பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை, மகள் கைது..!!!

2 years ago
290

புல்வாமா தாக்குதல்:

    ஜம்மு: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை மற்றும் மகளை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.


    கடந்தாண்டு பிப்ரவரியில், காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள துணை ராணுவப் படை முகாமில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

      இந்த  கொடூர தாக்குதலில் ஈடுபட்டது, தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த அடில் அகமது தர் என்பது பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோ மூலம் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பிப்.,28 ல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் காடுத்த ஷாகீர் பசீர் என்பவன் கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பீர் தாரிக் மற்றும் அவரது மகள் இன்ஷா ஆகியோரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள், புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930