• ராசிபலன்
  • இன்றைய ராசி பலன்கள் – 02-02-2020 – சனிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய ராசி பலன்கள் – 02-02-2020 – சனிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

2 years ago
229
  • ராசிபலன்
  • இன்றைய ராசி பலன்கள் – 02-02-2020 – சனிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் :
கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தந்தை, மகனுக்குமான உறவுகள் மேம்படும். தலைமை பதவி கிடைப்பதற்கான சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : அனுகூலம் உண்டாகும்.
பரணி : உறவுகள் மேம்படும்.
கிருத்திகை : சாதகமான நாள்.
———————————–
ரிஷபம் :
தொழில் சம்பந்தமான இடப்பெயர்ச்சி உண்டாகும். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். செய்யும் பணியில் நிதானம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் அமைதியாக நடந்துகொள்ளவும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான கடன் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
கிருத்திகை : மேன்மை உண்டாகும்.
ரோகிணி : நிதானம் வேண்டும்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
———————————–
மிதுனம் :
வெளியூர் தொடர்பான பயணங்களால் இலாபம் உண்டாகும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும். மனக்கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் குறைந்து அன்பு அதிகரிக்கும். உடல் ராக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும்.
திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.
புனர்பூசம் : அன்பு அதிகரிக்கும்.
———————————–
கடகம் :
பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தாய்மாமன் உறவுகள் மேம்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : உறவுகள் மேம்படும்.
ஆயில்யம் : விருப்பங்கள் நிறைவேறும்.
———————————–
சிம்மம் :
தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். பொதுநலத்திற்கான செயல்பாடுகளில் மனம் ஈடுபடும். ஆன்மிக பயணங்களில் ஈடுபாடு உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கூட்டாளிகளின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். மனதில் உள்ள கவலைகளால் ஏற்பட்ட சோர்வு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மகம் : சிக்கல்கள் குறையும்.
பூரம் : அபிவிருத்தி உண்டாகும்.
உத்திரம் : சோர்வு நீங்கும்.
———————————–
கன்னி :
குடும்ப உறுப்பினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். பொருட்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கால்நடைகளால் சில விரய செலவுகள் உண்டாகும் பயணங்களின்போது எச்சரிக்கை வேண்டும். பூர்வீக சொத்துக்களால் தனவிரயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
அஸ்தம் : எச்சரிக்கை வேண்டும்.
சித்திரை : விரயம் உண்டாகும்.
———————————–
துலாம் :
குறுகிய தூர பயணங்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். மனைவியின் மூலம் இலாபம் உண்டாகும். நிறுவனங்களில் சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். கடிதத்தின் மூலம் அனுகூலமான நிலை உண்டாகும். ஆபரணச் சேர்க்கைக்கான செயல்திட்டம் தீட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : மனமகிழ்ச்சி ஏற்படும்.
சுவாதி : அனுகூலமான நாள்.
விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.
———————————–
விருச்சிகம் :
நண்பர்களின் உதவியால் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும். எதிர்வாதத்தால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அமைதியாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். புதிய வேலைவாய்ப்புகள் சாதகமான முடிவைத் தரும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
விசாகம் : மாற்றம் உண்டாகும்.
அனுஷம் : அமைதி வேண்டும்.
கேட்டை : சாதகமான நாள்.
———————————–
தனுசு :
பூர்வீக சொத்துக்கள் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். புத்திரர்களின் ஆதரவால் சேமிப்புகள் உயரும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அனைவரிடத்திலும் உங்களின் மரியாதை உயரும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். எதிர்பாலின மக்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : சிந்தனைகள் மேலோங்கும்.
பூராடம் : மரியாதைகள் உயரும்.
உத்திராடம் : இலாபம் கிடைக்கும்.
———————————–
மகரம் :
தாயின் ஆதரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். திடீர் யோகத்தால் தனவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பிள்ளைகளின் மூலம் சுபவிரயம் உண்டாகும். வெளியூர் தொடர்பான வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். கடல்வழி பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : தனவரவு உண்டாகும்.
அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.
———————————–
கும்பம் :
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். இளைய சகோதரர்களால் சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தலைமைப் பொறுப்பிற்கான முயற்சிகள் சாதகமாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
சதயம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரட்டாதி : மேன்மையான நாள்.
———————————–
மீனம் :
செய்யும் தொழிலால் கீர்த்தி உண்டாகும். குடும்பஉறுப்பினர்களின் ஆதரவால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். சுயதொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். விருந்துகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வாக்குவன்மையால் அனைவரையும் கவர்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.
உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.
ரேவதி : மனமகிழ்ச்சி உண்டாகும்.
———————————–
      – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31