முக்கிய செய்திகள்

2 years ago
131

அரசு பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலணிகளுக்கு பதில் ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.

பள்ளிகளில் ஏப்ரல் 14ம் தேதி
அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாட கல்வித்துறை உத்தரவு. நவம்பர் 26ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை, 6 மாதங்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை கொண்டாடவும் கல்வித்துறை உத்தரவு.

மண்டபம் அகதிகள் முகாம் சிறப்பு
அதிகாரியாக இருந்த டிஜிபி அசுதோஷ் சுக்லா, புதிதாக உருவாக்கப்பட்ட சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழல் கண்காணிப்பு முதன்மை டிஜிபியாக நியமனம்.

காஷ்மீர் அனந்த்நாக் பகுதியில்
, 25 கிலோ வெடிப்பொருட்களை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. புல்வாமா போன்ற தாக்குதல் நடத்த இருந்த பயங்கரவாதிகளின் சதி முறியடிப்பு.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்
போட்டியில் இதுவரை 3 தங்கங்களை வென்றுள்ளது இந்தியா.

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக, 75 மரங்களை வெட்ட இடைக்கால தடை. மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு. மருத்துவமனை நிர்வாகம், பொதுப்பணித்துறை பதிலளிக்க நோட்டீஸ்.

2021ம் ஆண்டு தேர்தலில்
தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள் – சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு. கமலுடன் கூட்டணி அமைத்தால் யாருக்கு அதிகாரம் என்ற கேள்விக்கு ரஜினி பதில்.

2021ம் ஆண்டிலும்
அதிமுக ஆட்சி தொடரும் என்பதைத்தான் அதிசயம் நிகழும் என ரஜினி கூறியிருப்பார். ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவர் குறித்து கருத்து கூற முடியும். எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறினார் என தெரியவில்லை – முதலமைச்சர் பழனிசாமி.

50 டி.எஸ்.பி.,க்கள்
இடமாற்றம்! தமிழகம் முழுவதும் 50 டி.எஸ்.பி.,க்களை இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

சிலை கடத்தல்
தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் மனு..நவ.30ம் தேதியுடன் முடியும் தனது பதவிக்காலத்தை நீடிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல். கடந்த ஓராண்டாக அரசு ஒத்துழைக்கவில்லை என மனுவில் பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு.

தோட்டக்கலை உதவி இயக்குனர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

நாகை, திருவாரூர் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் 33வது மாவட்டமாக உதயமானது தென்காசி! தென்காசி மாவட்டத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31