மகிழக் கற்றுக் கொள்

2 years ago
247
எப்போதும் இருட்டுக்குள்
உறங்கும் ஒளியை
உற்சாகமாய் எழுப்பு ! 
கடந்த காலம் எப்போதும்
பழுத்த இலையின்
பரிவட்டங்கள் தான். ..
புதிதான இசைக்குள்
பயணப்பட கைவசம்
ஒரு காற்று மண்டலத்தை கண்டுபிடி!
விழுந்த இடத்தில் 
உனது எழுச்சியின் தடயம்
ஒளிந்திருக்கும் ..
சர்ச்சைகள் தான்
தெளிவான சொற்களைச்
சுட்டுத் தரும்..
நிறமாற்றங்கள்
வானத்தின் வெளிப்படை
ஆரோக்கியம்..
ஆண்டுகள் என்பது
அவசரக் குறிப்பு
அயராமல் கடந்து செல்
விருப்பக் குறியாய்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930