• ராசிபலன்
  • இன்றைய ராசி பலன்கள் – 02-02-2020 – ஞாயிற்றுக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய ராசி பலன்கள் – 02-02-2020 – ஞாயிற்றுக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

2 years ago
261
  • ராசிபலன்
  • இன்றைய ராசி பலன்கள் – 02-02-2020 – ஞாயிற்றுக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் :
மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வாதத்திறமையால் இலாபம் உண்டாகும். தூர தேச பயணங்களில் சாதகமான சூழல் அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். அந்நியர்களால் தனவிருத்தி உண்டாகும். மனதில் தேவையற்ற சஞ்சல எண்ணங்கள் தோன்றும். அரசாங்க உயர் அதிகாரிகளை சந்திப்பதற்கான சூழல் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : குழப்பம் உண்டாகும்.
——————————————————
ரிஷபம் :
எதிர்பாராத சில உதவிகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சுயதொழில் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.
——————————————————
மிதுனம் :
தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிக பணிகளை மேற்கொள்வதால் கீர்த்தி உண்டாகும். புதியவற்றை கண்டறிவதற்கான முயற்சிகள் அனுகூலமான பலனைத் தரும். வெளியூர் பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் சாதகமான சூழல்கள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
திருவாதிரை : கீர்த்தி உண்டாகும்.
புனர்பூசம் : மேன்மையான நாள்.
——————————————————
கடகம் :
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். செய்யும் பணிகளில் கவனத்துடன் ஈடுபடவும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் சேமிப்பு உயரும். மூத்த சகோதரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : அன்பு அதிகரிக்கும்.
பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.
ஆயில்யம் : சேமிப்பு உயரும்.
——————————————————
சிம்மம் :
தொழில் சம்பந்தமான முயற்சிகள் ஈடேறும். எதிர்பாராத சில வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சங்கீத கலைஞர்கள் தங்கள் திறமைகளால் இலாபம் அடைவார்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகம் : முயற்சிகள் ஈடேறும்.
பூரம் : முன்னேற்றமான நாள்.
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
——————————————————
கன்னி :
பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து அனுசரித்து நடந்து கொள்ளவும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபடுவோர்கள் கவனத்துடன் பேசவும். அந்நியர்களால் ஏற்படும் பிரச்னைகளை பொறுமையுடன் எதிர்கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : வாதத்தை தவிர்க்கவும்.
அஸ்தம் : கவனத்துடன் பேசவும்.
சித்திரை : நிதானம் வேண்டும்.
——————————————————
துலாம் :
புத்திரர்களால் சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். பெரியோர்களின் ஆசிகள் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். விவாதங்களில் சாதகமான சூழல் உண்டாகும். புதிய மனை வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.
சுவாதி : சுபமான நாள்.
விசாகம் : முயற்சிகள் கைகூடும்.
——————————————————
விருச்சிகம் :
பிறரிடம் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். பயணங்களில் கவனம் வேண்டும். மனைகளின் மூலம் இலாபம் மேம்படும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
அனுஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
கேட்டை : கவனம் வேண்டும்.
——————————————————
தனுசு :
இளைய சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளுக்காக பாராட்டப்படுவீர்கள். ஆராய்ச்சி சம்பந்தமான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு காரியத்தடைகள் குறையும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் உண்டாகும். ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். கலை தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : தடைகள் குறையும்.
உத்திராடம் : வாதத்தை தவிர்க்கவும்.
——————————————————
மகரம் :
தொழில் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். வாகனங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தாயின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய முடிவுகள் சாதகமாகும். நீர்வழி தொழிலில் இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்
உத்திராடம் : இலாபகரமான நாள்.
திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் : முடிவுகள் சாதகமாகும்.
——————————————————
கும்பம் :
உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். தந்தையிடம் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட உபாதைகளின் வீரியம் குறையும். தந்தை பற்றிய கவலைகள் தோன்றும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
சதயம் : இன்னல்கள் குறையும்.
பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.
——————————————————
மீனம் :
இளைய உடன்பிறப்புகளால் சுபவிரயம் உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் பொறுமையுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : விரயம் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரேவதி : பொறுமை வேண்டும்.
——————————————————
– ஜோதிடர் அ.மோகன்ராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31