​”பொண்ணுமணி” நாயகியின் பிறந்ததினம்

 ​”பொண்ணுமணி” நாயகியின் பிறந்ததினம்

பொன்னுமணி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கண்ணுமணியாக அறிமுகமானவர் செளந்தர்யா. தமிழில் முண்ணனி நடிகர்களுடன் ஜோடி போட்டவர். அம்மன் படத்தில் அவரின் அற்புதமான நடிப்பே அருணாச்சலம் படத்தில் ரஜினியுடன் அவரை ஜோடி போட வைத்தது. தொடர்ந்து படையப்பா, காதலா காதலா, தமிழ், தெலுங்கு கன்னடம் என அடுக்கிக்கொண்டே போனார்.

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி ரம்யாகிருஷ்ணன் என பலரும் நடித்துள்ளனர். இப்படம் 1996-ல் வெளியாகிய படங்களின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது

வெற்றிகளின் சிறகுகள் அவரை அணைத்துக் கொண்டு இருந்தது. ஆப்தமித்ராவில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

விக்ரமும் நடித்த ஒரு தெலுங்கு படம் ஒன்றில் படிக்காத கிராமத்துப்பெண் தன் கணவனின் உயிரைக் காக்க வாடகைத்தாயாய் மாறவேண்டிய சூழல் விபத்தில் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த கணவனை காப்பாற்றினால், அவன் அவளை சந்தேகித்து அவளுடன் வாழ மனமின்றி விவாகரத்து கேட்க, அந்த கடைசி நீதிமன்ற காட்சியில் ஒட்டுமொத்த பெண்களுக்காகவும் அழகாக வாதிட்டு இருப்பார்.

அற்புதமான ஒருநடிகை கண்களே பேசும் சினிமா, திருமணம் குடும்பம் என்று வாழ்ந்த அவரின் பார்வை அரசியல் பக்கம் திரும்பியது ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் அவர் இறந்து போனார். கர்ப்பவதியாக அந்த விபத்தில் அவர் இறந்தது உச்சபட்ச ​சோகம்

செளந்தர்யாவின் பிறந்த தினம் இன்று

லதா சரவணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *