• ராசிபலன்
  • இன்றைய ராசிபலன்கள் – 29.12.2019 – ஞாயிற்றுக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய ராசிபலன்கள் – 29.12.2019 – ஞாயிற்றுக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

2 years ago
137
  • ராசிபலன்
  • இன்றைய ராசிபலன்கள் – 29.12.2019 – ஞாயிற்றுக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் :
அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். வெளியூர் தொழில் தொடர்பான முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அஸ்வினி : தடைகள் அகலும்.
பரணி : எண்ணங்கள் ஈடேறும்.
கிருத்திகை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
—————————————————————————–
ரிஷபம் :
தொழிலில் செல்வாக்கு மற்றும் மேன்மையான சூழல் உண்டாகும். தாய்வழி உறவுகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : மேன்மையான நாள்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும்.
—————————————————————————–
மிதுனம் :
விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். விவாதங்களை தவிர்த்தல் நன்மை பயக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மற்றவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் மற்றும் பதற்றமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : விமர்சனங்களை தவிர்க்கவும்.
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
—————————————————————————–
கடகம் :
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவுகள் சாதகமாக அமையும். பழக்கவழக்கம் தொடர்பான செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : அன்பு அதிகரிக்கும்.
பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
ஆயில்யம் : அனுகூலமான நாள்.
—————————————————————————–
சிம்மம் :
வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலாளர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : முடிவுகள் சாதகமாகும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : அனுபவம் கிடைக்கும்.
—————————————————————————–
கன்னி :
பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். பூர்வீக சொத்துக்களினால் சேமிப்பு அதிகரிக்கும். பொருளாதார மேன்மை உண்டாகும். புதுவிதமான தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
உத்திரம் : புகழ் உண்டாகும்.
அஸ்தம் : சேமிப்பு உயரும்.
சித்திரை : புதிய நட்பு கிடைக்கும்.
—————————————————————————–
துலாம் :
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய சொத்துக்கள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.
சுவாதி : சிந்தனைகள் மேலோங்கும்.
விசாகம் : சாதகமான நாள்.
—————————————————————————–
விருச்சிகம் :
அறச்செயல்களால் கீர்த்தி உண்டாகும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் உதவிகளால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். தந்தையிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். பணியில் உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விசாகம் : கீர்த்தி உண்டாகும்.
அனுஷம் : பொறுமை வேண்டும்.
கேட்டை : முன்னுரிமை கிடைக்கும்.
—————————————————————————–
தனுசு :
எதிர்பார்த்த வங்கிக்கடன் உதவிகள் கிடைக்கும். மனைவியால் சுபவிரயம் ஏற்படும். கூட்டாளிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வாக்குவன்மையால் இலாபம் அடைவீர்கள். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : சுபவிரயம் ஏற்படும்.
பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.
—————————————————————————–
மகரம் :
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். சுபச்செய்திகள் வந்தடையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் இருந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.
அவிட்டம் : அன்பு அதிகரிக்கும்.
—————————————————————————–
கும்பம் :
புதிய வேலை தேடுபவர்க்கு சுபச்செய்திகள் வந்தடையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அருள் தரும் வேள்விகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். பொறுப்புகளால் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
சதயம் : அனுகூலமான நாள்.
பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
—————————————————————————–
மீனம் :
பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். மறுமணத்திற்கான வரன்கள் அமையும். பொருள் சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும். பொதுத்தொண்டின் மூலம் கீர்த்தி உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.
ரேவதி : தீர்வு கிடைக்கும்.
—————————————————————————–
     – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31