இன்றைய முக்கிய செய்திகள்

 இன்றைய முக்கிய செய்திகள்
உத்தர பிரதேசம்: லக்னோவில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 25 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். வாஜ்பாயின் 95வது பிறந்த தினத்தையொட்டி தலைமைச் செயலகமான லோக்பவனில் வெண்கலச்சிலை திறப்பு.

2வது தேசிய நீர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். நீர் சேமிப்பு பற்றி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சிறந்த தொலைக்காட்சிக்கும் விருது வழங்கப்படும்.- முதல்வர் பழனிசாமிக்கு ஜல்சக்திதுறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடிதம்.

தேர்தல் நடைபெறும் நாட்களில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை – தமிழக அரசு.

நாட்டிலேயே நிர்வாக திறனில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பட்டியலில் கர்நாடகாவுக்கு 3வது, கேரளாவுக்கு 8வது, தெலங்கானாவுக்கு 11வது இடம்.

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published.