்னாப்பிரிக்கா குடியரசாக மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். அமைதிக்கான ​நோபல் பரிசு ​பெற்றார்

லதா சரவணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *