மந்திரம் என்பது என்ன? – ஒரு முழுமையான ஆய்வு ……

2 years ago
5682
மந்திரம் என்பது  என்ன? உண்மையில்  மந்திரசித்தி பெறுவது எப்படி?  மந்திரங்களை பிரயோகிப்பதில் உள்ள சூக்சுமங்கள். ஒரு முழுமையான ஆய்வு …… மந்திரம் என்றால் என்ன ?

மந்திரம் என்ற சொல் ஆதி சமஸ்க்ருத மொழியில் இருந்து வந்தது. “மந்” என்றால் மனம்; “திர” என்றால் விடுதலை. ஆகவே மந்திரம் என்பது நம் மனதை பல உலகார்ந்த எண்ணங்களில் இருந்து விடுதலையாக்க உருவாக்கப்பட்ட உன்னத ஒலிகளின் ஒரு கூட்டமாகும். மந்திரத்தை மனனம்+திரயதே என்றும் பிரிக்கலாம். மனனம் என்றால் நினைப்பது, ஜெபிப்பது, உச்சரிப்பது எனப் பொருள் கொள்ளலாம். திரயதே என்றால்
காப்பாற்றுதல் என்று பொருள். ஆக ஜெபிப்பவரை அல்லது உச்சரிப்பவரை காப்பாற்றுவது என்று பொருள். மற்றொரு வகையில் “மந்” என்றால் மனம், “திர” என்றால் பிராணன் மனமும் பிராணனும் கலக்க செய்வது மந்திரம் எனப்படும். பிரபஞ்சத்தின் தோற்றம் ஒலியில் இருந்தே
உற்பத்தியாகியது எனக் கூறப்படுகிறது. மந்திரங்கள் பிரபஞ்சத்தில் உள்ள தெய்வ சக்தியின் அதிர்வலை குறியீடுகள், ஒவ்வொரு வகை தெய்வ சக்திக்கும் ஒவ்வொரு அதிர்வலைகள் உண்டு,  எஃப் எம் ரேடியோவில் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் ஒவ்வொரும் “ஃப்ரீக்வன்ஸி” இருப்பது போல் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு தெய்வ சக்திக்கும் ஒவ்வொரு அதிர்வு உண்டு. ஒவ்வொரு சமஸ்க்ருத எழுத்தும் ஒரு தேவதையை (சக்தி நிலையை)
குறிக்கிறது. மந்திரங்களை உச்சரிக்கும் போது அதற்குரிய பிரபஞ்ச அதிர்வலைகள் நவகிரகங்கள் மூலமாக பூமியில் வந்து நமது
சுவாசத்தின் வழியாக சூட்சும உடலில் சேர்ந்து பின் ஸ்தூல உடலில் செயல்படுகிறது.

இந்த பிரபஞ்ச அதிர்வலைகள் ஒருவர் செய்யும் கர்மங்களுக்கு (செயல்) ஏற்ப உடலில் கூடிக்குறையும், இவை அதிகமாக இருக்கும் போது வாழ்வின் நல்ல பகுதிகளான ஆரோக்கியம், அமைதி, ஆனந்தம் செல்வம் என்பன இருக்கும். இந்த அதிர்வலைகளை மனித மனம் ஈர்த்து சேமித்து அதன் மூலம் நன்மை அடைவதற்காக ரிஷிகள் வகுத்து 
வைத்த வழியே மந்திரங்கள். மந்திரம் என்றால் அது சமஸ்க்ருதம் மட்டும் தானா ? என்று சிலர் கேட்கக் கூடும். ஆதி தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் சுருக்கமான ஆனால் ஆழமான பொருள் தரும் சூத்திரத்தினை முன்மொழிகிறது. 

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, 
மறைமொழிதானே மந்திரம் என்ப” (சொல்லதிகாரம், 480). “நிறைமொழி மாந்தர்” என்பதை சைவ சித்தாந்த வார்த்தையில் விளக்குவதானால் சிவத்துடன் இரண்டறக்கலந்தவர்கள், வேதாந்த மொழியில் சொல்வதானால் பிரம்மத்துடன் கலந்தவர்கள். இவர்களே நிறைமொழி மாந்தர் எனப்படுவர். இவர்கள் சொல்லும் மொழி எல்லாம் மந்திரங்கள் எனப்படும். இதன் படி ரிஷிகள்,
சித்தர்களின் வாக்குகள், நாயன்மார்கள் ஆழ்வார்கள் ஆகியோரின் பாடல்கள், ஸ்தோத்திரங்கள் ஆகியவை எல்லாமே மந்திரம் என்று கூறலாம்.

இயற்பியலில் (Physics) ஒலி அலை அதிர்வு 
(resonance) பற்றி நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம். ஒரு பகுதியின் இயற்கை அதிர்வுடன் அதே அளவான? அதிர்வுகள் பரிவுறும் போது சக்தி கடத்தப்படும், இதே கோட்பாடுதான் மந்திர சாதனையிலும் நிகழ்கிறது, ஒரு மந்திரம் பிரபஞ்ச சக்தியின் இயற்கை அதிர்வினை ஒத்து நம் மனதிற்குள் ஒரு அதிர்வினை உருவாக்கி சக்தியினை பெற்றுக்கொள்ளும். மந்திரங்களை உச்சரிக்கும் போதும் அதுதான் நடக்கிறது.  மந்திரங்களை நாம் மூன்று வழி முறைகளில் உச்சரிக்கலாம்.

1)வாசிகம் 

 இது தெளிவான உச்சரிப்புடன் மற்றவர்களுக்கு கேட்கும் படி மந்திரத்தினை கூறுவது, இது வெளிமண்டலத்தில் குறித்த தெய்வசக்தியினை கவரும் முறை, ஆனால் எதிர்தடங்கல்கள் அதிகம், இதனால் ஜெபிப்பவர் பெறும் சக்தி குறைவு, ஆனால் சரியான சூழலில் தெய்வ சக்தியினை விழிப்படையச் செய்யலாம், பொதுவாக கோவில்களில் பிராமணர்கள் பூஜை செய்யும் போது இந்த முறையினையே பின்பற்றுகின்றனர்.

2) மானசீகம் –

 இதில் உதடு அசையாமல் 
மனதிற்குள் ஜெபிக்கும் முறை, மனதின் எண்ண அலைகள் மட்டுமே மந்திர சப்தமாக உருவாகிக்கொண்டிருக்கும். இதில் புற உலகில் தெய்வ சக்தியினை விழிப்பிக்க முடியாது, ஆனால் மானசீகமாக இதனை நாம் செயற்படுத்தலாம்.

3) உபாம்சு – 
இந்த முறையில் உதடுகள் அசையும் ஆனால் அருகில் உள்ளவர்கள் கேட்க முடியாதபடி ஜெபித்தல், சாதகரின் காதில் மட்டும் அவர் ஜெபிப்பது கேட்கும். இது மேற்கூறிய இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் செயல்படுவதாகும், இப்படி மந்திரம் ஜெபிப்பதே சிறந்தது, ஏனென்றால் உபாம்சு முறையில் வாசிக ஜெபத்தில் உடலிற்கு வெளியில் உள்ள தெய்வ சக்தியினையே பரிவின் (resonance) மூலம் விழிப்பிக்க முடியும், மானசீக முறை
மூலம் உடலிற்கு உள்ளே உள்ள தெய்வசக்தியினை மட்டுமே விழிப்பிக்க முடியும். ஆனால் உபாம்சு முறை இரண்டுக்கும் இடைப்பட்டது, இது
அகப்பிரபஞ்சத்திலுள்ள தெய்வ சக்தியினையும் புறபிரபஞ்சத்திலுள்ள தெய்வ சக்தியினையும் ஒரே நேரத்தில் விழிப்பிக்கும் தன்மை உடையது. உபாம்சு முறையில் ஜெபத்தால் அவர்களது அகப்பிரபஞ்சத்திலும் தெய்வசக்தி விழிப்படைந்து முன்னேற்றம் ஏற்படும் அதேவேளை புறப் பிரபஞ்சத்திலும் தெய்வ சக்தி செயற்படும். இதனால் ஜெபிப்பவரும் பயன்பெறுவார், அவரை சுற்றியுள்ளவர்களும் பயன்பெறுவர்.

மேலே குறிப்பிட்டுள்ள எல்லா முறைகளுமே 
சிறந்தவைதான் என்றாலும் ஜெபிப்பவர்களின் நோக்கம் என்ன என்ற அடிப்படையில் நாம் அவற்றை தேர்வு செய்ய வேண்டும், உலக பற்று அனைத்தினையும் துறந்து (ரமணர், இராமகிருஷ்ண பரமஹம்சர் போல்) முக்திமட்டுமே நோக்கம் எனில் மானசீக ஜெபம் சிறந்தது. நாடி வருபவர்களூக்கு காரியம் கைகூடவேண்டும், பயன் பெறவேண்டும், பொதுப்பூஜை செய்கிறோம் என்றால் வாசிக
ஜெப முறை சிறந்தது. உலக கடமைகளையும் செய்துகொண்டு அகத்தில் ஆன்மீக முன்னேற்றத்தினை பெற்று புறத்திலும் நன்மையினை பெற்று போகத்தினையும் யோகத்தினையும் தடையற பெறவேண்டும் என்றால் உபாம்சு முறை சிறந்தது.

மந்திரத்தை உடலாக பாவித்து பார்த்தால் அதன் தலை போன்றது “ஓம்’ என்ற பிரணவம், தலை அல்லது மூளை இல்லாமல் எந்தவொரு செயலும் உடலில் நடைபெறாது என்பது போல் எல்லா மந்திரத்திற்கு முன்னும் ஓம் சேர்க்க வேண்டும். பிரணவத்தை குறித்தும் அதன் மகத்துவத்தை குறித்தும் விரிவாக பிறகு எழுதுகிறேன்.  
ஓங்காரத்தை தொடர்ந்து அந்த மந்திரத்திற்குரிய தேவதை ஸ்ரீ என்பதுடன் தொடங்கும், உதாரணமாக ஓம் கணபதி…. என்றவாறு, இருக்கும். அத்துடன் சில சக்தியலைகளை ஈர்க்க பீஜட்சரங்களும் சேர்ந்து வரும். மந்திரத்தின் கடைசிப்பகுதி பல்லவம் எனப்படும், அதாவது முடிவுப்பகுதி, இந்த பகுதி ஏழு வகைப்படும்.

1)நமஹ :

“ந என்றால் இல்லை என்று பொருள்.
ம என்றால் நான் என்பதாகும். நமஹ என்பது”

“நான் இல்லை” என்று பொருள்படும். அதாவது அனைத்துமே வணங்கப்படும் அந்த தெய்வ சக்திக்கே அர்ப்பணம் என்றும் நான் என்று எதுவும் இல்லை என்பதாகும். இந்த வகையில் நாம் மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என்கிற நான்கையும் வணங்கும் தெய்வ சக்தியுடன் ன்றாக்குகிறோம்., நாம் நமஹ எனும் போது நம் மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தம் ஆகியவை விழிப்படைந்து அந்த குறிப்பிட்ட
தெய்வ சக்தியினை ஈர்த்து அதுவாகவே ஆகிறது. உதாரணத்திற்கு “ஓம் கணேசாய நமஹ” என்றால் கணேசரின் சக்தி மேற்சொன்ன நான்கிலும் மெல்ல மெல்ல பதியத்தொடங்கும்.

2)ஸ்வாஹ

இது அக்னியிற்கு அர்ப்பணிக்கும் 
மந்திர முடிவு, இதன் மூலம் மந்திர சக்தி அக்னியில் சேர்க்கப்படுகிறது, அதாவது பஞ்ச பூத அக்னி தத்துவத்தில்
மந்திரம் கலந்து பிரபஞ்ச சக்தியினை செயற்படுத்த தொடங்குகிறது. பொதுவாக இப்படியான முடிவுள்ள மந்திரங்கள் ஜெபிக்கும் போது அருகில் விளக்கு, அல்லது ஊதுபத்தி போன்ற அக்னி ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும்.

3)ஸ்வதா : 

ஸ்வாஹா என்பது பிரபஞ்சத்தில் சக்தியினை செயற்படுத்தும் அமைப்பு என்றால், ஸ்வதா என்பது அகப்பிரபஞ்சத்தில் உள்ள சக்தியினை செயற்படுத்தும் மந்திர முடிவாகும். பொதுவாக ஸ்வதா என்ற முடிவுடன் மந்திரத்தினை ஜெபித்து அக்னியில் சேர்க்கும் போது அவரவர் முன்னோர்களுக்கு அந்த தெய்வ சக்தி சேரும்.

4) வஷட் :

தீய சக்தியினை அழிக்கும் தெய்வசக்தியாக மந்திரம் மாறி பயன்தரும்.
5)வௌஷட் :

இது எதிர் சக்திகளை குழப்பி சாதகனிற்கு அமைவாக மாற்றும்.
6)ஹும் :

இது எதிரிகள் மேல் கோபசக்தியினை 
உருவாக்கும்.
7)பட் :

சாதகனுக்கு எதிரான சக்தியினைவிரட்டும்.

இது போலவே ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஏழுபண்புகள் இருக்கும். அவை 
1) அம்மந்திரத்தை வெளிக்கொணர்ந்த ரிஷி,
2) மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் எனும் சந்தஸ், 
3) அந்த மந்திரத்தின் தேவதை, 
4) அதன் மூல சக்தியான பீஜம், 
5) அதன் சக்தி, 
6) இனைக்கும் பகுதியான கீலகம், 
7) நம் உடலின் பகுதிகளை ஒழுங்குபடுத்தும் நியாசம் ஆகியன.

மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் 
ஒரு முக்கிய சாதனமாகும். பெரும்பாலான மந்திரங்கள் தெய்வ வழிபாட்டிற்குரியன ஆகும். சில மந்திரங்கள் நோயைக் கட்டுப்படுத்தவும், சில துஸ்ட மிருகங்களை அடக்கவும், சில பகையை வெல்லவும் பயன்படும். நமது சித்தர்கள் இவற்றை
மானிடர்களின் நலனைக் கருதியே வெளிப்படையாக வெளியிட்டனர். ஆனால் பிற்காலத்தில் மனிதன் தனது சுய லாபத்திற்காக மனிதர்களைக் கொல்லுவும்.

அவர்களை சீரழிக்கவும் அதனை பிரயோகிக்க கற்றுக் கொண்டான். இதனாலேயே மாந்திரிகம் என்றாலே மக்கள் மத்தியில் ஒருவித பயமும், அதன் மீது ஒரு வெறுப்பும் ஏற்பட்டுள்ளது. 
மந்திரம் என்பது ஒருவகை சக்தியாகும். ஒலி வடிவிலானது. ஒலியலைகளைக் கொண்டு செயலாற்றும் தன்மையுடையது. மனதில் நினைத்ததை நினைத்தபடியே செயலாற்ற வைக்கும் சக்தி கொண்டது. அந்த சக்தியை எத்தகைய செயலையும் செய்து சாதிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளமுடியும். இதனைக் கொண்டு சாதிக்க முடியாது மிக மிக அரிது என்றே சொல்லலாம்.

மனித எண்ணத்தினது சக்தி மற்ற எல்லா 
சக்திகளையும் விட வலிமையானது வேகமும் அதிகமானது என்று தற்கால விஞ்ஞானம் ஒப்புக் கொண்டுள்ளது. ஒலியைவிட விரைவானதும் சக்தி வாய்ந்ததும் சிந்தனா சக்தி எனப்படும் மனோசக்தி ஆகும். இந்த சக்தியை எளிதில் தோற்றுவிக்க உதவுதே மந்திரங்களாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிவது, எண்ணங்களை ஈடேறச் செய்வது, ஹிப்னோடிசம், மெஸ்மரிசம் செய்வது போன்ற அனைத்திற்கும் மூலமே மந்திரங்களும் அவற்றின் சக்தியுமேயாகும். இந்த மந்திரங்களை பயன் படுத்தும் கருவியா யந்திரங்கள் செயல்படுகின்றன. இந்த வழிமுறைகள் தொன்று தொட்டு நமது தேசத்தில் பயன்பட்டு வந்துள்து. மந்திர சாஸ்திரத்தை முறைப்படி அறிந்தவர் மிகச்சிலரே. இந்த சாத்திரம் அறிவியலானது. 

இதனை தவறான வழியில் பயன் 
படுத்தாமலும், தீய செயல்களிற்கு பிரயோகப்படுத்தமலும் இருப்பதற்காகவே இதனை முழுமையாக யாரும் அடுத்தவரிற்கு கற்றுத் தருவதில்லை. மந்திர சாத்திரத்தினை ஒரு மந்திர சாத்திரம் முழுமையாக கற்றறிந்த குருவிடத்தே கற்றுக் கொள்ள முடியும். குருவில்லாமல் கற்றுக் கொள்ளும் எதுவும் சிறப்பினைத் தராது. மந்திர சாத்திரத்திற்கு முக்கியமானது எழுத்துக்களும் அவற்றிற்கான ஒலி அலைகளுமே ஆகும். இப்படி எழுத்துக்களை கொண்டு செயலாற்றும் மந்திரங்களை “வர்ணாத்ம சப்தம்” என வழங்குவர். வெறும்
ஒலியலைகளை மட்டும் கொண்டும் மந்திரங்களை செயலாற்றச் செய்ய முடியும். 

இந்த வகை மந்திரங்களை “துவனியாத்ம 
சப்தம்” என வழங்குவர். பஞ்ச பூதங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஆகாயத்திலிருந்தே மற்றய நான்கு பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று தோன்றியதாக கருதப்படுகிறது. மந்திர ஒலியானது பஞ்ச பூதங்களிலும் பாயக் கூடியது. நாம் எழுப்பும் மந்திர ஒலியானது காற்றில் கலந்து, ஆகாயத்தில் பரவி மற்றய பூதங்களையும் தாக்கி செயல்படுகிறது. 

மந்திரங்களில் பயன்படும் எழுத்துக்கள் 
உயிர்ப்பு சக்தி கொண்டவை ஆகும். மந்திரங்களில் பயன் படும் ஒவ்வோர் எழுத்திற்கும். ஒலிக்கும் வலிமையும், அந்த ஒலிக்கேற்ற அதிரும் வலிமையும் கொண்டவை. பௌதீக விஞ்ஞானத்தில் ஒரு பொருள் தனது அதிர்வெண்ணிற்கு சமனான அதிர்வெண்ணில்; அருகில் உள்ள ஒரு பொருள் அதிர்ந்தால் தானாகவே இந்த பொருள் அதிரும் என்று நிருபிக்கப்பட்டுள்து. அந்த தத்துவமே மந்திரங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது நமது அண்டம் (ஆகாயம்) பலதரப்பட்ட சக்திகளால் நிறைந்தது என்பது விஞ்ஞானம் ஏற்றுக் கொண்ட உண்மை. இந்த அண்டத்திலிருக்கும் சக்திகளானது நாம் மந்திரங்களை உரிய அதிர்வுடன் ஜெபிக்கும் போது பாதிக்கப்படுகின்றன. நாம் ஜெபிக்கும் மந்திரத்தின் அதிர்விற்கு சமனான அதிர்வு கொண்ட சக்தி பாதிக்கப்பட்டு என்ன நோக்கத்திற்கு நாம் மந்திரம் ஜெபிக்கிறோமோ அந்த செயலைச் செய்கிறது.

மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை 
யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்த முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால், நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெற முடியும். சக்தி எற்றப்பட்ட யந்திரங்களின் வலிமையினால் சகல செயல்களையும் செய்ய முடியும். அப்படிப்பட்ட செயல்களில் நல்லவை, கெட்டவை இரண்டுமேயுண்டு. சொல்லப்போனால் மந்திரம் என்பது ஒரு வகை சக்தியாகும். நெருப்பு என்ற சக்தி எப்படி தீபமாக இருந்து ஒளியைக் கொடுத்து நமக்கு நல்ல செயல்களைச் செய்கிறதோ அதோ போல் மந்திரங்களும் நல்லவற்றை செய்ய வல்லன.

அதே நெருப்பு ஒரு வீட்டினை கொளுத்தும் 
போது எப்படி தீய செயலை செய்கிறதோ மந்திரங்களும் அதே போல் தீய செயல்களையும் செய்ய வல்லன. நெருப்பினைக் கொண்டு தீபத்தினை ஏற்றுவதா அல்லது வீட்டினைக் கொளுத்துவதா என்பதினை தீர்மானிப்பது நெருப்பு அல்ல மனிதர்களாகிய நாம் தான். அதே போலத் தான் மந்திரங்களையும் நல்ல காரியத்திற்கு நாம் பயன்படுத்தினால் அது நன்மையையும் தீய காரியத்திற்கு பயன்படுத்தினால் அது தீமையையும் தர வல்லது. 

மாந்திரீக சக்தி மூலம் நாம் 
1. வசியம் 
2.மோகனம் 
3. ஆகர்சணம் 
4. தம்பனம் 
5. பேதனம்
6. வித்வேசணம் 
7. உச்சாடனம் 
8. மாரணம்
என்ற எட்டு வித (அஸ்டகர்மம்.) செயல்களையும் செய்யலாம். அஸ்டகர்மத்தில் உள்ள ஒவ்வொரு செயலிற்கும் மந்திரங்கள், பூசை முறைகள், அமரும் இருக்கை,பூசைக்குரிய மலர்கள், ஜெபத்திற்குரிய மலர்கள், ஜெபத்திற்குரிய மணிகள்(மாலைகள்), யந்திரம் அமைப்பதற்குரிய தகட்டின் உலோகம் போன்றன தனித்தனியே அமையும். யந்திரங்களில் பதிவு செய்த சக்தியானது குறிப்பிட்ட காலம்வரைதான் நிலைத்திருக்கும்.

இந்த கால அளவானது அதில் பதிவாகியுள்ள 
உச்சாடனத்தின் அளவு, உருக் கொடுத்த முறை, உருக் கொடுத்த மாந்திரீகனின் மன ஒருமைப்பாடு, யந்திரம் எழுதிய உலோகத் தகட்டின் அளவு, சித்தியான பின்பு அதனை வணங்கும் முறையைப் பொறுத்து அமையும். கோயில்களில் இருக்கும் சக்தியானது மூலவரிற்கு கீழே வைக்கப்படும் யந்திரத்தகட்டினாலேயே உண்டாகிறது. இந்த தகடு யாகங்கள் மூலம் உரு கொடுக்கப்படுகிறது. அத்துடன் நித்திய ப+சைகள் முறைப்படி செய்யப்படுகின்றன. இதன் கால அளவு 12 வருடகாலங்கள். அதனாற்தான் 12 வருடத்திற்கு ஒரு முறை
கும்பாவிசேகம் செய்யப்பட்டு யந்திரத்தகடுகள் புதிப்பிக்கப்படுகின்றன. மந்திரங்கள் அந்தந்த மந்திரங்களை ஜெபிப்பவனை காக்கும். ஒரு செயலை நினைத்து அந்த செயலிற்குரிய மந்திரத்தை முறைப்படி குரு முகமாக தீட்சை பெற்று முறைப்படி ஜெபித்து வந்தால் அந்த காரியம்
நினைத்தபடி சித்தியாகும்.

மந்திரம் என்பது ….. அதன் செய்முறைதான் மாந்திரீகமாகும். தேவதைகளிற்குரிய மந்திரங்களை குரு முகமாக தீட்சை பெற்று அதற்குரிய

நியமத்துடன் ஜெபித்து வந்தால் அந்த தேவதைகள் நேரில் பிரத்தியட்சமாகி மந்திர
ஜெபம் செய்பவரிற்கு சகல சித்திகளையும்
அருளும். மந்திரங்கள் ஏழு கோடி எனக்
கூறுவர். அவை பீஜம், பிரணவம், கீலகம்,
ரஷ~p என பல வகைப்படும். மகா
மந்திரங்களை மந்திரமுணர்ந்த
குருவிடமிருந்து தீட்சை மூலமாகவே தெரிந்து
கற்றுக் கொள்ள வேண்டும். 
அவற்றுள் முக்கியமான சாந்த மந்திரங்கள் பஞ்சாட்சரி, தூல பஞ்சாட்சரி, சடாட்சரி, ஏகாட்சரி, பஞ்சபிரம்மம், மாலா, சூடாமணி, சிந்தாமணி, திரிபுரசுந்தரி, அன்னபூரணி, மிருத்யுஞ்சு ஜெயம், தட்சிணாமூர்த்தி, கணேசர், விஷ்ணு, ருத்திரன் போன்றன. மந்திரங்களை மந்திர நிகண்டு, கொங்கணவர் நடு படைக் காண்டம், திருமந்திரம், அகத்தியர் மாந்திரீக காவியம் மற்றும் பல சித்தர்களின் நூல்களில் தெளிவாக காணலாம்.

ரிஷி அனுஸ்டானம் இல்லாத மந்திரம் 
ஆயுளைக் கெடுக்கும். தவறான உச்சரிப்பு, தவறான ஒலி வியாதியைக் கொடுக்கும். தேவாதீனமான மந்திரங்கள் செல்வத்தை அழிக்கும். ஆயுதம், வஸ்திரமின்றி செய்யப்படும் மந்திரங்கள் புத்திர, பந்துக்ளை நாசம் செய்யும். முறைப்படி தெரிந்து
முறைப்படி ஜெபிக்கப்படும் மந்திரங்களே சகல நன்மைகளையும் இம்மைக்கும், மறுமைக்கும் தரும். உலகம் தோன்றுவதற்கு ஆதாரமாய் இருந்தவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களாகும். ஆகாயத்திலிருந்து ஒலியும், ஒளியும் தேன்றின. அண்டமெல்லாம் வியாபித்திருக்கும் உயிர்க் காற்றினால் உயிரினங்கள் எல்லாம் உயிர் வாழ்கின்றன.

இந்தக் காற்றே மனித உடலில் தச (பத்து) 
வாயுக்களாகி சகல வித தொழிலையும் செயகின்றன. இந்த தச வாயுக்களின் அசைவுதான் மனமாகும். மனம் சலனமுள்ளது. நிலையற்று இயங்குவது. அப்படிப்பட்ட மனதை அசைவற்று, சலனமற்று இருக்க என்ன செய்வது என்ற சிந்தனையின் வெளிப்பாடே மநதிரம் ஆகும். மனதை ஒருமுகப்படுத்தி ஒரு நிலைப்படுத்த மந்திரம் மிக மிக சிறப்பான வழியாகும். மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே (அகத்தியர்) மனதை செம்மைப்படுத்த மந்திரம் அவசியம் என்பதனை அகத்தியர் இவ்வாறு
வலியுறுத்தியுள்ளார்.

பஞ்சாட்சர மந்திரம் என்பது பஞ்ச 
பூதங்களையும் கட்டுப்படுத்தும் மந்திரமாகும். ஒவ்வொரு பூதத்திற்கும் எழுத்து, வரிவடிவம் உள்ளது. அதாவது
ந –ம
– சி – வ – ய என்ற எழுத்துகளாகவும், வட்டம், ஐங்கோணம், அறுகோணம், சதுரம், முக்கோணம் போன்ற வரிவடிவங்களாயும் உள்ளன. இவை அவற்றிற்குரிய உலோகங்களில் அவற்றிற்குரிய இடத்தினைப் பெறும் போது பஞ்சாட்சர யந்திரம் ஆகிறது உலோகங்கள் பண்டைய கால கருத்துப்படி இரும்பு, செம்பு, வெள்ளி, தங்கம், வங்கம், துறா, வெண்கலம், ஈயம், நாகம் என்ற 9 உம் ஆகும். இந்த உலோகங்களில் தகடுகள் செய்து அவற்றில் மந்திர உயிர் எழுத்துக்களை, வடிவங்களை அவற்றிறகுரிய இடங்களில் எழுத வேண்டும்குறிக்கப்பட்ட மந்திரங்களிற்கு குறிப்பிட்ட
உலோக தகட்டினயே உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதியுள்ளது. இப்படி செய்தால்தான் மந்திரம் சரியான முறையில் வேலை செய்யும்.

மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியை 
யந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்து முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால், நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெற முடியும்.  மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு சாதனமாகும். மந்திரங்கள் நம் எண்ணங்களை வலுப்படுத்தி, ஆற்றலை வளர்த்து, மனச் சஞ்சலத்தைக் குறைத்து, 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31