• ராசிபலன்
  • வாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு

வாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு

2 years ago
7783
  • ராசிபலன்
  • வாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு
வாஸ்து வீடு  நுழைவாயில் பூஜையறை கதவு நுழைவாயில் கழிவறை எங்கு இருக்க வேண்டும்?
முற்காலத்திலிருந்து நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே , ‘ வாஸ்து ‘  என்பதாகும். இது பஞ்ச பூதங்களையும், திசைகளையும் அடிப்படையாகக்கொண்டது. இந்த வாஸ்து சாஸ்திரத்தை முறையாகக் கடைப் பிடித்து கட்டப்படும் வீட்டிலோ  அல்லது அந்த மனையிலோ  வசிப்பவர்கள், எல்லா வளங்களையும் பெற்று வாழ்வார்கள்.  இப்போது ஒரு வீட்டுக்கு கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து விதிமுறைகளைப் பற்றிக் காணலாம்.
வீட்டின் கதவுகளும் நுழைவாயிலும்:
1. வீட்டின் பிரதான நுழைவாசலில் அமையும் மெயின் கதவு,  வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளை நோக்கி  அமைந்திருக்கவேண்டும். இந்த மெயின் வாசல்  நுழைவாயில் கதவு, வீட்டின் ஏனைய கதவுகளைவிட  அளவில் சற்றுப் பெரியதாக இருக்கவேண்டும். வீட்டின் பிரதான நுழைவாயில்  வீட்டின் பின்பக்க வாசலை நோக்கியபடி எதிரும் புதிருமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், வீட்டின் ‘ சக்தி ‘  (எனெர்ஜி )யானது  பின்வாசல் வழியாக வெளியேறிவிடும். வீட்டுக்குள் சுழன்று நற்பயன் விளைவிக்கக்கூடிய நல்ல சக்தி வெளியேறி விடுவது வீட்டுக்கு நல்லதல்ல. எனவே பிரதான வாசல் கதவுக்கு நேரெதிராக பின் வாசல் கதவு இருக்கும்படி அமைக்கக்கூடாது.
2. உங்கள் வீட்டு பிரதான வாசலுக்கு எதிராக மரமோ, கிணறோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அதுவும் உங்கள் வீட்டுக்குள் ‘ சக்தி ‘ ( எனெர்ஜி ) யை நுழைய விடாமல், தடுக்கும்.
3. வாசல் கதவுகள் உள்புறமாக திறப்பதுபோல் அமையவேண்டும். வெளிப்பக்கமாக திறக்கும்படி அமைக்கக்கூடாது.
4. கதவின் அகலம் கதவின் உயரத்தில் பாதியளவு இருக்கவேண்டும்.
5. பிரதான வாயில் கதவு நல்ல , உயர்வகை மரத்தாலானதாக இருக்கவேண்டும். அதோடு, மற்ற கதவுகளை விட இந்த மெயின் டோர் சற்றுப் பெரியதாகவும் இருக்கவேண்டும். நல்லவேலைப்பாட்டுடனும், நல்ல டிஸைனுடனும் இருக்கவேண்டும்.
மிக அழகாகப் பெயிண்டிங் செய்யப்பட்டு மற்ற கதவுகளை விட பளிச்சென்று இருக்கவேண்டும்.
6. . வாசல் கதவு, மற்றுமுள்ள கதவுகள், கன்னல் கதவுகள் முதலியவற்றைத் திறக்கும்போது, சத்தம் எழுப்பக்கூடாது. குறிப்பாக பிரதான வாயில் கதவில் இந்த சத்தம் அறவே வரக்கூடாது. அப்படி நேருமாயின்,  வீட்டில் வசிப்பவர்களுக்கு கேடு விளையும்.
ஜன்னல்கள்:
1. எல்லா ஜன்னல்களும், வெளிப்புறச் சுவரில் அமைந்திருக்கவேண்டும்.  ரூம்களுக்குள் ஜன்னல் கதவுகள் திறக்கும்படி இருக்கக்கூடாது.
2.  பெரிய ஜன்னல்களை வடகிழக்கு திசையிலும், சிறிய ஜன்னல்களை தென்மேற்கிலும் வரும்படி அமைக்கவேண்டும்.
3. மொத்த ஜன்னல்களைக் கூட்டினால், அது இரட்டைப் படையில் வரவேண்டும்.
4. ஜன்னல்களிலும் கதவுகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் சன்ஷேடுகள் வடகிழக்கு திசையை நோக்கியபடி இருக்கவேண்டும். அப்படி அமைத்தால்தான் மழைத் தண்ணீர் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசையை நோக்கி ஊடுவதற்கு ஏதுவாகும். இதுவே விட்டுக்கு நற்பலன்களை நல்கும்.
5. வடக்கிலும், கிழக்கிலும் அதிக ஜன்னல்கள் வரும்படி அமைக்கவேண்டும்.

படுக்கையறை:
நாள் முழுதும் உழைத்த மனிதன் இரவில் ஓய்வெடுத்துக்கொள்ளவும், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நாடுவது படுக்கையறையைத்தான். எனவே படுக்கையறையை சரியாக வாஸ்து முறைப்படி அமைத்துக்கொள்ளவேண்டும்.
1. படுக்கை அறையின் தென்மேற்கில் இருக்கவேண்டும். ஆனால், ஒரேயடியாக தென்மேற்கு மூலைக்குப் போய்விடக்கூடாது.
2. படுக்கும்போது முகம் தெற்கு நோக்கி இருக்கும்படி உறங்கவேண்டும். அது நல்ல உறக்கத்திற்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும்.  ஒருபோதும், முகம் வடக்கு நோக்கி இருக்கும்படி படுத்துறங்கவேண்டாம். ஏனென்றால் இறந்தவரின் உடலகளை வடக்கு நோக்கி வைப்பதுண்டு.  வடக்கு நோக்கி உறங்குவதால், மனநலம் பாதிப்படைவதோடு, ஆயுளும் குறையும்.
3. படுக்கையறையில் வெளிச்சம் மிதமாகவும், கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும்.  எனவே விளக்குகளையோ, டேபிள் லேம்புகளையோ அமைக்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சமோ, நிழலோ மனதிற்கு இதமளிப்பதாக இருக்கவேண்டும்.
4. மாஸ்டர் பெட் ரூம், வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கும்படி அமைக்கவேண்டும்.
5. படுக்கையை உத்தரத்துக்குக் (பீம்) கீழ்  வரும்படி போடக்கூடாது. ஒருவர் உத்திரத்துக்குக் கீழ் வரும்படி படுத்து உறங்கினால், ஆரோக்கியக்கேடு உண்டாகும்.
.6. படுக்கையறையில் கடவுள் சிலைகளை வைக்கக்கூடாது. இயற்கைக்காட்சிகள், மலர்கள், குழந்தைகள், மற்றும், கோவிலகள் முதலான பெயிண்டிங்குகளை மாட்டி வைக்கலாம்.  வடகிழக்கு மூலையில் கட்டாயமாக, எடை அதிகமுள்ள சிலைகளை வைக்கக்கூடாது.
7. படுக்கையறையில் மீன் தொட்டியை வைக்கக்கூடாது.
சமையலறை:
நல்லசமையறையை அமைக்கவேண்டுமானால், அதை தென்கிழக்கில் இருக்கும்படி அமைக்கவேண்டும். ஏனென்றால்,  தென்கிழக்கைத்தான் அக்னி மூலை என்று கூறுவார்கள்.  அங்குதான் அக்னிதேவன் வாழ்வதாக ஐதீகம். எனவே சமையலறையை தென்கிழக்கில் அமைப்பது சாலச் சிறந்தது.
1. ஒருபோதும் சமையலறையை வடகிழக்கில் அமைக்க வேண்டாம். இது முடும்ப அமைதியையும், செல்வச் செழிப்பையும்  அழித்துவிடும். குடும்பதினரிடையே நிலவிய நேசமும் காணாமல் போகும்.
2, அதுபோல சமையலறை தென்மேற்கில் இருக்கும்படியும் அமையக்கூடாது. அப்படி அமைந்தால், அது குடும்பத் தலைவரைப் பாதிக்கும்.
3.. சமையலறையிலிருந்து வரும் கழிவு நீர்க் குழாய்கள், வடக்கு, கிழக்கு திசைகளில் விழும்படி அமைக்கவேண்டும்.
4.  டாய்லெட்டோ, பூஜையறையோ சமையலற்க்குப் பக்கத்தில் வரும்படி அமைக்ககூடாது.
5.  சமைக்கும்போது  வடக்கு அல்லது கிழக்கு நோக்கி  இருந்தபடி சமைக்கவேண்டும்.
பூஜையறை:

1. வீட்டின் பூஜையறை வீட்டின் வடகிழக்கு  அறையிலோ அல்லது வடகிழக்கு மூலையிலோ வரும்படி அமைக்கவேண்டும்.  கோவிலாக அமைக்கவேண்டுமானாலும் வட கிழக்கு திசையில் அமைக்கவேண்டும்.
2. பூஜையறையை படுக்கயறைக்குள் வரும்படி அமைக்கக்கூடாது.
3. பூஜையறையை பேஸ்மெண்டில் அமைக்கக்கூடாது.
4. பூஜையறையை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஸ்டோர் ரூம் போல  வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது.
5. பூஜையறைக்குப் பக்கத்திலோ அல்லது மேலோ , கீழோ டாய்லெட்டுகள் இருக்கக்கூடாது.
6. இறந்தவர்களின் ஃபோட்டோக்களை பூஜையறையில் வைக்கவேண்டாம்.
7. ஸ்வாமி மேற்குப் பார்த்தபடியும்,  வணங்கி, பூஜிப்பவரின் முகம் கிழக்கு நோக்கியும் இருப்பது  வாஸ்துப்படி சிறப்பானது.
8. அதிக எடையிலான சிலைகளை வைப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக தெய்வங்களின் படங்களை வைத்துப் பூஜிக்கலாம்.
9. பழைய புராதனக் கோவில்களிலிருந்து அபகரித்து வரப்பட்ட சிலைகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைக்கவேண்டாம்.
10, பூஜையறைச் சுவரை ஒட்டினாற்போல், சுவாமி சிலைகளை வைக்கக்கூடாது. சுவற்றில் மாடமிட்டும் வைக்கக்கூடாது.   சுவற்றை விட்டு சற்றுத் தள்ளி வைக்கவேண்டும்.
கழிவறைகள்:
1. வடமேற்கிலும், வடக்கிலும்  குளியலறை மற்றும் அட்டேச்சுடு டாய்லெட்டுகள் அமைக்கலாம்.
2. டாய்லெட்டில் கம்மோடை தெற்கு- வடக்காக அமைக்கவேண்டும்.
3. ஒருபோதும் டாய்லெட்டை வடாகிழக்கில் அமைக்கவேண்டாம். ஏனென்றால் வடகிழக்கு செல்வம் வளரும் இடமாகும்.
4. கழிவறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை பதிக்கவேண்டுமானால், அதனை வடக்கு மற்றும் கிழ்க்கு சுவற்றில் இருக்கும்படி அமைக்கலாம்.
5. பாத்ரூம் டைல்ஸ் இள வண்ணங்களில் இருக்கட்டும். கருப்பு கலரைத் தவிர்க்கவும்.
குளியலறை
1. டாய்லெட்டின் தரை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஸ்லோப்பாக இருக்கவேண்டும்.

1 thought on “வாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு

  1. ஐயா,
    நான் எனது விவசாய நிலத்தில் வீடுகட்ட நினைக்கிறேன்.இடம் மற்றும் 1000-1200 சதுர அடியில் வடக்கு வாசல் வரைபடங்கள் கொடுத்து உதவுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31