நூதன முறையில் ரூ.5 ஆயிரம் திருட்டு – மருந்தகத்தில்

 நூதன முறையில் ரூ.5 ஆயிரம் திருட்டு – மருந்தகத்தில்
சென்னை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள மருந்தகத்தில் நூதன முறையில் பணத்தை திருடிச் சென்ற நபர்களை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள மருந்தகத்தில் நூதன முறையில் பணத்தை திருடிச் சென்ற நபர்களை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். செம்பருத்தி என்ற பெயரில் இயங்கி சென்னை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள மருந்தகத்தில் நூதன முறையில் பணத்தை திருடிச் சென்ற நபர்களை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
வரும் அந்த மருந்தகத்திற்கு சென்ற இருவர், 10 ரூபாய் கொடுத்து மருந்து ஒன்றை வாங்கினர்.

பின்னர் அவர்களில் ஒருவன் ஐந்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, 10 ஆயிரத்திற்கு சில்லறை வேண்டும் என கேட்டுள்ளான். அதனை வாங்கிக் கொண்ட பெண் ஊழியர் 500 ரூபாய் நோட்டுகளாக பத்தாயிரத்தை கொடுத்துள்ளார்.அதை வாங்கி முழுவதுமாக எண்ணிப் பார்த்த அவன், ஊழியரிடம் நைசாக பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவரது கவனத்தை திசை திருப்பி, அந்த 10 ஆயிரம் ரூபாயில் ஐந்தாயிரம் ரூபாயை லாவகமாக எடுத்து மறைத்து வைத்துக்கொண்டான். பின்னர் தனக்கு 500 ரூபாய் நோட்டுகளாக வேண்டாம் நூறு ரூபாய் தாள்களாக வேண்டும் என்று கூறி மீதமுள்ள 5 ஆயிரம் ரூபாயை மட்டும் கடை ஊழியரிடம் கொடுத்து ஏமாற்றியுள்ளான்.

தன்னிடம் கொடுக்கப்பட்ட பணத்தை பெண் ஊழியர் எண்ணிப் பார்க்கவில்லை எனக்கூறப்படுகிறது. கண்கட்டி வித்தை போல் நடந்த நூதன திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published.