வேலூர்: ‘உரிமம் இல்லாத கேன் குடிநீர் ஆலைகளை மூட வேண்டும்’ என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாகச் செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் 40 குடிநீர் ஆலைகள் உள்ளன. அதில், மூன்று ஆலைகள் மட்டுமே நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற்றுள்ளன. மீதமுள்ள 37 ஆலைகளும் மூடப்பட்டு வருகின்றன’ என்றார்.
Copyright 2019 மின்கைத்தடி
Design And developed By WPSmart