மேற்கு வங்கத்தில் 9 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு….!!

 மேற்கு வங்கத்தில் 9 வெடிகுண்டுகள் கண்டெடுப்பு….!!

மேற்கு வங்கத்தில் சுகாதார மையத்தின் வெளிப்பகுதியில் சுமார் 9 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  பிர்பும் எனுமிடத்தில் போல்பூர் பகுதியில் அமைந்துள்ள சிங்கி எனும் கிராமத்தில் உள்ள சுகாதார நிலையத்தின் வெளியே சிறிய வகை வெடிகுண்டுகளை போலீஸார் புதன்கிழமை கண்டெடுத்தனர்.

  ரகசிய தகவலின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அந்தப் பகுதியில் வெடிகுண்டுகளை வைத்தவர்கள் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இருப்பினும் இதுகுறித்து வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 

admin

Leave a Reply

Your email address will not be published.