• கதை
  • பாராசூட் பூனை – கன்னிக்கோவில் இராஜா

பாராசூட் பூனை – கன்னிக்கோவில் இராஜா

2 years ago
792
  • கதை
  • பாராசூட் பூனை – கன்னிக்கோவில் இராஜா
“என்னங்க! இந்த வீடு நமக்கு ரொம்ப வசதியா இருக்கு. இங்கேயே தங்கிடலாங்க” என்றது பெண் எலி.
“உன்னோட விருப்பத்துக்கு நான் எப்ப குறுக்கே நின்று இருக்கேன். உன்னோட விருப்பப்படி நாம இங்கேயே தங்கிடலாம்” என்றது ஆண் எலி.
“சரி. சரி. நான் போய் நம்ம பசங்களக் கூட்டிட்டு வந்துடறேன்” என்று சொல்விட்டு வேகமாகச் சென்றது பெண் எலி.
இந்த வீட்டில் மிஸ்ஸி என்ற பூனை வசிப்பது அந்த எலிகளுக்குத் தெரியாது.
மிஸ்ஸி அந்த வீட்டின் செல்லப் பூனை. வீட்டின் எல்லா மூலைகளிலும் தந்திரமாக உலா வரும்.
அந்த அம்மா எலி தனது குஞ்சுகளோடு சமையல் அறைப் புகைபோக்கி வழியாக உள்ளே இறங்கியது.
“வாங்க! வாங்க! இனிமே இதுதான் நம்ம வீடு. இங்கேதான் தங்கப்போறோம்” என்று சொல்லிக் கொண்டே அழைத்து வந்தது அம்மா எலி.
இரண்டு எலிக்குஞ்சுகளுக்கும் வீடு மிகவும் பிடித்திருந்தது.
“ஐ! எவ்ளோ பெரிய வீடு! என்று சொல்லிக் கொண்டே அங்கும் இங்கும் ஓடின. இரண்டே நிமிடத்தில் அங்கிருந்த பாத்திரங்களை உருட்டி விட்டன.
பாத்திரங்கள் உருண்ட சத்ததைக் கேட்ட பூனை உஷாரானாது.
“என்ன இது உள்ளிருந்து பாத்திரம் உருளும் சத்தம் கேட்கிறதே! எல்லோரும் வெளியே போயிருக்கிறார்களே! அப்புறம் எங்க இருந்து வருது இந்தச் சத்தம்” என நினைத்தவாறே சமையல் அறைப் பக்கம் எட்டிப்பார்த்தது.
உள்ளே எலிகளின் அட்டகாசத்தைப் பார்த்ததும் கண்களை அகல விரித்தது.
“ஆ! நாம காவல் காக்குற வீட்ல எலிகளா?” எனக் கோபத்தில் “மியாவ்” எனக் கத்தியது.
பூனையின் கத்தலைக் கேட்ட எலிகளுக்கு என்ன செய்வதெனத் தெரியாமல் அப்படியே நின்றன.
“ஆ! எவ்ளோ பெரிய பூனை” என்ற எலிக்குஞ்சுகளின் அலறலைக் கேட்டு சுயநினைவுக்கு வந்த எலிகள் வேகமாக ஓடின.
பூனையும் எலிகளைத் துரத்திக் கொண்டே பின்னாலேயே ஓடியது.
வேகமாக ஓடிய எலிகள் மாடிப் படிகளில் ஏறி மொட்டை மாடியை அடைந்தன. விடாமல் துரத்திக் கொண்டு வந்த பூனையும் மாடிக்கு வந்தது.
“நன்றாக மாட்டிக் கொண்டீர்களா? இனி நீங்கள் ஓடி ஒளிய இடமே இங்கில்லை” என்று கூறியபடியே மொட்டை மாடியின் விளிம்பில் நடுங்கிக் கொண்டிருந்த எலிக் குடும்பத்தின் மீது பாய்ந்தது. 
“நம்மீது பூனை பாய்கிறதே” என எச்சரிக்கையான எலிகள் உடனே நகர்ந்தன.
இதை எதிர்ப்பாராத பூனை மாடியில் இருந்து கீழே விழுந்தது.
“அச்சச்சோ! அந்தப் பூனை கீழே விழுந்துவிட்டது. அதற்கு என்னாச்சோ” எனப் பயந்தன எலிக்குஞ்சுகள்.
“பூனைக்கு ஒன்றுமே ஆகியிருக்காது. அது ஒரு பறக்கும் அணிலைப் போல மிக பத்திரமாகத் தரை இறங்கி இருக்கும்” என்றது அப்பா எலி.
“என்னது? பத்திரமாக தரை இறங்கி இருக்குமா?” என மீண்டும் ஆச்சரியப்பட்ட எலிக்குஞ்சுகள் மாடியில் இருந்து எட்டிப் பார்த்தன.
அப்பா சொன்னது போலவே மிக பத்திரமாகத் தரையில் இறங்கிய பூனை “மியாவ்…” “மியாவ்..” என்ற எச்சரிக்கை ஒலியை எழுப்பிக் கொண்டே இருந்தது.
“என்ன இது! இவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தும் அந்தப் பூனை எப்படி பிழைத்தது” என்று கேட்டது பெண் எலி.
“அதாவது பூனைகள் உயரத்தில் இருந்து குதிக்கும்போது தன்னுடைய நான்கு கால்களையும் ஒருசேர ஊன்றித் தரையில் இறங்கும். அதனால் அது பெரும்பாலும் பாதிப்பு அடைவதில்லை” என்றது அப்பா எலி.
“அப்பா! எங்களுக்குப் புரியும்படி சொல்லுங்கப்பா” என்றன எலிக்குஞ்சுகள்.
“சரி. கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன். அதாவது பூனைகளோட உடம்புல இயற்கையாகவே மிகச் சிறந்த செவி மூன்றில் (க்ஷிமீstவீதீuறீணீக்ஷீ ஷிஹ்stமீனீ) என்ற அமைப்பு, பூனை தன் உடலை ஒரு இடத்தில் இருந்து வேறொரு திசைக்குத் திரும்பும் (நிஹ்க்ஷீஷீsநீஷீஜீவீநீ tuக்ஷீஸீ) திறனைத் தடுக்கிறது.
அதனால பூனை எந்தத் திசையில் இருந்து குதித்தாலும், உடனே அதோட நாலு கால்களும் தன்னிச்சையாகத் தரையை நோக்கித் திரும்பிடும். 
உயரத்தில் இருந்து குதிப்பதால் ஏற்படும் விசையைத் தன் நான்கு கால்கள் வழியாக ஏற்றுக் கொண்டு அதனால உண்டாகும் தாக்கத்தைப் பூனையால சிதறடிக்க முடியுது. மேலும் அதன் பாதங்கள் பஞ்சுபோல், மிருதுவாக இருப்பதால் அடிப்படாமல் தாங்கிக் கொள்ள முடிகிறது.
“ஓ! என வாயைப் பிளந்தது ஒரு எலிக்குஞ்சு.
“அப்ப மத்த விலங்குகளும் இப்படித்தான் பிழைக்குமா?” என்று கேட்டது பெண் எலி.
“இல்லை. மற்ற விலங்குகளுக்கு இது மிகமிகக் குறைவு. பூனைகள், பறக்கும் அணில்கள் எனச் சில விலங்குகள்தான் இப்படி பிழைக்கின்றன.
“சரிப்பா.. இவ்ளோ பெரிய உடம்மை வெச்சிருக்கிற பூனை, விழும்போது பொத்துன்னு தானே விழும்” என்று கேட்டது ஒரு எலிக்குஞ்சு.
“உயரத்துல இருந்து விழற பூனைகள், பறக்கும் அணிலைப் போல கிடைமட்ட முறையை (பிஷீக்ஷீவீக்ஷ்ஷீஸீtணீறீ) உடனே அனிச்சையாகத் தன் நான்கு கால்களையும் நீட்டிக் கொள்ளும். இப்படி செய்யுறதால அது கீழே விழும்போது தன்னோட விசையை குறைக்குது. அந்த தாக்கத்தைத் தன் உடலில் பெரும்பாலான பகுதிகளில் தாங்கிக் கொள்ள முடியுதுன்னு அறிவியல் அறிஞர்கள் சொல்றாங்க” என்றது அப்பா எலி.
“ஓகோ!” என்றன எலிக்குஞ்சுகள்.
“அது மட்டுமல்ல பூனைங்க கீழே விழும்போது தன் கால்களை விறைப்பாக இல்லாம, வளையும் தன்மையை வைச்சிருக்கிறதால, அந்தத் தாக்கம் அதன் உடலிலுள்ள மிருதுவான தசைகளினால் பரவலாக ஏற்கப்பட்டுக் குறைவுபடுது.
“இந்தக் காரணத்தால உயரத்திலிருந்து பாராசூட் மூலம் குதிக்கும் வீரர்கள் தரையைத் தொடும்போது தம் உடல் தரையில உருண்டு விடாம, தம்மோட முழங்கால்கள் மற்றும் இடுப்புப் பகுதியை வளைத்தபடி தரை இறங்கிப் புவியீர்ப்பு விசையின் தாக்கத்தைப் பரவலாக்கிக் குறைத்துக் கொள்ளப் பயிற்சி பெற்றிருக்காங்க.
“அட! இவ்ளோ விசயம் இந்தப் பூனைக்கிட்ட இருக்கா! அப்ப இதை நாம் ‘பாராசூட் பூனை’ன்னு சொல்லலாம்” என்று சொல்லி சிரித்தது ஒரு எலிக்குஞ்சு.
“சரி. சரி. அந்தப் பாராசூட் பூனை மேலே ஏறி வர்றதுக்குள்ள நாம வேற ஒரு பாதுகாப்பான இடத்திற்குப் போயிடலாம் வாங்க” என்று சொல்லிக் கொண்டே முன்னே நடந்தது அம்மா எலி.
ஸீஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31