இன்றைய ராசி பலன்கள் – 04-02-2020 -செவ்வாய்க்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம்
உறவினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். வர்த்தகம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். வாடிக்கையாளர்களின் மூலம் புதுவிதமான அறிமுகம் மற்றும் அனுபவம் கிடைக்கும். மனை சார்ந்த விஷயங்களின் மூலம் பொருளாதாரம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : பொருளாதாரம் மேம்படும்.
—————————————
ரிஷபம்
செய்யும் முயற்சிகளுக்கேற்ற சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
ரோகிணி : மாற்றம் பிறக்கும்.
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
—————————————
மிதுனம்
குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனுசரித்து செல்லவும். உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். பயணங்கள் மேற்கொள்ளும்போது உடைமைகளில் கவனம் வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பதன் மூலம் உங்களின் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
திருவாதிரை : விழிப்புணர்வு வேண்டும்.
புனர்பூசம் : மதிப்பு அதிகரிக்கும்.
—————————————
கடகம்
உடல் தோற்றப்பொலிவிற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். சபைகளில் எதிர்பார்த்த ஆதரவுகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இணையதளம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். 
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : தெளிவு பிறக்கும்.
ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.
—————————————
சிம்மம்
வாழ்க்கை பற்றிய புரிதல் மற்றும் புதுவிதமான கண்ணோட்டங்களும் மனதில் தோன்றும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் அதிகரித்தாலும் சாதகமான வாய்ப்புகள் அமையும். அரசு சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு சில இழுபறியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மகம் : புரிதல் ஏற்படும்.
பூரம் : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திரம் : இழுபறியான நாள்.
—————————————
கன்னி
உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். திறமைக்கு உண்டான அங்கீகாரமும், செல்வாக்கும் மேம்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப பெரியவர்களின் மூலம் குழப்பங்கள் நீங்கி தெளிவு பெறுவீர்கள். 
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : செல்வாக்கு உண்டாகும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : தெளிவு பிறக்கும்.
—————————————
துலாம்
தொழில் சார்ந்த துறையில் இருப்பவர்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ளும்போது சிந்தித்து செயல்படவும். அரசு பணி சார்ந்த முயற்சிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் மனக்கவலைகள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
சுவாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
விசாகம் : அமைதி வேண்டும்.
—————————————
விருச்சகம்
நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் புதிய நபர்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். தம்பதியினருக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : அன்பு அதிகரிக்கும்.
அனுஷம் : முன்னேற்றமான நாள்.
கேட்டை : சாதகமான சூழல் அமையும்.
—————————————
தனுசு
இழுபறியாக இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு கிடைக்கும். பாகப்பிரிவினையின்போது சற்று நிதானத்துடன் செயல்படவும். தாய்மாமன் உறவுகளிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மூலம் : இழுபறிகள் நீங்கும்.
பூராடம் : தெளிவு கிடைக்கும்.
உத்திராடம் : நிதானத்துடன் செயல்படவும்.
—————————————
மகரம்
கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த உடைகளை வாங்கி மனம் மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
திருவோணம் : முயற்சிகள் ஈடேறும்.
அவிட்டம் : மாற்றம் உண்டாகும். 
—————————————
கும்பம்
புதிய வாகனம் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். மனை சார்ந்த பத்திரங்களை கையாளும்போது நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : எண்ணங்கள் மேம்படும்.
சதயம் : உதவிகள் கிடைக்கும்.
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
—————————————
மீனம்
பூர்வீக சொத்துக்களின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். இளைய உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் மேம்படும். சக ஊழியர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.
ரேவதி : நம்பிக்கை அதிகரிக்கும்.
————————————

 – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published.