`ஃபேர் அண்ட் லவ்லி`யில் உள்ள ஃபேர் என்ற வார்த்தை நீக்கப்படும்

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜியார்ஜ் ஃபிலாய்ட் மரணத்தைத் தொடர்ந்து உலகெங்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றன. இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் பிரபலமான தங்களின் இரு க்ரீம்களை தயாரிக்கவோ அல்லது விற்கவோ போவதில்லை எனத் தெரிவித்தது.
“எங்களின் சில விற்பனை பொருட்களின் பெயர்களும், அதுகுறித்த கூற்றுகளும் உங்களின் நிஜமான நிறத்தைக் காட்டிலும் வெள்ளை நிறமே சிறந்தது என்று கூறுவதாகப் போல உள்ளது என கடந்த சில வாரங்களாக விமர்சனங்கள் எழுகின்றன. இது எங்களின் நோக்கம் அல்ல. – ஆரோக்கியமான சருமமே அழகான சருமம்,” என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஃபேர் அண்ட் லல்வி நிறுவனம் முதன்முதலில் 1970ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த காலத்திலிருந்து பதின் வயது மற்றும் இளம் பெண்கள், வெள்ளையாக இருப்பது என கருதப்படுவதால் மில்லியன் கணக்கான ட்யூப்களை வாங்கியுள்ளனர்.
வெள்ளையாக இருந்தால் உங்களுக்கு காதல்த் துணை கிடைக்கும் அல்லது ஒரு வசீகரமான ஒரு வேலை கிடைக்கும் என கூறும் ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரங்களில் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
வியாழனன்று காலை ஃபேர் அண்ட் லவ்லி டிவிட்டரில் இந்திய அளவில் டிரண்டானது. பல ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்தையும் அதன் விற்பனையையும் தடை செய்ய வேண்டும் என கோரினர்.
”ஃபேர், ஒயிட் மற்றும் லைட் என்ற வார்த்தைகளை அழகு என்ற வார்த்தையுடன் அடையாளப்படுத்தியது தவறு என யூனிலீவர் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அட்டைப்பெட்டியில் தோலின் நிறத்தின் அளவைக் குறிக்கும் அளவுகோல், மற்றும் விளம்பரங்களில் கிரீமை பயன்படுத்துவதற்கு முன்,பின் ஒப்பீடு என கடந்த சில வருடங்களில், ஏற்கனவே சில மாற்றங்களை நிகழ்த்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்காலங்களில், பல நிறங்களில் உள்ள பெண்கள், இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள அழகை குறிக்கும் வகையில் விளம்பரங்கள் இருக்கும் என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
”இது உண்மையில் மாற்றத்திற்கு வழி வகுக்கும் ஒரு நல்ல முடிவு தான் ஆனால் இது எங்கள் நோக்கம் நிறைவேறுவதற்கான முதல் படி மட்டுமே,” என இதற்கான கோரிக்கையை எழுப்பிய ஆர்வலர்களில் ஒருவரான சந்தனா ஹிரன் பிபிசியிடம் தெரிவித்தார்.
அவர்கள் தங்கள் தயாரிப்பை விற்கப்போகும் விளம்பரத்தை தான் மாற்றியுள்ளனர் ஆனால் அதே தயாரிப்பு தான்.
எனவே ஒரு கிரீமை எப்படி அழைக்கிறோம் என்பது முக்கியமல்ல.
மேலும் நூற்றாண்டு காலமாக அழைத்து வந்த பெயரை மாற்றினால், தங்கள் சரும நிறம் குறித்து மக்களின் மனநிலையும் புரிதலும் மாறிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.